Pages

Sunday, February 14, 2016

பிரபஞ்சத்தில் மனிதா, நீ எங்கே...!?


நாம் பிறக்கும் போது தனியாகதான் இப்பூமியில் பிறந்தோம், இறக்கும்போது தனியாகத்தான் இறக்கபோகிறோம் ஆனால் இடைப்பட்ட காலத்தில் வாழும் வாழ்வு, ஒவ்வொருத்தரும் புரிதல் இல்லாமல்  நரகமாக்கிகொண்டு வாழ்கிறோம்.

வாழ்க்கைக்கு மிக முக்கிய தேவை பிறப்பு, இறப்பு பற்றிய புரிதலே...

நாம் யார்.? எதற்காக பிறந்தோம்.? எதற்காக வாழ்கிறோம்.? இதுவரை என்ன சாதித்தோம்.? இனிமேலும் என்ன சாதிக்கபோகிறோம்.? தன்னளவில் என்ன சந்தோசம் அடைந்தோம்.? அந்த சந்தோஷம் எவ்வளவு நாள் நீடித்திருந்தது.? என்ற பல கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து நம் மனதில் எழுந்தால், நாள்தோறும் ஆணவமும்,ஆசையும் கொண்டு அலையும் நம் மனது, அக்கேள்விக்கு விடை காணாமல் ஏங்கிதவிக்கும்.

அதன் தவிப்பில்தான் உருவாகும் தேடுதலுக்கான உண்மையாக ஆன்மிகம்...!

அது உருவழிபாடு, பூஜை, மந்திரம், தந்திரத்தில் வராது மற்றும் இது வேண்டும் அது வேண்டும் என்று கேட்டு வராது. அது தன்னால் வரும். அதன் அழகிய கால்தடம் நாம் அறிந்தே இருப்போம்..!

ஆம், அதுதான் உள்ளோளி தியானம் என்பது அத்தியானமே ஒருவர் தன்னை உணர்வதற்கான மாமருந்து.  அந்த மருந்து உங்கள் வாழ்வின் பிரச்சனைகளை தெளிவாக விளக்கும். அது அடுத்த கட்ட ஆன்மிக பரிமானதிற்கு உங்களை அழைத்து செல்லும்.
ஆங்கிலத்தில் Meditation என்ற வார்தையில் இருந்துதான் Medicin என்ற வார்தை பிறந்தது.
ஆம், மீண்டும் சொல்கிறேன் தியானமே உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கான மருந்து.
உங்களை உணர்ந்து கொள்ளாதவரை பிறரை எப்போது உணர்ந்துகொள்ள முடியாது இதைதான் புத்தரும் தன் வாழ்வின் கடைசியாக உச்சரித்த வார்தைகள் "அபோ திபோ பவ" (உனக்கு நீயே ஒளியாக இரு) என்று.

இரு மூச்சுக்கு இடையே அது உள்ளது. அங்கு நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் பிறப்பு, இறப்பும் கடந்து சாஸ்வதமாக, நித்தியமாக என்றும் அழிவில்லாதவராக இருக்கிறீர்கள்.

நாம் சுவாசிக்கும் சுவாசம் வெறும் காற்று மட்டும் இல்லை அது அறிவியல் பார்வைக்கு ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு என்ற வாய்வாகவே அறியும் ஆனால் இவை இரண்டையும் தாங்கி செல்லும் நுட்பமான ஒன்று 24 மணி நேரமும் இயங்கிகொண்டிருக்கிறது அதுவே உங்கள் சுவாத்தை வாகனமாக தாங்கி செல்கிறது. அதுவே பிரபஞ்ச உயிர்காற்றாகும். அதனையே யோகத்தில் பிராணன் என்கிறார்கள். அதுவே உங்கள் உயிரின் உட்கருவாகும். அதனுடந்தான் நீங்கள் பிறந்தீர்கள். வ்வுகரு நீங்கும்போதே இறப்பீர்கள்.

அந்த பிறப்பு, இறப்பை கடந்த சத்திய ஜீவிதம். இரு சுவாதிற்கு நடுவே மையமாக உள்ளது.
அதை குறித்து விழிப்புணர்வுடன் தியானம் செய்யவேண்டும்.  அதைதான் புத்தர் "அனா பனா சதி யோகா" என்கிறார். வேறு எந்த யோகமும் ஒரு ஆன்மிக சாதகருக்கு தேவை இல்லை. இந்த யோகமே போதும்.

பிறக்கும் போது மூச்சு இழுக்கிறோம் இறக்கும்போது மூச்சு விடுகிறோம். நாம் விடும் மூச்சே எல்லாவற்றிற்கும் ஆதாரம். ஒவ்வொரு நொடியும் சுவாசிக்கும் சுவாத்தில் பிறப்பும், இறப்பும் கலந்தே இருக்கிறது. அப்பிறப்பையும், இறப்பையும் மையாக தாங்கி நிற்பது ஒன்றே, அதுவே மையம், அதுவே நீங்கள். அதைதான் தியானத்தில் உணருங்கள்.

எந்த புனித நூல்களையும், எந்த சாமியும், எந்த மகான்களையும் வணங்கவேண்டாம் உங்களை நீங்களே வணங்கிக்கொள்ளுங்கள். நீங்களே முடிவில்லாத ஆதியும் அந்தமும்....
அண்டத்தில் உள்ளது பிண்டம், பிண்டத்தில் உள்ளது அண்டம்" என்றார்கள் சித்தர்கள். நாம் அனைவரும் அந்த மகாசக்தி பொருந்தியவர்கள்.  அச்சக்தியை உணர தியானமே சரியான வழிகாட்டி.

ஒரு நாள் 23.1/2 மணி நேரம் உங்கள் வேலைக்கு செலவிடுங்கள் மீதி 1/2 மணி தியானத்திற்கு செலவிடுங்கள். அதுவே உண்மையான செலவாகும்.

கண்ணை மூடி விழிப்புணர்வுடன், எண்ணங்களை கவனித்துக்கொண்டிருங்கள். ஒரு நாள் அல்ல ஒரு நாள் அந்த ஜீவித ஒளி உங்களை ஆட்கொள்ளும். அதுவே சத்திய ஜீவிதம். அதுவேதான் நீங்கள். அப்போது உங்களை நீங்களே முதன் முறை காண்பீர்கள். அதுவே நித்திய ஆனந்தம். அதுவே சத்+சித்+ஆனந்தம்(சச்சிதானந்தம்) அந்த ஆனந்தம் எந்த போலி வாழ்கையின் ஆனந்திற்கு ஈடுயிணையாகாது.

ஒருமுறை அந்த ஆனந்தத்தை சுவைத்துவிட்டால் உங்கள் ஆன்மிக பயணம் தொடங்கிவிட்டது.  பின் உங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. அந்த ஜீவித ஒளியே உங்களை வழி நடத்தும்.  அதுதான் புத்தர் சொன்னது அப்போது நீங்களே உங்களுக்கு ஒளியாக இருப்பீர்கள்.

இவையாவும் என் அனுபவம் கொண்டு அனுபவித்தே சொல்கிறேன். ஜீவித ஒளி இருப்பது உண்மையே புத்தர் சொன்னது உண்மையே அதற்கு நானே ஒரு சாட்சி என்னை நம்பலாம். நான் அற்ற நான் எதையும் அனுபவத்தில் உணராமல் சொல்லமாட்டேன், எழுதமாட்டேன்.
உங்களுக்கு வாழ்க்கை பற்றிய புரிதல் மற்றும் ஆன்மிக புரிதல் வர இங்கு இரு காணொளி காட்சி பதிவை பதிவிடுகிறேன் அதை பாருங்கள்.

ஒவ்வொரு நாளும் மறக்காமல் அக்காணொளியை பாருங்கள்.  அது ஒரு நாள் நிச்சயம் உங்களை தியானத்தில் அமரவைக்கும்.

ஒவ்வொருத்தருக்கும் புரிதல்தான் ஆரம்பம். புரிந்துவிட்டால் நித்திய ஜீவித பயணம் தொடங்கிவிட்டதே என்று அர்த்தம்....!

நன்றி.! வணக்கம்.!


நட்புடன்:

0 comments: