Pages

Wednesday, August 17, 2016

இந்த சினிமாகாரனுங்களில் முக்கால்வாசி பேர்..!?60-70 லட்சம் வரை நா.முத்துகுமாருக்கு பல தயாரிப்பாளர்கள் கொடுக்கவேண்டிய பணமாம். பல செக்குகள் போலி மோசடி செக்காம். அவருக்கு உயர் மருத்துவம் பார்க்க போதிய பணம் இல்லாமல்தான் அவர் இறப்புக்கு காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால் அவரும் யாரிடமும் பணம் கேட்கவில்லை. சமாளித்துவிடலாம் என்றிருந்திருக்கிறார்.

படுபாவி பயலுக... 70 லட்சம் வரையும் பாக்கி வைத்து ஒரு அருமையான படைபாளியை ஏமாற்றிருக்கானுங்க.... இந்த உலகம் கேடுகெட்ட உலகம். நல்லவங்களதான் தேடிபிடித்து ஏமாற்றும்.

என்னை கேட்டால், நாம் நல்லவங்களாக இருக்கலாம் ஆனால் முட்டாளாக இருக்ககூடாது. நாம் யாரையும் ஏமாற்ற வேண்டாம் ஆனால் நம்மை ஏமாற்றவனிடம் மிகவும் ஜாக்ரதையாக இருக்கனும்.

இந்த சினிமாகாரனுங்களில் முக்கால்வாசி பேர் திருட்டு பயலுங்க. சினிமாவே ஒரு மாய உலகம்தான். அது வெளிபுற அழகு கவர்ச்சி கொண்டது. உள்ளே பல அழுக்குகளை சுமந்திருக்கும். சினிமாகாரனுங்க அடுத்து இன்னொரு கேடி பயலுக இருக்கானுங்க அவனுங்கதான் உலகமகா ஜித்தனுங்க அவனுங்கதான் அரசியல்வியாதிங்க... ஐய்யோ, சினிமாகாரனுங்களிடனும், அரசியல்வியாதிகளிடனும் நீங்க பேச்சு கொடுத்தா... சும்மா வக்கணையா பேசுவானுங்க... இந்த உலகமே அவனுங்க முப்பாட்டன் வாங்கி போட்ட சொத்துதான் என்று அலந்துவிடுவானுங்க.... ஒன்னா நம்பர் கேப்மாரிங்க பயலுங்க.. ஆனால் இவனுங்க இரண்டு பேரையும் விழுங்கி சாப்பிடுற இன்னொரு மிகபெரிய கேப்பாரி இருக்கான்... அவனுங்ககிட்ட இவனுங்க இரண்டு பேரும் எப்போதும் தொடர்பிலே இருப்பானுங்க... அவன்தான் கார்ப்ரேட் திருட்டு சாமியாரு...

இந்த மூனு கம்முனாட்டிகங்க சேர்ந்துதான் சாதாரண வெகுஜன மக்களை ஏமாற்றி சுரண்டி தின்கரானுங்க... இந்த மூனு பேருக்கு எச்ச காசை போடுபவன் யார் தெரியுமா.? கார்ப்ரேட் பெரும் முதலைகள். இதுதான் கேடிகளின் சைக்கிள் சிஸ்டம்.

நம்மதான் இவனுங்ககிட்ட இருந்து எச்சரிக்கையாக இருக்கனும். நேற்று வண்டி ஓட்டிகொண்டு போகும்போது என் வண்டிக்கு முன்னே சென்ற வண்டியில் ஒரு வாசகம் எழுதிருந்தது. அது, "உலகத்தை நேசி..! யாரையும் நம்பாதே..! என்று. அதை சொன்னவர் "தல" என்றிருந்தது. ஆமாம், நடிகர் அஜித்குமார்தான் சொல்லிருக்கார் போல... அஜித் ரொம்ப வாழ்க்கையில் அடிபட்டு வந்தவர். அதான் அப்படி ஒரு டயலாக் சொல்லிருக்கார்.

உலகத்தை நாம் நேசிக்கலாம் ஆனால் சில பேரை நம்பாமல் எப்படி இருக்க முடியும். நம்பிதான் ஆகனும். பெத்த புள்ள வயசான காலத்தில் நம்மை காப்பாத்தும் என்று எங்கோ ஒரு மூலையில் நம்பிதான் ஆகனும். கட்டனுன பொண்டாட்டி புருசனும், வாக்கபட்ட புருசனை பெண்ணும் நம்பிதான் ஆகனும். இதேல்லாம் நம்பிக்கை சார்ந்துதான் உள்ளது. இந்த உலகத்தில் மனிதர்களே இல்லாமல் வாழ்ந்தால் அதுவும் ஒருவித வெறுமையான வாழ்க்கைதான்.

நாம் மனிதர்களை புரிந்துகொள்ளவேண்டும். எவனை நம்பனும் எவனை நம்பகூடாது என்ற புத்தி தெளிவு நமக்கு வேண்டும். அப்படி இருந்தால் மனதில் எந்தவித குழப்பனும் நமக்கு வராது. இரண்டாவது ரொம்ப முக்கியமாக எதையும் பெரிதாக எதிர்பார்க்கக் கூடாது. வந்தா வருது வரவில்லை என்றால் போகுது. என்று இருந்துவிடவேண்டும் ஆனால் நம்மாலான்னா முயற்சியை மட்டும் செய்துகொண்டிருக்கவேண்டும்.

அர்த்தசாஸ்திரத்தை எழுதிய சந்திரகுப்த மௌரிய பேரரசில் வாழ்ந்த கௌடில்ய சாணக்கியன் என்ன சொல்லிருகிறான் என்பதை கீழே உள்ள படத்தில் இருப்பதை படியுங்கள். 


சாணக்கியன் நீதி மனிதர்களிடம் ஒருவித எதிர்மறை விளைவையே தோற்றுவிக்கும். நான் சொல்வது என்னவென்றால் நாம் மிகவும் நேர்மையாக இருக்கனும். இது நல்லறம் சார்ந்த விசயம் ஆனால் தன்னை ஏமாற்றுபவனின் காலடிதடம் நன்கு தெரிந்துவைத்திருக்க வேண்டும். நேர்மையை கையாள்வதில் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நேராக வளர்வதில் தவறில்லை ஆனால் யாருக்கு நேராக வளர்கிறோம் என்பதே முக்கியம். இங்கு சூழ்நிலையை ஆராய வேண்டும். அனுபவ புத்தியை கொண்டு சமயோசிதமாக செயல்படவேண்டும். எப்போதோ எதற்கோ சொன்ன சாணக்கியன் கருத்தைவிட, வாழ்க்கை நடைமுறை எதார்தை புரிந்துகொண்டு சொல்லும் என் கருத்து உயர்வானது.

இருட்டடைந்த மனம் கொண்ட மனிதர்கள். அவர்கள் இருட்டிலே வாழ்ந்து பழகிட்டார்கள். நீதி, நல்லோழுக்கம்,பண்பு, வாய்சொல் தவறாமை போன்ற அறம் சார்ந்த பண்பென்ற வெளிச்சத்தில் வராதவர்கள். வர தயங்குபவர்கள். இவர்களிடம்தான் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிருக்கு. 10 பேர் இருக்கானுங்க என்றால் அதில் 9 பேர் திருட்டு பயலுங்க... அதில் மீதி ஒருத்தன்தான் யோக்கியவன். ஆனால் அந்த யோக்கியவன் அந்த 9 பேரில் மறைந்திருப்பான். 9 பேரும் அவனை மேலே வரவிடாமல் மறைத்துவைத்திருப்பானுங்க. ஆ... அந்த ஒருத்தனைதான் நாம் கண்டுபிடித்து அவனிடம் நம் நம்பிக்கையை எதிர்பார்கனும். அவனே உங்களூக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருப்பான்.

வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு. இங்கு யாரையும் யாரும் குறை சொல்ல முடியாது அவங்க அவங்க ஒருவிதமாக வாழ்க்கையை பார்த்து மிரண்டு போய் இருக்காங்க.. மற்றும் ஆசையின் போதையில் எல்லோருக்கும் மாட்டிகொண்டு இருக்காங்க.. இங்கு நுகர்வோர் கலாட்சாரம் அதிகமாகிவிட்டது. ரொம்ப உஷாராக இருப்பவன் கூட போதை போன்ற ஆசையில் மாட்டிகொள்கிறான். சொல்லுவாங்க.. "எங்க அப்பன் நல்லா சம்பாதிச்சான் ஆனால் எல்லாத்தையும் கூத்தியால் வீட்டுல கொண்டுபோய் வச்சுட்டான். இப்ப நாங்க தெருவுல நிக்கிரோம்" என்று. மது, மாது போன்ற போதையில் விழுரவனுங்க நாட்டில் ரொம்ப அதிகம்.

என்னத்த நாம் செய்வது கலிமுத்தி போச்சு என்ற பெரு மூச்சு விட வேண்டியதுதான். போதிய மட்டும் உங்களை உங்கள் சார்ந்தவர்களை தற்காத்து கொள்ளுங்கள். எதையும் முன்னெச்சரிக்கையாக யோசித்து செயல்படுங்கள். பேச்சு, செயல் இரண்டும் கவனமாக இருக்கட்டும். எதற்கும் ஆதாரம் வைத்துகொள்ளுங்கள். ஒலி(ஆடியோ-வாய்ஸ் கால்) ஒளி(ஸ்பை வீடியோ), கையேழுத்து பிரிதி, தேவையானால் விரல்ரேகை பதிவு. இதனுடன் சேர்த்து சாட்சி சொல்ல மனிதர்கள் ஆதாரம் வைத்துகொள்ளுங்கள். அரசியல், அதிகார பலம் உள்ளவர்களை சிறிதேனும் தெரிந்துவைத்துகொள்ளுங்கள். நான் சொன்னது எல்லாவற்றிற்கும் உங்களை தற்காத்து கொள்ளும் வழிகள். இது செய்யும் தொழிலுக்கும் மற்றும் எல்லா உறவு அமைப்புகளுக்கு பொருந்துக்கூடியது. நாம் வட்டத்துக்குள் போவது தப்பில்லை ஆனால் வட்டத்தைவிட்டு வெளிவரவும் தெரிந்திருக்கனும். அவங்கதான் புத்தியை பயன்படுத்தும் அறிவாளிகள். உதாரணதிற்கு நீங்க தூங்கும் போதுகூட காலை ஆட்டிகொண்டுதான் தூங்கனும் இல்லன்னா... இவன் செத்துபோய்ட்டான் என்று மாலையை போட்டுவானுங்க... நான் இதை ஏதோ விளையாட்டாக சொல்லவில்லை எல்லாம் அனுபவ அடிபடையில்தான் இவை அனைத்தையும் சொல்கிறேன். இல்லையென்றால் கவிஞர். நா.முத்துகுமாரை 60 லட்சம் மேல ஏமாற்றுனானுங்களே அதுபோல்தான் நடக்கும். பாவம், மருத்துவம் பார்க்கமுடியாம ஒருபக்கம் பணம் ஏமாற்றம். அனாதையாக பொண்டாட்டி மற்றும் இரண்டு சின்ன குழந்தைகளை தவிக்கவிட்டு மன வேதனையுடன்தான் அவர் இறந்திருக்கார். ரொம்ப கொடுமை..

அதனால் நான் கடைசியாக மேலே சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். "நல்லவங்களாக இருங்க, ஏமாளியாக முட்டாளாக இருக்காதிங்க... நம்முடன் வாழும் பெரும்பான்மையான மக்கள் சரியில்லை.." அவனுங்களுக்கு சந்து கிடைக்சா அடிச்சு ஆளையே துக்கிடுவானுங்க... பின் யாருக்கும் தெரியாம இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டு "அவர் அப்படி, இவர் இப்படி" என்று அலந்துவிடுவானுங்க... அதனால் உங்களையும் உங்கள் சார்ந்தவர்களையும் பாதுகாத்து, மிகவும் எச்சரிக்கையாக இருந்து செயல்படுங்கள். நன்றி...!


நட்புடன்:

1 comments: