Pages

Saturday, February 7, 2015

லுங்கி துகிலுரிக்கபட்டது...!

சில நாட்கள் முன் எங்க வீட்டு அருகில் இருந்த ஒரு பலசரக்கு அங்காடிக்கு(சூப்பர் மார்கெட்) போனேன். வீடு பக்கத்தில்தானே உள்ளது என்பதால் லுங்கி கட்டிக்கொண்டுதான் போனேன். நான் போகும்போதே, அரை டவுசர் போட்டுகொன்டு ஒரு வெள்ளகாரரும் என் பின்னே வந்தார். நான் உள்ளே போய் பொருட்கள் வாங்கி ரசிது போடு இடத்தில் வந்து நின்றேன். ரசிதுபோடுபவர் என்னை ஏற, இறங்க பார்த்தார். அவரின் ஒருவித பார்வை என்னை உள்ளுக்குள் அம்மணமாக்கியது. அப்படி ஒரு பார்வை ஆனால் என் பக்கத்திலே ரசிதுக்காக காத்திருந்த வெள்ளக்காரரை ஒரு சிரிப்புடன், மரியாதையாகதான் பார்த்தார். அம்மரியாதை, அவரின் சிரிப்பிலே தெரிந்தது. "இது என்னடா கொடுமை, லுங்கிய விட டவுசருக்கு அதிக மரியாதையா..!?" என எண்ணி அவ்வங்காடியைவிட்டு நான் வெளியேறியேன்.

நாம் வாழும் சமூகத்தில், "ஆள் பாதி ஆடை பாதி" என்ற சொல்லாடல் எல்லாம் வெறும் வார்தைகளாகதான் இருகின்றன. இதைப்பற்றி எனக்கு தெரிந்த நபரிடம் பேசும்போது அவர் சொன்னார், "யேம்பா, ஒருத்தன் உள்ளூரிலே கோவனம் கட்டிருந்தாலும் அவனுக்கு மரியாதைதான் ஆனால் வெளியுரில் அந்த மரியாதை அவனுக்கு கிடைக்காது.. அங்கு நவநாகரிக ஆடைக்கே மரியாதை" என்றார். அவர் சொன்னதில் பாதி உடன்பாடு இருந்தாலும் முழு உடன்பாடில்லை. இச்சமூகத்தில் ஆடையைவிட மனிதர்களின் தோலின் நிறங்களே முதன்மைபடுத்தபடுகிறது. ஏனென்றால் எனக்கு அங்காடி அனுபவமே அதை உணர்த்தியது. எனக்கும் திறந்த மார்புடன் அண்ணா சலையில் (மவுண்ட் ரோட்டில்) வண்டி ஓட்டிகொண்டு செல்லவேண்டு என்று ஆசை. இதற்காக நான் நெற்றியில் நாமத்தை, தோலில் பூனூலை மாட்டிக்கொண்டு செல்லமுடியுமா.? சாதாரணமாக செல்வதற்கும், அடையாலம் கொண்டு செல்வதற்கும் இச்சமூகம் அதிக வித்தியாசம் வகுத்துள்ளதே..

தமிழரின் பாரம்பரை உடைகளில் லுங்கியும், வேட்டியும், ஆனால் இதை இங்கு கட்டிகொண்டுபோனால் நம் மக்களே நம்மை வேற்று மனிதர்களாக பார்கிறார்கள் என்பதுதான் நமகெல்லாம் வேதனையாக இருக்கிறது. நம்ம ஆளுங்க மனதில், "வெள்ளகாரன் ஜட்டி போட்டுக்கொண்டுவந்தாலும் அவன் டீசன்ட்டாகதான் இருப்பானாம். ஆனா, நாம் லுங்கி கட்டிகொண்டு போனால் அது அவனுக்கு கேவலமாக தெரிகிறதாம். இப்படிதான் வேட்டிக்கட்டிகொண்டு போன ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியும், அவருடன் சென்ற வழக்கறிஞ்ரையும் சென்னை கிரிகெட் கிளப் உள்ளே விட மறுத்தது. இது ஊடகத்தில் ஒரு பெரிய விவாதமாகி, இதைப்பற்றி முதலமைச்சரே சட்டசபையில் பேசும் அளவுக்கு, அப்பிரச்சனை சென்றது. தமிழனனின் பாரம்பரிய உடை இன்னும் பல பேருக்கு நகைப்புக்குரியதாகதான் தெரிகிறது ஆனால் வெள்ளகாரன்கிட்ட இந்த நகைப்பை நாம் வெளிபடுத்தமுடியவில்லை. ஏன்னா, அவன் செவத்த தோலுக்கு சொந்தகாரனாம். செவத்த தோலுக்கு மயங்கிதான் அன்று நாட்டை கொடுத்தோம். இன்றும் உலகபொருளாதார மயமாக்கலால் என்ற பெயரில், அன்னீய முதலீட்டால்  மீண்டும் நாட்டை அவனுக்கு அடமானம் வைக்கிறோம்.  

ஆப்பிரிகர்களுடையே, வெள்ளையர்களை பற்றி ஒரு சொல்லாடல் உண்டு. "வெள்ளையர்கள் இங்கு வரும்போது அவர்களிடம் பைபிள் இருந்தது. அவர்கள் எங்களை ஜபம் செய்ய சொன்னார்கள். நாங்கள் ஜெபம் செய்தோம். ஜபம் செய்து நிமிர்ந்து பார்த்தோம் அவர்களிடம் நாடு இருந்தது எங்களிடம் பைபில் இருந்தது" அவன் பிடித்த நாடுகளில் எல்லாம் முதலில் மதபிரசங்கமாகதானே உள்ளே  நுழைந்தான் பின் இங்கு நிலவிய அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலையை பயன்படுத்தி தன் ஆட்சியை அல்லவா விரிவுபடுத்தினான்.

நடிகர் மணிவண்னன் ஒரு படத்துல நகைச்சுவையாக சொல்வார் "வெள்ளையா இருக்கவன் பொய்சொல்லமாட்டாண்டா.." என்று, அது என்ன வெள்ளைக்கும், உண்மைக்கும் அப்படி ஒரு தொடர்பு என்று எனக்கு தெரியவில்லை... அப்போ கருப்பா இருப்பதெல்லாம் கலங்கபட்டதா...!?

பல்லியை திருப்பிபோட்டால் வெளுத்துபோன ஒரு நிறம் இருக்குமே அதுபோல நிறம்தான் வெள்ளகாரன் தோலின் நிறம். அவன் நாட்டுல சூரிய வெளிச்சமே படாமல் இருப்பதால் அவன் தோலில் சுரக்கும் மெலன் என்ற திரவம் குறைவாக சூரக்கும் அதனாலே அவ்வெளுத்துபோன நிறம் வருகிறது. உடலில் ஒன்று குறைவாக சுரக்கிறது என்றால் அது உடலில் குறைபாடுதானே. அக்குறைபாடாக உள்ளது எப்படி நமக்கு எல்லாம் ஆரோக்கியமாக தெரிகிறது.? இதில் நம்மை விட அவன் குறை, அவனுக்கு நல்லாவே தெரிகிறது அதனால்தான் அவன் உடல் கருத்துபோக நாளேல்லாம் சன் பாத் என்ற பெயரில் வெயிலில் படுத்துகொண்டுயிருகிறான் ஆனால் இங்கு அந்த பிரச்சனையே இல்லை வெயில் இங்கு போதும் போதும் என்ற அளவுக்கு வெலுத்து வாங்குகிறது இதனால் நம் தோலில்,மெலன் அதிகம் சுரக்கிறது. மெலன் திரவம் அதிகம் சூரப்பதால் தோல் கருப்பு நிறமுடையதாக மாறுகிறது. இன்னொரு தகவல் தோல் கருப்பாக இருப்பதால் புறஊதா (அல்ட்ரா வாயிலட்) கதிர்கள் கருத்த தோலை அதிகம் தாக்காது. இதனால் தோல் புற்று நோய் வருவது பெருமளவு தடுக்கபடுகிறது. இதில் இன்னொரு பயன் என்னவென்றால் சூரிய கதிர்கள் பரவலாக இருக்கும் நாட்டில் வைட்டமின் டி குறைபாடு இருக்காது என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். இந்த வைட்டமின் டி சத்து, உடம்பில் சேரும் பல முக்கிய சத்துகளுக்கு ஆதார சக்தாக இருக்கிறது என்கிறார்கள். இப்படி போகிறது தோலை பற்றிய ஆய்வு இன்னும் சொல்லிகொண்டும் போகலாம்.

நான் கேள்விபட்ட ஒரு கற்பனை கதை, கடவுள் மனிதர்களை படைக்கும் போது மனிதர்களை சரியாக சுடாமல் விட்டதால் வெளுத்த மனிதர்களாக வ்ந்தார்களாம் அவர்களே வெள்ளையர்களாம். சரியாக சுடாத மனிதர்களை எண்ணி வருந்திய கடவுள், "இம்முறை சரியாக சுடுவோம்" என்று, பின் வந்த மனிதர்களை அதிகமாக சுட்டுவிட்டாராம் அதனால் அவர்கள் கருப்பின மக்களாக(நீக்ரோக்களாக) வந்தார்களாம். மீண்டும் கடவுளுக்கு பெருத்த சோகம், "இந்த முறை படுகவனமாக செயல்படுவோம்" என நினைத்து சரியான பதத்தில் சுட்டாராம் அவர்களே தமிழர்களாக வந்தார்களாம்.

தமிழர்கள் நிறமே கருப்புதான். வெள்ளை இங்கு ஆரியர்கள் மூலமாக குடியேரிய நிறம் அது ஒருவிதத்தில் சரியாக வேகாத தோசை ஆனால் அந்த வேகாத தோசையைதான் மக்கள் விரும்பி வரவேற்கிறார்கள். வெள்ளைகாரன் ஏற்படுத்திவிட்டு சென்ற காலனி ஆதிகம், நிற அடிமைதனம் இன்னும் இம்மண்ணை விட்டு நீங்கவில்லை. அது சமூகத்தில், ஜாதி அடிபடையிலும், மத அடிபடையிலும், பொருளாதார அடிபடையிலும் ஒவ்வொரு நாளும் வெளிபட்டு கொண்டுதான் இருக்கிறது.

"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்...! என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்..! என்ற பாரதியின் பாடல் வரிகளே என் நினைவில் வந்துவிட்டு செல்கிறது.


0 comments: