Thursday, January 6, 2011
வளர்ந்த குழந்தையின் அவநம்பிக்கை ஆழமானது....
ஒரு குழந்தையின் நம்பிக்கை எப்படி வளர்கிறது. ஒவ்வொரு குழந்தையும் ஏதும் நம்பிக்கை இல்லாமல்தான் சுதந்திர சிந்தனையுடந்தான் பிறக்கிறது ஆனால் அது சுதந்திரத்தை சாதி, மதம், ஒழிங்கின கல்வி போதனை, அதன் கேள்விஞான அறிவை சீர்குலைத்தல் போன்றவை எல்லாம் ஒட்டுமொத்தமாக இந்த சமுதாயத்தால் இழக்கிறது.
இந்த சமுதாயத்தில் குழந்தைகள் மதம் மற்றும் பிற நம்பிக்கையில் ஊறி வளரும் குழந்தைகள் அம்மதங்களை ஆராயாமல் கேள்வி ஏதும் கேட்காமல் அப்படியே சொல்வதை நம்பிக்கை என்ற பேரில் எற்றுகொள்கிறது. குழந்தை குழந்தையாக இருக்காது இப்போது வளர்ந்து ஆளாய் இருக்கும். மற்றும் மன திடமும், உடல்பலமும் கொண்டவனாய் இருக்கும். இப்போது இவன் நம்பிய மதத்தினை பிறர் விமர்சனம் செய்யப்படும்போது. இவனின் நம்பிக்கையின் ஆணிவேரே கொஞ்சம் தளர்வடையும் ஆட்டம்காணும். இதை இவன் என்றும் விரும்பமாட்டான். அடுத்து இவனின் மத நம்பிக்கையை காப்பதற்கு மத ஆளுமை பிறரின் துணையுடன் நடத்துவான். இது அடங்கா வன்முறையில் போய் முடியும். இதுபோன்ற அடங்கா ஆளுமைதான் எல்லா மத, மார்க்கங்களிலும் நடக்கிறது.
குழந்தையில் நாம் ஏதோ அற்பமாக விதைத்த விதைதான் இன்று இவன் மனதில் ஆழமாக நம்பிக்கை வேறாகி போனது. இதில் இவனின் போலி நம்பிக்கையை உடைப்பது அவ்வளவு எளிதானது அல்ல..அவனின் நம்பிக்கை மண்ணில் ஊன்ற எவ்வளவு வருடம் எடுத்து கொண்டதோ..அதுபோல் அன்னம்பிக்கையை உடைபதர்க்கும் பல வருடம் ஆகும். இது அறிவியல் படைப்பால் நிகழும் சாதனையால் சீக்கிரம் உடைத்து காட்டலாம்.
இப்பதிவில் நான் கூறுவது என்னவென்றால் குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் போது அது கேள்வி ஏதும் கேட்காமல் அப்படியே நம்ப ஆரபிக்கும். பின் அதில் விமர்சனம் ஏற்படும்போது வளர்ந்த மீசை வைத்த குழந்தையால் தாங்கி கொள்ள முடியாது. அது ஏதோ ஒரு பற்றுதலுடன்தான் வாழ முற்படுகிறது. அந்த பற்றுதல் நாம் திணிக்கும் மத நம்பிக்கை சார்ந்ததாக இருக்க கூடாது.
குழந்தைகளுக்கு கோவில், சர்ச், மசூதி என்று எதுவும் தெரியாது. நாம்தான் அதற்கு அறிமுகபடுத்திகிறோம் வன்முறை நம்பிக்கையை விதைக்கிறோம். இதில் எதையும் விதைக்காமல், எங்கையும் அழைத்து கொண்டு போகாமல் அவன் கேள்வி கேட்கும் வரை காத்திருங்கள். அவன் விருப்பட்டால் அவனே தேர்தேடுக்கட்டும் மறுபடியும் சொல்கிறேன் வளர்ந்த மனிதனின் பொய்யான நம்பிக்கையை உடைப்பது அவன் எடுத்துக்கொண்ட காலம் போல் ஆகும். இதில் சிரமம் கொஞ்சம் அதிகம்தான் ஆனால் குழந்தையிடம் எளிதாக ஞான கேள்வியான நம்பிக்கையை உண்டாக்கலாம். அதனால்தான் முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் வளர்ச்சியான, லஞ்சம் ஏதும் அற்ற இந்தியா வரவேண்டும் என்றால் குழந்தைகளிடம் இருந்தே தொடங்க வேண்டும் என்று புரிந்துகொண்டு செயல்படுத்தி கொண்டிருக்கிறார். அவர் காண்பது வளர்ச்சி. நாம் காண்பது பகுத்தாயும் வளர்ச்சி சிந்தனை அதனால் குழந்தையை சுதந்திரமாக வளர அனுமதியுங்கள். நாளைய சமுதாயம் பகுத்தறியும் சமுகதாயமாக ஜாதி, மத பூசல் இல்லாமல் நல்வழிபாதையில் பயணிக்க வேண்டும் ...இதுவே நம் விருப்பமாக இருக்கவேண்டும்.
என்றும் நட்புடன்:
8 comments:
என்ன ஒரு அலசல் பார்த்து வியப்படைகிறேன்
உங்கள் கூற்று மிகச்சரியானது ...
சிறந்த கருத்துக்கள் அடங்கிய பதிவு நண்பா
//பின் அதில் விமர்சனம் ஏற்படும்போது வளர்ந்த மீசை வைத்த குழந்தையால் தாங்கி கொள்ள முடியாது. //
:))
நல்ல கடடுரை நண்பா!
சரியாச் சொன்னீங்க...
நாம் சொல்லி கொடுக்காவிட்டாலும் வீட்டின் சூழல் அவர்களுக்கு சொல்லி கொடுக்கும்.
உங்களுக்கு குடும்பத்தினருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்.
சிறப்பான பதிவு...
Post a Comment