Pages

Thursday, February 12, 2015

நான் பலரிடமும் கேட்டுபார்த்தேன்...!

ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம், நான் பலரிடம் கேட்டுபார்த்தேன் "தெரியல" என சொன்னாங்க, சம்பந்தபட்ட  நபரிடமும் கேட்டுபார்த்தேன். அவங்களும் தெரியல என்றுதான் சொன்னாங்க, அது எனக்கு கிண்டாலகதான்பட்டது. அது என்ன அப்படி ஒரு கேள்வின்னா.. முக்கிய சில சாதியில இருக்கிரவங்க நெற்றில நாபம் போட்டுருக்காங்களே, அது எதுக்கு.? இந்த கேள்வியதான் அவங்ககிட்ட நான் கேட்டேன். மீண்டும் இதை எனக்கு தெரிந்த ஒரு ஐயரிடம் கேட்டேன் அவரு சொன்னாரு, "அட அபிஷ்ட்டு அது பெருமாளுடைய பாதம்டா.." என்றார். எனக்கு ஒரு சந்தேகம் ஐயரே, "அப்போ பெருமாளுக்கும் நாமம் போட்டுருக்காங்களே அது யாருடைய பாதம்..." என்றேன். அவருக்கு வந்தது பாருங்க கோவம், அவரு கோமனம் கழுலாததுதான் பாக்கி, மத்தது எல்லாம் அவரு உடம்புல ஆட ஆரம்பித்தது. உடனே நான் அங்கிருந்து எஸ்கேப் ஆகிட்டேன்.

"நெற்றில பத்து போட சொன்னா பதினோன்னு போட்டான் இந்த மாபாதகன்" என்று ஒரு படத்துல நடிகர் வடிவேல ஒரு ஆயா திட்டும். ஆனா, இந்த பதினொன்று அல்லது பெருமாள் பாதம் என்று சொல்கிற நாமத்த யார் கண்டுபிடிச்சா.? யார் அதை நெற்றில இட்டு புழக்கத்துல விட்டது.? என்று ஆராய்ந்தா... இது ஒரு வேதகால அகத்தின் குறியீடு. இதன் பழைய மறைபொருள் சீன தேசத்துடையது. பன்டைய சீனாவில் லாவோட்சு என்ற ஞானி வாழ்ந்தார். அவர், இந்தியாவில் புத்தர் வாழ்வதற்கு முன்னேரே வாழ்ந்தவர். அவர் "தாவோ" என்ற சொல்லை பயன்படுத்தினார். அவர் முதலும், கடைசியுமாக எழுதிய புத்தகம் "தவோ த ஜிங்" அதில் அவர் சொல்லிருப்பார், "இரண்டுக்கும் நடுவில் இருப்பது தாவோ" இந்த தாவோ என்பதை நீங்கள் கடவுள், ஆண்டவன், இறைவன், இயற்கை, பேய், நாய், என்று கூட அழைத்துகொள்ளலாம். என்னடா கடவுளை போய் நாய் என்று சொல்கிறான் என்று நினைகிறிங்களா..! ஒருவிதத்தில் கடவுளும், நாயும் ஒன்ணுதான் எப்படி தெரியுங்களா, கடவுளை நாம் ஆங்கிலத்தில் எப்படி எழுதுவோம் GOD என்று இந்த வார்தையே அப்படியே திருப்பி போடுங்க, இப்போ என்ன வருது, 'DOG'. ஆம், எங்கும் நிறைந்திருப்பவன் இறைவன் என்கிறோம், பின் அவன் ஏன் நாயிலும் இருக்க கூடாது. நாயகவும் இருக்க கூடாது. இருக்கலாம் இல்லையா.?

இயற்கையில் இரண்டு விதி என்றும் மாறதது. எந்த இரண்டு விதியை நாம் மதித்து, புரிந்து நடந்தால் நாம் தாவோ தன்மையில் இருப்போம் அதாவது கடவுள் தன்மையில் இருப்போம்.
தாவோ இரண்டுக்கும் நடுவில் வாசம் செய்கிறது. அந்த இரண்டு எது என்ற ஒரு கேள்வி வரும். அந்த இரண்டிரண்டு இன்பம், துன்பம்; பகம், இரவு; மேடு, பள்ளம்; நல்லது, கெட்டது; வருமை, செழுமை; ஆண், பெண்; சக்தி, சிவன்... இப்படியே உதாரணமாக தாவோவைப்பற்றி கூறலாம். ஒரு ஆணும், பெண்ணும் இணையும்போது ஒரு புதிய உயிர் உண்டாகிறது. ஒரு மின்சார விளக்கு எரியவேண்டும் என்றால் அங்கு நேர் ஆற்றலும், எதிர் ஆற்றலும் வேண்டும் அப்போதே பல்பு பளிச்சென்று எரியும்.இந்த இரண்டு தன்மையைதான் புத்த மதத்தில் ஜென் என்கிறார்கள் ஜென் என்பது இரண்டுக்கும் நடுவில் வாழ்வது. நாம் ஒரு வேலை செய்வோம் அங்கு செயல் இருக்கும் அதனுடன் சேர்ந்து மனமும் இருக்கும் ஆனால் ஜென்னில் தன்மையில் செயல்படும்போது செயல் இருக்கும் ஆனால் செயல்படுவது அதாவது மனம் இருக்காது. மனம் எங்கு இல்லையோ அங்கு கடவுள் வாசம் இருக்கிறது. அதுதான் இயற்கையின் அழகு. இன்றும் ஜப்பானில் இருக்கும் ஒவ்வொரு கலைபடைப்பும் இயற்கையின் அழகு, அங்கு செய்யும் கலை படைப்பில் மனமே இருக்காது. யாவற்றிலும் அழகே இருக்கும் அவ்வழகு ஜப்பானியர்களுக்கு போதி தர்மர் அருளிய ஜென்னை முழுமையாக உள்ளது. அந்த முழுமையிலே வாழ்கிறார்கள். ஜாப்பானியர்கள் சாதரணமாக 100 வயதை கடந்த முதியோர்கள். அதிகம். உலகதிலே அதிகமான முதியோர்கள் கொண்ட நாடு ஜப்பான்தான் அந்த அளவு அவர்கள் எந்த வித இறுக்கமும் இல்லாமல் இயல்பாய் வாழ்கிறார்கள். இந்த இயல்பே ஜென் அதுவே அவர்களின்  நீண்ட வாழ்வாதாரமாக இருக்கிறது.

