Tuesday, November 30, 2010
இன்னல்படும் காஷ்மீர்...
நம்ம வீட்டு எதிர் வீட்டுக்காரன் ரொம்ப பிரச்சனை பண்றான். அவனுடன் மோத நாம் தயாரில்லை ஆனா நம்ம பக்கத்து வீட்டுகாரன் ரொம்ப பவ்வியமான ஆளு என்று நினைத்து அவனிடம் பாதுகாப்பு கேட்டு உதவிக்கு போறோம். பக்கத்து வீட்டுக்காரன், "நான் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் பயபடாதிங்க" என்று ஆறுதல் சொல்லி பாதுகாப்புக்கு அவன் வீட்டில் உள்ள நண்டு, சிண்டுகளை நம் வீட்டின் முன் நிறுத்துகிறது. இதை எதிர்வீட்டுக்காரன் பார்த்து பயந்து தற்காலிகமாக ஒதுங்கிட்றான் ஆனா அப்போ அப்போ ஒளிந்து ஒளிந்து நம் வீட்டுமேல கல் எரியுறான். இப்ப நம்ம பக்கத்து வீட்டுக்காரன் செத்து போய்ட்டான் அவனுங்க புள்ளைங்க நம் பாதுகாப்புக்கு பொருப்பெடுத்துகுதுங்க பாதுகாப்புக்கு இருந்த நண்டு, சிண்டுங்க எங்க வீட்டு பொம்பள பிள்ளைகளை கைய பிடிச்சி இழுக்குதுங்க பலாத்தாரம் செய்யுதுங்க இதை தட்டி கேட்டா எங்கலையே அடிக்குதுங்க...ஏன் இப்படி பண்றிங்க என்று கேட்டா, அதுங்க சொல்லுதுங்க "இத்தன வருடம் பாதுகாப்புக்கு இருந்ததால உங்க வீடு எங்களுக்குத்தான் சொந்தம் எங்கள கேட்காம நீங்க எங்கையும் போக கூடாது" என்று. சொல்றானுங்க..இந்த சங்கதியெல்லாம் தெரிஞ்சும் எதிர்வீட்டுக்காரன் அப்போ அப்போ கல்லு விட்டுக்கொண்டுதான் இருக்கான். அண்ணன் எப்போ காலியாவான் தின்ன எப்போ காலியாகும் என்று கடுப்புல எதிர் வீட்டுக்காரனுக்கு இருக்கான்.
எதிர்வீட்டுகாரனுக்கு என்ன வெறுப்புன்னா.. இவ்வளவு நாள் நாம எடுத்துக்கலாம் என்று பகல் கனவு போட்டுகிட்டே இருக்கோம்...ஆனா பக்கத்து வீட்டுக்காரன் அந்த வீட்ட எடுத்துட்டு போயிட்டானே அந்த வீடு எப்போ நம்ம கைக்கு வரும் என்று எதிர்பர்த்துகொண்டிருக்கிறான். இந்த மேட்டர் எல்லாம் நம்ம பக்கத்து விட்டுகாரனுக்கு நல்லா தெரியும். "எதிர் வீட்டுக்காரன் எடுத்துகொண்டு போரதுக்கா நாங்க இவ்வளவு நாள் காவல் இருக்கோம் அதெல்லாம் முடியாது நாங்கதான் இந்த வீட்டுக்கு வாரிசு" என்று பஞ்சாயத்துக்கு வரவங்க கிட்டயெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கான். ஆனா நாங்க மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம நம்ம பேடிதாத்தா கோழைத்தனத்த, விவேக,வீரமில்லாததனத்தை நினச்சி நினச்சி ரொம்ப வருத்ததுல இருக்கோம்...இப்ப கூட கொஞ்ச நாளைக்கு முன்னே எங்க வீட்டு சின்ன பையன் பேரிக்கா வாங்க கடைக்கு போனான் அவன் கைல பேரிக்கா இல்ல வெடிகுண்டு இருந்தது என்று சொல்லி எங்க பையன சாக அடிச்சுட்டானுங்க.. எங்க குலமே கொஞ்ச கொஞ்சமாக செத்துக்கொண்டு இருக்கு....இப்படி அநியாயம் ஏன் பண்றிங்க என எங்களுக்கு ஆதரவா தட்டி கேட்ட சமுக போராளி அருந்ததிராய் மேல சமகடுப்புல இருக்கானுங்க அவங்க என்ன அப்படி இல்லாதத கேட்டுடாங்க "அவங்க வீடு அவங்களுக்குத்தானே சொந்தம். நீங்க சொந்தம் கொண்டாட என்ன உரிமை இருக்கு" என்று கேட்டதுக்கு அவங்கள கைது பண்ண போறங்களாம்....
எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்..எங்கள் வீடு வேண்டும்.....!
("எங்கள் நாட்ட எங்களுக்கு கொடுங்க" என்று அடிபட்டு உதைபட்டுதானே வெள்ளக்காரன்கிட்ட நாமும் சுதந்திரம் பெற்றோம். அந்த உரிமை நமக்கு இருந்தது ஏனென்றால் அது நம் பூமியாக இருந்தது அதுபோலத்தானே காஷ்மீர்...ஆனா நாம் ஏன் காஷ்மீர் மக்களின் நியமான சுதந்திரத்தை புரிந்துகொள்ள மறுக்கிறோம்.
இதில் நான் காஷ்மீர் மக்களின் உணர்வில் கலந்தவன்....)
என் எண்ணத்தை புரிந்துகொண்டு நீங்களும் குரல் கொடுக்க வாருங்கள்...நன்றி
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)
4 comments:
இரண்டு பயங்கரவாத நாடுகளிடையே சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் தமிழீழமும், காஷ்மீரும் விரைவில் விடுதலை பெற வேண்டும்.
உங்கள் கருத்துகளில் இருந்து மாறு படுகிறேன் நண்பா..விரைவில் என் கருத்துகளை தனி பதிவாக தருகிறேன்..
நன்றி..
என்ன தான் நடந்தாலும் மக்கள் தானே பாதிக்கப்படுகிறோம்...
தங்கள் கருத்து தவறு நண்பரே , ஆனால் எண்ணம் சரியானது. தங்கள் கருத்து நிஞமானால் என்னவாகும், பாகிஸ்தான் ஆக்கிரமைப்பு , ஐ எஸ் ஐ ஆதரவுடன் தீவிரவாதிகள் தாக்குதல் முடிவு நம் மக்கள் மரணம். என் கருத்து யாதெனில் , இந்தியா வை விட மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மாற்று வழி , பாகிஸ்தான் திருந்த வேண்டும் இல்லை திருத்தப்பட வேண்டும்.
Post a Comment