Pages

Tuesday, December 7, 2010

மார்கழிமாதம், புரட்டாசிமாதம் தமிழர்களை அதிகம் சுரண்டும் சாமிகள்...

பலபேரில் சிலபேரு, சிலபேரில் அதிகம் பேரு...கஞ்சா அடிக்கிறவன், துண்டுபீடி அடிக்கிறவன், சரக்கு அடிக்கிறவன், பொம்பளைகிட்ட போறவன், மொள்ளமாரித்தனம் பண்றவன், கந்துவட்டி விட்டு கட்ட பஞ்சாயத்து பண்றவன் எல்லாம் இந்த கார்த்திகை, மார்கழி மாதத்தில் ஒரு 48 நாள் ரொம்ப நல்லவனுங்கலா மாறிவிடுவானுங்க ஏன்னா எல்லோரும் சபரி மலைக்கு மாலை போட்டுபானுங்க....வணக்கம் சாமி, வாங்க சாமி, போங்க சாமி, சாப்பிடுங்க சாமி என்று ஒரே சாமி மயமா இருக்கும்.

தமிழர்களை  இரண்டு மாநிலத்தில் உள்ள சாமிகள்  பக்தி என்ற பேருல நம்ம கிட்ட இருக்கிற கைகாசு எல்லாத்தையும்  சுரண்டுது...கார்த்திகை, மார்கழி இரண்டு மாதத்தில் சபரிமலையில் தமிழனின் பக்தி என்ற பேரில் அவனின் ஆண்டு வருமானத்தை கரைக்குது...இன்னொன்று "ஏடுகுண்டல வாடா" வெங்கட்ரமணா கோவிந்தா என்ற கோஷத்துடன் வருடமுழுவதும் அதுவும் ஜனவரியில் இருந்து அக்டோபர் வரைக்கும் கோவிந்தவுக்கு ஒரே மஜ்ஜாதான் கல்லாவுக்கு பஞ்சமே இருக்காது...அதுவும் புரட்டாசி மாதம் என்றால்  தமிழர்களின் பக்தி வியாபாரம் அவர்களுக்கு படுஜோரா இருக்கும். ஏன்னா கோயிந்தாவுக்கு அது உகந்த மாதமாம்...நம் மாநிலத்தவனின் பக்தி வருமானம் இரண்டு மாநிலத்திற்க்கு போகுது...ஏன் தமிழர்களின் தமிழ் கடவுள் பழனியில் ஒரு பண்டாராம் ஆண்டியா நிக்குதே அங்கே போகலாமே..நான் சும்மா சொல்ல கூடாது தமிழர்கள் போறாங்க ஆனா வெங்கிக்கு இருக்கிற கல்லா ஆண்டிக்கு கிடைகிறதில்லை...ஆந்திராவின் பட்ஜெட்டே வெங்கியை நம்பித்தான் இருக்கு...பெரும்பான்மையான  தமிழர்களுக்கு என்ன பயம்ன்னா...கோவணம் கட்டி இருக்கும் ஆண்டிகிட்ட போனா நாமும் போன்டியாகிவிடுவோம் என்ற பயமும் இருக்கு...ஆனா இரண்டு ஆண் கடவுளுக்கு பிறந்த ஐயோ அப்பனும், முருகனின்  பட்டையை அழித்து இரவோடு இரவாக நாமத்தை போட்டு இதுதான் பெருமாள் சாமி என்று எல்லோரையும் நம்பவைத்த  வைணவ பாப்பானுங்க விழுந்து விழுந்து கும்பிடுற கோயிந்தா சாமியும் தமிழர்களாகிய  நீங்க  ஏன் போய் கும்மிடனும்...

தமிழர்களாகிய நீங்க பண்டாரம் ஆண்டியை வணங்கினால் தமிழக கஜானாவுக்கு ஏதோ பக்தி என்ற பேருல வருமானமும் வரும். ஏதோ மக்களுக்கு உங்களால் நல்ல காரியமும் நடக்கும். ஆனா நல்லது அரசியல்வாதி நினச்சாத்தான் நடக்கும் நீங்க நம்பலாம்....அப்படியும் இல்லனா பக்தி பணத்தை என்கிட்ட கொடுங்க... ஆதரவற்ற அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஏழை மாணவர்களுக்கு ஆதரவுகரம் நீட்டும் அமைப்புக்கள் போன்ற சமுக அமைப்புகளின் முகவரி எனக்கு தெரியும்...நீங்க என்கிட்ட கொடுத்தால் உங்க பெயரிலே அவர்களிடம் வழங்குகிறேன். உங்களுக்கு ரசிதும் கொடுக்கிறேன் அதற்கான கணக்கும் நீங்க கேட்டால் காட்டுகிறேன்.  அந்த அமைப்புகளுக்கு நல்லது செய்வதால் ஐயோ'அப்பா' , கோயிந்தா, ஆண்டிபண்டாரம் இந்த சாமிகளிடம் கிடைக்காத நிம்மதி நிச்சயம்  கிடைக்கும்...

மறுபடியும் சொல்றேன் திருந்துங்க பக்தி, நம்பிக்கை, வழிப்பாடு என்ற பேர்ல்ல தமிழர்களை முட்டாளாக்கி சுரண்டி கொண்டிருக்கிறது பல கூட்டம் அதுக்கு என்றும் பலியாகிவிடாதிங்க....உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லனா அந்த நம்பிக்கையை வேற எங்க தேட முடியும் அது முடியாது. அப்படி முடியும் என்றால் அது நம்பிக்கையாக இருக்காது. அது உங்களை ஏமாற்றும் வேலையாய் இருக்கும். உங்களுக்கு ஒன்று தெரியுமா பலவீனமானவன்தான் தன்னம்பிக்கை அற்றவன்தான் கோவிலுக்கு செல்வான்...."உன்னை நீ நம்பாமல் வெறும் கல்லை நம்புகிறாய்" என்றால் நீ எவ்வளவு பெரிய முட்டாளாய் இருக்கிறாய் என்று ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்க ..

ஓஷோ கூறியது போல "உண்மையான தேடுதல் கடவுளை தேடுவதாக இருக்காது அப்படி தேடினால் அது ஒரு சால்ஜாப்புதான்  ஏனென்றால் வியாதிக்காரன் மனத்தின் தேவைதான் கடவுள்..."


எண்ணத்தின் எழுத்தை வரவேற்றமைக்கு உங்களுக்கு நன்றி...எதிர்ப்பு இல்லேன்னா என் நன்றியை ஏத்துக்கலாம்...


என்றும் நட்புடன்:    


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

5 comments: