Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Saturday, November 27, 2010

ஆங்கில மொழி மவுசு இன்னும் இருக்கா...


ஆங்கில மொழியை ஒரு மாயையாக ஆக்கிவிட்டான் நம்மை ஆட்சிசெயதவன், அதற்கு இன்னும் துணைபுரிந்துகொண்டிருப்பவர்கள்  நம்  ஆட்சியாளர்களும் ஆனால் இன்னும் அந்த ஆங்கில மாயையில் மயங்கித்தான் கிடக்கிறோம் இது வெட்கப்படவேண்டியவை வெள்ளக்காரன் ஆட்சி செய்த காலனி ஆதிகத்தில் உள்ள நாடுகளிலெல்லாம் அவன் மொழி அவன் மதத்துடன் சேர்ந்தே அப்போது  பரப்பப்பட்டது. அவர்கள் ஆட்சி செய்த நாட்டின் மொழியுடன் தேவையான வார்த்தைகளையும் இணைத்து கலப்பின மொழியாகத்தான் ஆங்கில மொழி இன்றுவரை  செயல்பட்டுகொண்டிருக்கிறது. அது ஒரு உலக வர்த்தக மொழியாகவும் இருக்கிறது. இதை இந்த கண்ணோட்டத்தில் மட்டுமே நாம் பார்க்கவேண்டும். மத்தபடி நம் அன்பின் உணர்வுகளை வெளிபடுத்த அதால் முடியாது அதற்கு  நம் தாய் மொழிதான் சிறந்தது. லண்டன்ல கழிப்பிடம் (கக்குஸ்) கழுவுறவன் அட்டகாசமா ஆங்கிலம் பேசுவான்...அது அவன் தாய் மொழி அவன் அப்படி பேசுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை ஆனால் இங்கு உள்ளவர்கள் தட்டு தடுமாறி பேசினால் ஒரே சிரிப்புதான் அதில் ஒரு நக்கல் பார்வைவேற பார்பாங்க...

நம்ம மாநிலத்தில் உள்ள சுற்றுலாதளமான  மாமல்லபுரம் போனா அங்க இருக்கிற வழிகாட்டி (Guide) அட்டகாசமா ஆங்கிலம் பேசுவான் அதுமட்டும் இல்லாமல் பிரஞ்ச், தெலுகு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஒரு ஐந்தாறு மொழி அவர்களுக்கு  தெரியும்...அதுவும் அவர்களின் பள்ளிபடிப்பு 5 வது 8 வது என்ற அளவில்தான்  இருக்கும். இது எப்படி சாத்தியம்  என்றால் அவர்கள் தினமும் பேசி பேசி பழக்கம்...அதுபோலதான் மொழி தெரியாத ஊரில் ஒரு ஆறு மாதம் இருந்தாலே போதும் தானாகவே வந்துவிட போகிறது...வந்துதான் ஆகணும் ஏனென்றால் அது கட்டாயத்தால் நாமாகவே பேச ஆரம்பித்துவிடுவோம். அதனால பிற இடத்தில் தங்கிதான் பிற மொழிகள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. ஆர்வம் இருந்தால் எங்கிருந்தும் எம்மொழியையும்  கற்றறியலாம் அதனால் இந்த மொழிதான் சிறந்தது அந்த மொழிதான் சிறந்தது என்று சொல்வதை விட எது தேவையோ அது தெரிந்துகொள்வது நல்லது. அது நம் தாய் மொழியையும் பாதிக்காமல் இருக்கும். அதனால் மொழிக்கும், சிந்திக்கும் அறிவுக்கும் சம்பந்தம்மில்லை அது சிந்தனைக்கு ஒரு எழுதுகோல் (Pen) போலதான். இதில் எழுதுகோலே முழு அறிவாகாது... ஒரு மொழி எனபது மக்களின் அன்பின் மற்றும் சிந்தனை உணர்வுகளை தாங்கி வரவேண்டும். அம்மொழிகளை  நான் மதிக்கிறேன்...


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...



என்றும் நட்புடன்:    



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

4 comments:

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஎன் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல.ஃஃஃஃஃஃ

நல்ல விசயத்தை படிப்பதென்றால் பொறுமை தானே வரும்... அருமைங்க

என்ன நீண்டகாலமாக நம்ம ஓடைக்கு குளிக்க வரவில்லை....


அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/

கவி அழகன் said...

எது தேவையோ அது தெரிந்துகொள்வது நல்லது

சுப்பர் கலக்கிடிங்க

எஸ்.கே said...

நல்ல கட்டுரை!

தமிழ் செல்வன் இரா said...

good post keep it up..