இதை இந்துமதம் மிக எளிமையாக விளக்குகிறது. "கடமையை செய் பலனை எதிர்பார்காதே.."என்று, நமக்குதான் எளிமையாக சொன்னால், எதுவும் கஷ்டமாக எடுத்துகொள்வோமே... ம்னம் எதிர்பார்காமல் கடமை செய்யும்போது அங்கு பலன் தானாக நிகழும். இதைதான் கிருஸ்துவ மதமும் போதிக்கிறது "தட்டுங்கல் திறக்கபடும், கேளுங்கள் தரப்படும்' என்று, ஆனால் கிருஸ்துவர்கள் இதன் வார்தையின் பொருளையே மாற்றிவிட்டார்கள். ஏதோ ஆண்டவனிடம் கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்று ஆசைகொண்டு கேட்கிறார்கள். அந்த நடுனிலையில் இருந்து உணரும் போது, தட்டும்போது, கதவும் திறக்கும். அங்கு அவர்களுக்கு ஞானத்தின் மார்கம் புலப்படும். இதுதான் கிருஸ்து சொன்னதுகான உட்பொருள்.

நாமத்துல ஆரம்பித்து ஏசுவரை நீண்டுவிட்டது ஆனால் இதில் ஒன்று நீங்க கவனிச்சிங்கன்னா, நான் சொன்னது எல்லாம் ஒரே மையத்தை பற்றியதாகதான் இருக்கும். அதுதான் லாவோட்சு அருளிய "தாவோ" அதுவே இரண்டு வெள்ளை கோட்டுக்கு நடுவில் உள்ள சிவப்பு கோடு அதுவே நாமம். இதுதான் நாமத்தை பற்றி மறைபொருள் இருந்த ரகசியம். இதில் நடுவில் இருக்கும் சிவப்பு கோடுவை "தாவோ" என்கிறோம் ஆனால் அது ஏன் சிவப்பில் இடுகிறோம் என்றால், சிவப்பு, நெருப்பின் நிறம். நம் நெற்றியில் ஆறாவது சக்கரம் அஞ்ஞ சக்கரம் உள்ளது. அதுதான் சிவனின் நெற்றிகண், சிவநேத்ரா என்று இந்துமதம் சொல்கிறது. அந்த நடுனிலையானதில் இருந்து சக்கரம் சுழலும் போது, மூன்றாவது கண் திறக்கிறது என ஞானியர்கள் சொல்கிறார்கள். அந்த மூன்றாவது கண் திறக்கும் போது எல்லா மறைபொருல் ரகசியங்களும் ஒரு மனிதனுக்கு தெரியவரும், அப்போதே அவன், தெய்வத்திற்கு நிகராகிறான். இதன் அடிபடையில்தான் சொன்னார்கள். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று, அந்த மூன்றாவது கண், ஆஞ்ஞ சக்கரத்தை அடையாலபடுத்துவதற்கு, மனம், அந்த சிவப்பு குறியீடில் ஒருனிலைப்படுவதற்கு, இரண்டுக்கு நடுவில் வாழ்வதற்குதான் அந்த சிவப்பு கோடு இடுகிறார்கள். இதுதான்  நெற்றியில் இரண்டு கோட்டுக்கு நடுவே மூன்றாவது கோடாய் சிவப்பு கோடான நாமம் வந்த கதை.

ஒரு நாத்திகனால்தான் உண்மையான ஆன்மிகம் எதுவென்று உணர்ந்து, அதை வெளிபடுத்த முடியும். ஏனென்றால் அவன் திறந்த மனதுடன் செயல்படுவான். அவனிடம் கேள்வி கேட்கும் திறன் இருக்கும். பகுத்தறிவுடன் சிந்திப்பான். ஆனால் ஆலைய வழிபாட்டில் உருவ வழிபாடு கொண்டு, வாழ்வில் அதிக ஆசை கொண்டு, பல மூட நம்பிக்கைகளை சுமந்துகொண்டு, வாழ்வே பாரம் என இருக்கும் போலி ஆன்மிகவாதியால் உண்மையான ஆன்மிக மறைபொருள் ரகசியத்தை வெளிபடுத்த முடியாது.

நாத்திகத்தை உணர்ந்த பிறகு ஆத்திகத்தை உணருங்கள். பின் இரண்டு நிலையும் கடந்து வாருங்கள். அங்கே தாவோ(கடவுள்) வாழ்கிறது. உண்மை மறைபொருள் அதுவே...!

அருட்பெருஞ் ஜோதி...!
அருட்பெருஞ்ஜோதி...!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி...!        என்றும் நட்புடன்:


2 comments: