Friday, July 18, 2025
நீண்ட நாள் வாழ்வு,
பல நாள் கனவு,
குறுகிய வாழ்க்கை..
ஒரு நாள் மரணம்
மறுநாள் அடக்கம்
முடிந்தான் மனிதன்,
ஆனால்
அவன் போடும்
ஆணவ ஆட்டம்.!!
:-Rk. Guru
(Share this post...)
Thursday, July 17, 2025
அழகு எங்கு உள்ளது.!?
*
அழகு என்பது வெளிப்புறத்தில் இல்லை அது உடலில் இருக்கும் உறுப்புகளிலும், மனதிலும் உள்ளது.
இது இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால் வெளிப்புற அழகு தன்னால் மிளிரும் ஆனால் 90 சதவீத மக்கள் வெளிப்புற அழக்குகே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். விலை உயர்ந்த ஆடைகள் அணிகிறார்கள் ஆனால் ஆடைக்கேற்ற மாதிரி உடல் இல்லை.
ஆண்கள் நிறைமாத கர்ப்பிணி போல் தொப்பை இருக்கிறது. அதுல பேண்ட், சர்ட் டக் செய்துகொண்டு நடந்து செல்வதை பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது.
இதேதான் 90% பெண்களும், வீட்டில் இருக்கும் அண்டாகளுக்கும், குண்டாங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஊதி போகிறார்கள்.
#நோய் நம்மை நோக்கி வருவதில்லை. நாம்தான் நோயை நோக்கி தேடி செல்கின்றோம்.
நட்புடன்... 💐
:-Rk. Guru
Astrologer, Social Activist,
Life & Spiritual Counseller
Whatsapp: +919361782696 +917904507838
(Share this post...)
Wednesday, July 16, 2025
பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வா.!?
என்னுடைய நிலைப்பாடு தீய செயல் செய்து கூட ஒருவனை ஊரே சேர்ந்து காரி துப்பினாலும் தற்கொலை எண்ணத்திற்கு வரக்கூடாது என்பேன். அவனும் திருந்துவதற்கு வாய்ப்பு உள்ளது.
தீய செயல் செய்து ஊரே காரி துப்பினாலும் தற்கொலைக்கு வரக்கூடாது என்று சொல்லும் போது சத்தியம், தர்மத்தின் வழி சென்று நேர்மையான நல்ல காரியங்கள் செய்து அதில் ஏற்படும் பிரச்சனைக்கு போராட துணிவு இல்லாமல் தன்னை மாய்த்துக் கொள்வது என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த பிறவியில் நாம் பிறந்தது வாழ்வதற்காகதான்.
பிற உயிர்கள் பிறப்பையும் தேர்ந்தெடுக்க முடியாது, இறப்பையும் தேர்ந்தெடுக்க முடியாது ஆனால் நாம் பிறப்பை தேர்ந்தெடுக்க முடியாது ஆனால் இறப்பை தேர்ந்தெடுக்க முடியும்.
இறப்பை தேர்ந்தெடுக்க முடியும் என்ற உரிமையில் இயற்கை படைத்த உயிரை இயற்கையே எடுத்துக்கொள்ளும் வரை அதற்கு எதிராக செயல்படக்கூடாது.
மனிதன் தோன்றிய 2 லட்சம் வருடமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் அவன் போராடிதான் கடந்து வந்திருக்கின்றான்.
இந்த பூமியில் உயிர் வாழ்வதுதே மிகப்பெரிய போராட்டம்தான் அதற்கு தற்கொலை என்றுமே ஒரு தீர்வாக இருக்க முடியாது.
தற்கொலைதான் முடிவு என்றால் மனித இனம் என்றோ அழிந்து போயிருக்கும் இந்த அளவுக்கு முன்னேறி இருக்காது.
அதனால் பிரச்சனையை நாளை தள்ளி போடுங்கள் அந்த நாளை வரும் பொழுது அந்த பிரச்சனை வீரியம் குறைந்திருக்கும் சில நாட்களில் பிரச்சனை என்பதே இல்லாமல் போயிருக்கும்.
#தற்கொலை எண்ணத்திற்கு இதுதான் குறைந்தபட்ச ஒரு தீர்வாக இருக்கும்.
நட்புடன்... 💐
:-Rk. Guru
Life & Spiritual Counseller
Whatsapp: +919361782696
+917904507838
(Share this post...)
Saturday, June 21, 2025
அமெரிக்காவின் ரவுடி இஸ்ரேல்
அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ, ஈரான் தலைவர் காமெனியை கொலை செய்துவிட்டால் நீங்கள் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்? உங்கள் பதில் என்னவாக இருக்கும்? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு புதின், "இப்படியான சாத்தியங்கள் குறித்து நான் விவாதிக்கக்கூட விரும்பவில்லை. இது கேள்விக்கு மிகச் சரியான பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
-------------------------------
# ரஷ்ய அதிபர் புதின் மிகப்பெரிய மூளைக்காரன்தான் என்ன ஒரு சமார்த்தியமான பதில்.!!
" விவாதிக்க விரும்பவில்லை.. " என்றால் அவருக்கு தகுந்த பாதுகாப்பு எங்களால் கொடுக்க முடியும்.
"எங்கள தாண்டிதான் அவர தொட முடியும்..." என்பதுதான் புட்டின் சொன்ன பதிலின் ஆழமான பொருள் உள்ளது.
அதனால் அமெரிக்காவவோ, இஸ்ரேலோ சர்வாதிகார ஆதிக்க மனோபாவத்தை விட்டு தொலைய வேண்டும்.
இராணுவம் ஒரு நாட்டிற்குள் செல்லாமல் நவீன ஏவுகனை, ட்ரோன் மூலம் ஒரு நாட்டை அழிக்கலாம் தற்போது அந்த போர் நிலைக்குதான் எல்லா நாடுகளுக்கும் உள்ளது.
அதனால் இனிமேல் ஒரு நாட்டை முழுதாக யாராலும் கட்டுப்படுத்த முடியாது உதாரணம் மூன்று வருடங்களால் நடக்கும் ரஷ்ய, உக்ரையின் போர்.
போர் தந்திரம், போர் யுக்திகள் எல்லாம் மாறிவிட்டது.
அதனால் அமெரிக்காவின் அடாவாடி கைப்புள்ளையான இஸ்ரேல் இதை மரமண்டையில் ஏற்றிக்கொள்ளவேண்டும்.
நட்புடன்... 💐
:-Rk. Guru
Astrologer, Social Activist
Life & Spiritual Counseller
Whatsapp: +917904507839
(Share this post...)
Sunday, February 9, 2025
மகிழ்வித்து மகிழ்
தமிழில் எனக்கு பிடித்த வார்த்தைகள்:
"மகிழ்வித்து, மகிழ்"
இந்த இரண்டு வார்த்தைகளை கொண்டு நாம் அறத்தின் வழி சென்றால், நம் நாடும் செழிக்கும், வீடும் செழிக்கும். தீயதாக நாம் எடுத்துகொண்டால், அறம் விழும்.
தீயது என்பது பிறரை பொய்யாக மகிழ்வித்து, பின் அவர்களை வீழ்த்தி, ஒரு நேரம் தான் மட்டும் மகிழ்ந்து, காலப்போக்கில் அம்மகிழ்ச்சியும் சென்று, நோயில் வீழ்ந்து, மடிந்து போவது.
ஆனால் அறம் சார்ந்த மகிழ்வு என்பது நோய் கொண்டு இறக்கும் தருவாயிலும் "தான் வாழ்வில் மகிழ்வித்த நபர்கள் இன்னும் அறத்துடன் மகிழ்கிறார்கள்" என்ற
மகிழ்வுடன்
கண் துயில்வது. உயிர் செல்வது...
#நாம் வாழும் வாழ்வு, ஏதோவித ஒரு அர்த்தத்தை நமக்கு உணர்த்திகொண்டே உள்ளது.
அதில் ஒன்றே, " மகிழ்வித்து மகிழ்"...
:-Rk.Guru
Wednesday, April 17, 2024
இங்கு எதுவும் அழிக்கபடவில்லை, உருவாக்கபடவுமில்லை.
இருப்பது என்று சொல்வதற்குமில்லை, அது இல்லை என்று சொல்வதற்குமில்லை.. அது இருந்தால் என்ன.!? இல்லன்னா என்ன.!?
நிர்வாணம் நீ பிறக்கும்போதே தொடங்கியது. பல வருடம் நீ ஆடைபோட்டு மறைத்துகொண்டிருந்தாய்.
ஆடையை (ஆசை,ஆணவம்) துறந்ததால், நீ அதை கண்டுபிடித்துவிட்டாய். அங்கு நீ அதை தேடி அடிந்துவிட்டாய் என்பதல்ல.. இருப்பதை மீண்டும் நினைவுபடுத்திகொண்டாய், உணர்ந்துகொண்டாய் என்பதே..
ஆன்மிகத்தில் தேடிய அடைய ஒன்றுமில்லை.. இருப்பது அப்படியேதான் இருக்கிறது.
கடலுக்குள் நீந்திகொண்டு கடலை எங்கும் தேடவேண்டாம். நீ நீந்துவதுதான் கடல்.
எல்லாமே நீதான், அதனால்தான் கட+உள்(கடவுள்) என்றார்கள். உனக்குள் கடந்து செல், அதுவே கடவுள். அதுவே நீ, பின் நீயே கடவுள் என்பதை உணர்வாய.
:-Rk.Guru
rkguru3@gmail.com
(Share this post...)
கணவன் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு அமங்கலமாக
செய்யப்படும் சடங்குகள்
இந்து மதத்தின் அகோர முகத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.
கணவன் இறந்து ஏழாவது நாள் இறந்தவனுக்கு பிடித்த உணவுகளை படையலிட்டு, ஒப்பாரி வைத்து பின் இறந்தவனின் மனைவியை
தன் அம்மா வீட்டிற்கு அழைத்து வந்து விடுவார்கள். அதுவும்
இரவு பொழுதில் அழைத்து வருவார்கள் ஏனென்றால் அவளை யாரும் பார்க்கக்கூடாது என்பதற்காக, மறுநாள் சூரியன் வருவதற்கு முன்னே மீண்டும் அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
அப்பெண் தாய்வீட்டுக்கு வரும்வேலை பூவும், பொட்டும், தாய் வீட்டு சீர் என்று கொடுத்த புடவையை கட்டிகொண்டு சோகமாக ஒரு மூலையில் அமர்ந்திருக்க, அங்கு வருவோர் போவோர் எல்லாம் அப்பெண்ணை பார்த்துவிட்டு கண்ணீருடன் மூக்கை சிந்திவிட்டு செல்வார்கள்.
அப்போது அப்பெண்ணை பார்காதவர்களை பார்த்து சொல்லுவார்கள், "கடைசியா வந்து மூஞ்சிய பார்த்துட்டு போப்பா.. மறுபடியும் எப்போ அவள இப்படி பார்க்க போற..'என்று.
என்னிடமும் அப்படி சொன்னார்கள். "நான் ஏன் அப்படி பார்க்கணும்" என்று கேட்டேன்.
இதேதான் மீண்டும் கேட்கிறேன் ஏன் இந்த பழமையான பொறம்போக்குகள் வகுத்த அறம் கேட்ட விதியை தூக்கி சுமக்க வேண்டும்..? ஏன் நான் அப்படி பார்க்கனும்.?
அதாவது கடைசியாக முகத்தை பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்வதன் அர்த்தம், இனிமேல் அந்தப் பெண் சாகும்வரை கை நிறைய வலையல் இல்லாமல், பூவும், பொட்டும் இல்லாமல் இருப்பாள் அதனால் கடைசியாக மங்களகரமாக இருக்கும்போதே பார்த்துவிடுங்க என்பதுதான் அதன் பொருள்.
இந்த விதிகள் எல்லாம் ஏன் எப்போதும் ஆண்களுக்கு பொருந்தாமல் போகிறது.!?
பெண்களும் இதை எல்லாம் ஏன்.!?, எதற்கு.? என்று கேட்காமல்
அப்படியே ஏற்றுகொள்கிறார்கள்.!?
நான் இங்கு ஒரு விசயத்தை வலியுருத்த விரும்புகிறேன்.
ஒரு பெண்ணின் கணவன் இறந்தால் அவள் மிகுந்த சுதந்திரம் அடைந்தவளாக மாறுகிறாள். மாறவேண்டும்.
ஏனென்றால் ஒரு பெண்ணுக்கு முதன்மையாக கட்டுப்படுத்துபவன், அடக்குபவன்
அவனின் கணவனே.. அந்த முதன்மையானவனே இல்லாதபோது, அப்பெண் யாருக்கு கட்டுபடவேண்டும்,? யாருக்கு அடிபணியவேண்டும்.?
உண்மையில் பெண்ணின் சுதந்திரம், ஆணிடம் இருந்து முழுமையாக விடுதலை பெறும்போதே கிடைக்கிறது.
பெண்ணின் கணவன் இறக்கும்போது, அவள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. அவள், அவளுக்கான விருப்பப்பட்ட வாழ்க்கையை வாழலாம்...
அவள் இந்த சமூக நச்சரிப்பு கூட்டதிலிருந்து விலகி என்றும் சுதந்திரமாக வாழலாம்..
கணவனே கண் கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன், திருமணம் சொர்கத்தில் நிச்சயக்கபட்டு ஒன்று" என்ற பழைய மக்கிபோன பஞ்சாங்கத்தை தூக்கிபோட்டு அவள் வாழவேண்டும்.
இதைவிட அவள், திருமணம் என்ற பந்தத்தில் உள்ளே செல்லாமல் இருப்பதுதான் மிகச் சிறப்பு.
#இந்துமதம், நயவஞ்சகத்தனமான ஆண்களின் சூழ்ச்சியால் பின்னப்பட்டுள்ளது. அதில் பெண்களே முதல் பலியாகிறார்கள்.
:-Rk.Guru
(Must Share this post...)