Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Thursday, February 4, 2016

சிறு நெருப்பு பொறி நெஞ்சில்...



          நம் சமூக உறவுகளை ஆராய்வதென்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுவும் குடும்ப உறவுகள் ஆய்வை எல்லாம் நான் அருகில் இருந்து பார்த்தது, ரசித்தது மற்றும் வெறுத்ததும் அவ்வுறவுகளின் ஆய்வை பற்றி சொல்வவேண்டுமென்றால் தெள்ள தெளிவாக சொல்லலாம். எனக்கு குடும்ப உறவுகளில் ரொம்ப பெரிய ஆதரவும், பாதிப்பு உண்டாகிருக்கு. இதையேல்லால் பற்றி எனக்கு பெரிய சந்தோசமோ, கவலையோ இல்லை. என் சுதந்திரத்தில் அவர்கள் தலையிடாதவரை அவர்களுக்கும் பிரச்சனை இல்லை, எனக்கும் பிரச்சனை இல்லை. தலையிட்டால்,  நான் நேரடியாகவே கேட்டுவிடுவேன். தயங்கமாட்டேன். 

நான் யாரையும் தனி நபர் விமர்சனம் செய்யமாட்டேன். என்னால் முடியும் உதவியை செய்வேன். அவர்களிடம் நான் காட்டும் அன்பில் எந்தவித குறையும் இருக்காது. அதையே அவங்க அதன் மேலாதிக்கதனமாக எடுத்துகொண்டால் மற்றும் என்னை கீழ்நிலைப்படுத்தி தனி நபர் தாக்குதல் தொடுத்தால் பிரச்சனை வேறோரு திசையில் பயணிக்கும். மீண்டும் சொல்கிறேன் யாரும் யாருடைய சுதந்திரத்தில் தலையிட உரிமை இல்லை. முடிந்தால் உதவியாக இருக்கலாம் ஆனால் உபத்திரமாக இருக்க கூடாது. அப்படிதான் உபத்திரமாக இருக்கிறார்கள் என்றால் பிறரின் மனகுமுறலின் தாக்கம் அவர்களை சும்மா விடாது, அது அவங்க தலைமுறையே பாதிக்கும். எனக்கு தெரிந்து எவ்வளவோ சம்பவங்கள் பார்திருக்கேன். பொண்டாட்டி பேச்சை கேட்டு பெத்த அம்மாவையே செருப்பால அடித்தவன், இன்றைக்கு உறவுகளின் மதிப்பு, மரியாதை இழந்து அவன் புள்ள, மருகளாலே அவமானபட்டு, பிச்சை எடுத்து தின்னாத குறைதான் அவ்வளவு கீழான வாழ்கை வாழுகிறார்.

நியாயமான விசயதிற்கு நாம் போராடி பிரச்சனை செய்தால் அது ஏற்புடையதே அதனால் பிறருடைய சாபமோ,வயிற்றெரிச்சலோ நம் வாழ்க்கையை ஒன்றும் செய்யாது. எது நியாயம்.?  எது நியாயம் இல்லை.? என்று நம் மனசாட்சிக்கே தெரியும். ஆனா, பிறரின் உடமை மேல் ஆசை வைத்து செயலாற்றினால், பிறரை வார்தைகளால் வஞ்சித்து தூற்றினால் நிச்சயம் வாழ்கையில் பாதகமான முடிவுகளே வந்து சேரும்.

என் சொந்தகார பொம்பல வாய திறந்தாலே பிறரை அவ்வளவு கேவலமாக மட்டமாகதான் பேசும். அவளின் பேச்சு கேட்கவே படுகீழ்தரமாக இருக்கும். இப்படியே போயிட்ட இருந்தது. ஒரு நாள் நல்லா ஓடி ஆடி விளையாடிய அவளின் பிள்ளை காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாகிட்டான். என்ன ஆனதோ என்று தெரியவில்லை அவனுக்கு இரண்டு காலும் வேலை செய்யவில்லை. அவனுக்கு என்ன என்னவோ மருத்துவம் பார்தாச்சு எந்த பயனும் இல்லை. ஒரே புள்ள இப்படி ஆகிவிட்டதே என்ற கவலையில் அவளின் கணவனும் செத்து போய்விட்டார். இப்போது அவளின் நிலைமை பார்க்க பரிதாபமாக இருக்கிறது. நல்ல திடகாத்திரமாக இருந்த பெண்மணி, இப்ப பார்க்க  நோயாளி போல் இருக்கிறாள்.  சில நாட்கள் முன் அவளை பார்தேன். என்னை பார்த்தும் ‘பொள பொள வென்று அழுதுவிட்டாள், “நான் என்ன பாவம் செய்ஞ்சேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி...” என்று குமுறி அழுதாள். செய்த பாவம் செயல்லதான் செய்யனும்மா.. பேசுர வார்த்தை போதாதா, அப்பேச்சே பாவதிற்கு ஈடானதுதான்.  நான் என்ன சொல்லமுடியும் அமைதியா அங்கிருந்து நகர்ந்துட்டேன்.

உறவுகளுக்கு பணம் காசு, கவுருவம், மதிப்பு, மரியாதை என்று வந்துவிட்டால் தலை கால் புரியாது எதுவேண்டுமானலும் செய்யலாம், எதுவேண்டுமானலும் பேசலாம் என்ற முடிவுக்கு வந்துடுறாங்க... அப்படி அவங்க பேசும் நியாயம் வாதம் இருக்க, அடேங்கப்பா, தீர்ப்பு சொல்லும் நீதிபதியே கூட தோல்வி அடைந்துவிடுவார். அவ்வளவு அருமையா தீர்ப்பு சொல்லுவாங்க... உறவுகள் என்றும் தன்னுடைய தவறுகளை சர்வ சாதரணமாக மறந்துவிடுகிறார்கள். ஒரு பிரபல அறிஞர் சொன்னது, அவர் பெயர் நினைவில்லை ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள்  நறுகென்று என் நெஞ்சில் ஏறிவிட்டது அதாவது, “மனிதர்கள் தன் தவறுகள் என்று வரும்போது அதை  நியாயப்படுத்தி வாதாடும் வக்கீலாக இருக்கிறார்கள் அதே தவறு பிறர் செய்யும் போது தீர்ப்பு சொல்லும் நீதிபதியாக மாறிவிடுகிறார்கள்” என்றார். இப்போ நாட்டுலையும், வீட்டுலையும் இதுபோல நடப்பதுதான் அதிகமாக இருக்கிறது.

 நான் தினமும் காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். நாலு மணியில்  இருந்து ஆறு மணி வரை நடைபயிற்சிதான் அப்படி இன்று நடைபயிற்சி போகும்போது எதையும் நினைக்க கூடாது எல்லா சிந்தனையும் கழித்து போடனும் என்று நினைத்துகொண்டுதான் நடப்பேன். ஆனா இழவு, எங்கிருந்துதான் இந்த உறவுகளின் சிந்தனை வருமோ என்று தெரியாது. நான் இந்த  உறவுகளை பற்றி ஒரு ஆய்வு கட்டுரையே பல்கலைகழகத்தில் சமர்பித்தால் நிச்சயம் எனக்கு பி.எச்.டி பட்டம் தருவார்கள் என்று எதிர்பார்கலாம். நல்ல சிந்தனையும், நொல்ல சிந்தனை எல்லாம் சேர்ந்தேதான் வரும். பல சிந்தனைகள் வேண்டாம் என்று மறந்துவிடுவேன். சிலது அனுபவம் ஏதார்தமாக இருக்கும் அச்சிந்தனைகளை அப்போதே காகிதத்தில் குறித்துவைத்துகொள்வேன். பின் அதைப்பற்றிய விசயங்கள் எழுதும் போது அதை மேற்கொள்காட்டி எழுதிவிடுவேன். அப்படி என்னதான் இன்றைக்கு வந்த அந்த “அலும்பல் உறவுகளின் சிந்தனை” என்றால், “பொதுவா எல்லா உறவுகளும் அதாவது மாமன், மச்சான், சித்தி, சித்தப்பா, பெரியப்பா, சகல, அண்னண், தம்பி, ஒன்னுவிட்ட பங்காளி, தூரத்து நண்டு, சிண்டு.. என்று இதுபோல உறவுகள் எல்லாம் ஒருவிதமா சேர்ந்து வாழும்ன்னுதான் ஆசைப்படுது. ஆனா, சேர்ந்து வரும்போது அதுல எல்லார் முன்னாடியும் தன் கெத்த காட்டது. நான் கேட்கிறேன், “இது எதுக்கு.?” எல்லா உறவுகளும் வேண்டும் என்றுதான் மனசு துடிக்குது, மதிப்பு, மரியாதை இழந்திட போறோம் என்று எல்லா உறவுகளை தேடி ஓடுது. ஆனா, எல்லா உறவுகளை நட்பு பாராட்டி, பின் அவங்களையே ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாக்குது. உறவுகள் வேண்டும் என்று சொல்லும் ஆனா உறவுகளை தூற்றிகொண்டிருக்கும். பிறரிடம் அன்பை வெளிபடுத்த தயங்குது ஆனா அன்பை எதிர்பார்கிறது. அன்பை வெளிபடுத்த அவ்வளவு கஞ்சதனம். ஆனா, பேச்ச மட்டும் பாருங்க அவ்வளவு வக்கனையா பேசும். இப்படி இருக்கும் உறவுகளின் அனுபவம் பொதுவாக நம் எல்லாருக்கும் இருக்கும் என்று நான் நினைகிறேன்.

இப்படி அவங்க, அவங்க இருப்பதால் அது உதவி என்பதை தாண்டி ஒருவித தொல்லை நிலைக்குதான் அது அழைத்து செல்லும். ஒவ்வொருவரின் போட்டி, பொறாமை இங்கிருந்தான் உருவாகிறது. இது போல இருப்பதே ஒருவித வியாதிதான்.

ஒவ்வொரு உறவுகளும் அவர்களை சுய விசாரணை செய்துகொள்ள வேண்டும். நாம் யாருக்காக வாழ்கிறோம்.? ஏன் இந்த நிலைமை.? இப்படி இருப்பதால் யாருக்கு  என்ன லாபம்.? இதில் நாம்  என்ன சாதிக்கப்போறோம்.? யாரை எதிர்த்து வாழ்கிறோம்.? கடைசியாக எதை கூடவே எடுத்துகொண்டு போகபோகிறோம்.? என்று உள் விசாரனை செய்தால், ஒரு சிறு நெருப்பு பொறி நெஞ்சில் கனன்றால் வாழ்வின் பார்வையே முற்றிலும் மாறிபோகும். 

மாறனும், மாறாட்டும் என்றுதான் நம் எல்லோர் நினைவும். ஏனென்றால் உறவுகள் இல்லாத வாழ்வும் நமக்கு கசப்பானதுதான் அதனால் மாறட்டும், மலரட்டும் என்று முடிப்போம்.

           மீண்டும் ஒரு அழகிய பொழுதில், இன்னொரு அழகிய சிந்தனை பதிவில் சந்திப்போம். நன்றி.!


         நட்புடன்:

0 comments: