Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Tuesday, November 2, 2010

'அருந்ததிராய்' நினைப்பது நடக்குமா...

 
இந்த மதச்சார்புடைய அரசியல்வாதிகளுக்கும், தேசியம் ஒருமைப்பாடு என்று ஒப்பாரி வைப்பவர்களுக்கும் காஷ்மீர் இந்தியாவுடன் ஒருகிணைந்த ஒரு மாநிலமாகத்தான் இருக்கவேண்டுமே தவிர அது இந்தியாவுடன் சுதந்திரம் பெற்று தனிநாடு என்ற அந்தஸ்தை பெற கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள், ஏனென்றால் காஷ்மீர் தனி நாடு அந்தஸ்து பெற்றுவிட்டால் இந்தியாவின் ஒற்றுமை கதை முடிஞ்சது ....இப்பவே அங்க ஒன்னு இங்க ஒன்னு என்று பத்திகின்னு எரியுது ..அப்புறம் ஒட்டுமொத்தமா எரிய ஆரம்பிக்கும்....

தமிழ்நாட்டில் பெரியார் எதிர்பார்த்த தனி தமிழ்நாடு கொஞ்சம் ஓங்கி ஒலிக்கும்.(அது ஒலிக்கவேண்டும் என்பதே நம் விருப்பமும்.) அப்புறம் பஞ்சாப் சர்தார்ஜிகள் சும்மா இருப்பார்களா...ஏற்கனவே நம் பிரிவினை குரல் கொடுக்கும் போதே அவர்களுக்கும் குரல் கொடுதவர்கலாட்சே...இதுதான் சான்ஸ் என்று பால்தாக்கரே, பூ... தாக்கரே என்ற இவர்கள் மாரத்தி மாரத்தியர்கலுக்கே என்று மாராத்தி நாடு வேண்டும் என்று சவுண்டு அதிகமாக விடுவானுங்க. அப்புறம் தெலுங்கான சந்திரசேகர்ராவ் தெலுங்கான மாநிலம் பிரிப்பது போய் தெலுங்கான நாடு எங்களுக்கு வேண்டும் என்று வழக்கம்போல் சாகாமல் உண்ணாவிரதம் இருப்பார்.

இங்கு நான் சொன்னதெல்லாம் நடக்கும்...(ஏன்னா நான் நாஸ்ட்றோம் மாதிரி இதுவெல்லாம் நடக்களன்னா உங்க பேர மாத்தி வச்சுக்குங்க) இந்தியாவின் தலையே காஷ்மீர்தான் அதை வெட்டி எடுத்துட்டா அப்புறம் இந்தியா முண்டம் ஆகிடும்....அப்புறம் முண்டம் இருந்து என்ன பிரோஜனம்....அதனால் தலை விழவேண்டும். ஒருநாள் விழும். நான் ஏற்கனவே சொன்னதுபோல இந்தியாவின் ஒற்றுமை ஒரு நூல் இழையில்தான் உள்ளது, அது எந்நேரமும் அறுந்து விழலாம்....அது காந்தியம் என்ற நூல் இழை அது தற்போது மக்கி போய் இருக்கிறது....அது அறுந்துவிழும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

இந்த பிரிவினை பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் ரொம்ப சாதகமாக மாறிவிடும்....எனக்கே தெரிஞ்ச சங்கதி இந்தியாவின் உளவு அமைப்பு 'ரா'வுக்கு தெரியாதா...இதெல்லாம் கணக்கு போட்டுதான் காஷ்மீர் பிரிய கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.அந்த உறுதியை அருந்ததிராய் கொஞ்சம் ஆட்டிவிடுருக்கார் அது இப்போதுதான் கொஞ்சம் ஆட ஆரம்பிச்சிருக்கு இன்னும் நல்லாவே ஆட ஆரம்பிக்கும்....


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!




என்றும் நட்புடன்: 



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

6 comments:

கணேஷ்... said...

வெளிப்படையான பதிவு குரு
மெய்பட வேண்டும் என்பதே நம் விருப்பமும்
கணேஷ்

சசிகுமார் said...

Super

தனி காட்டு ராஜா said...

//தமிழ்நாட்டில் பெரியார் எதிர்பார்த்த தனி தமிழ்நாடு கொஞ்சம் ஓங்கி ஒலிக்கும்.(அது ஒலிக்கவேண்டும் என்பதே நம் விருப்பமும்.) அப்புறம் பஞ்சாப் சர்தார்ஜிகள் சும்மா இருப்பார்களா...ஏற்கனவே நம் பிரிவினை குரல் கொடுக்கும் போதே அவர்களுக்கும் குரல் கொடுதவர்கலாட்சே...இதுதான் சான்ஸ் என்று பால்தாக்கரே, பூ... தாக்கரே என்ற இவர்கள் மாரத்தி மாரத்தியர்கலுக்கே என்று மாராத்தி நாடு வேண்டும் என்று சவுண்டு அதிகமாக விடுவானுங்க. அப்புறம் தெலுங்கான சந்திரசேகர்ராவ் தெலுங்கான மாநிலம் பிரிப்பது போய் தெலுங்கான நாடு எங்களுக்கு வேண்டும் என்று வழக்கம்போல் சாகாமல் உண்ணாவிரதம் இருப்பார்.//

எல்லாரும் அடித்து கொண்டு சாக வேண்டியதுதான் .........
தற்சமயம் மத வெறியில் அடித்து கொண்டு சாகிரான்கள்........
அடுத்து இன வெறியில் அடித்து கொண்டு சாக வழி தேடுகிரான்கள் .........

கவி அழகன் said...

சபாஷ் ..சூப்பர் போஸ்ட்

தமிழ் செல்வன் இரா said...

good post keep it up..

suneel krishnan said...

காஸ்மீர் மக்கள் பிரிவை விரும்பியவர்கள் இல்லை .
ராணுவம் ஆடிய வெறி ஆட்டத்தின் விளைவு தான் இன்றைய இந்த கோலம் .