Tuesday, November 23, 2010
ஓஷோ சொன்ன நகைச்சுவை புராண கதை....
ஒருமுறை ஓஷோவின் இளமை காலவாழ்வில் அவர் வாழ்ந்த பகுதியில் புராண நாடகங்கள் நடக்கும். இவர் நாடக நடிகர்களுடன் நல்ல நட்புடன் பழகிவந்தார். அவர்களின் நடிப்பில் சில மாற்றங்கள் செய்ய சொல்லி மக்களை சிரிக்க வைத்து கண்டு ரசிப்பார். இது நாடகம் நடத்துபவர்களுக்கு பெரும் இன்னலாக இருக்கும். அவர் தந்தையிடம் ஓஷோவை பற்றி சொல்வார்கள். அதனால் நாடக நடிகர்கள் இவருடன் பழகுவதை நாடகம் நடத்துபவர்கள் விரும்பவில்லை. அதனால் இவர் நாடக நடிகர்களின் தொடர்பு இல்லாமல் இருந்தார். ஓஷோவின் வீட்டிற்கு தட்சர் ஒருவர் வருவார். ஓஷோவின் வீட்டில் உள்ள மரவேலைகளை எல்லாம் அத்தட்சர்தான் செய்வார் அவர் ஒரு நாட நடிகரும் கூட இதை ஓஷோ தெரிந்து அவரிடம் "நான் சொல்வதை நீங்க கேட்பிங்கள" என்று கேட்க அதற்கு "அவர் தாரளமாக கேட்கலாம்" என்ன விவரம் என்று கேட்டதற்கு... நீங்க இன்று நடக்கும் நாடகத்திற்கு போகும்போது நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும் என்றார். அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
அன்று அவ்வூரில் நாடகம் நடக்கிறது. என்ன நாடகம் என்றால் இராமாயணயத்தில் வரும் கதையில் லட்சுமணன் எதிரின் விஷஅம்பு பட்டு மயக்கத்தில் சாகும் நிலையில் இருக்கிறார். இதை பார்த்த ராமனுக்கு பெரும் கவலை மருத்துவர் சஞ்சீவி மூலிகை இருந்தால் இவரை காப்பாற்றிவிடலாம் என்று சொல்கிறார். இதை கேட்ட அனுமன் அதை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்கிறார். அதற்கு மருத்துவர் அது அருணாசல பர்வதமலையில் இருக்கிறது அது இருளில் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும் அதுதான் அந்த மூலிகை அதை பறித்துக்கொண்டு வா என சொல்கிறார். அதை கேட்டு அனுமன் பறந்து சென்று மூலிகை எதுவென்று தெரியாமல் மொத்த மலையே பெயர்த்துகொண்டு வருவார். அதுதான் அப்போது நடக்கும் கதை. அட்டையில் செய்யப்பட்ட மலைபோன்றதில் மெழுவர்த்தி கொளுத்தபட்டு அதை அனுமன் தூக்கி கொண்டு வரும் போது அந்த தச்சர் அனுமனை கயிரு முலம் இழுக்கவேண்டும். ஆனால் தச்சரிடம் ஓஷோ சொல்கிறார் "நீங்க பாதி இழுத்து அப்படியே இருந்திடுங்க அதுக்கு மேல இழுக்காதிங்க" என்று அவரும் அதையே செய்கிறார்.
இச்சம்பவத்தை ஓஷோ சொல்கிறார்:
இப்போது லட்சுவணன் அடிபட்டு சாக இருக்கிறான். இராமன் சோகமாக பக்கத்தில் நிற்கிறான். ஆனால் வர வேண்டிய அனுமன் பாதிலே தொங்கிக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்த மக்களுக்கு ஒரே சிரிப்பு இதை அறிந்த நாடக மேனஜர் ஓடிவந்து கயிறை வெட்டி விடுகிறார். அனுமன் தொப்பென்று கிழே விழுந்து கோவம் அடைகிறார். ஆனால் இராமன் தான் பேசவேண்டிய வசனத்தை திரும்ப திரும்ப சொல்லிகொண்டே இருக்கிறான்.
அனுமனே, என் பக்தி நிறைந்தவனே நண்பனே" என்று..
அனுமனோ, "உன் நண்பர்கள் நாசமாய் போக! எனக்கு எலும்பு முறிந்துவிட்டது" என்றான். ஆனால் இராமன் அதே வசனத்தை சொல்லிகொண்டே இருந்தான். "என் தம்பி செத்துகொண்டிருக்கிறான்" என்று...
அதற்கு அனுமன், அவன் சாகட்டும் எனக்கு ஒன்று தெரியவேண்டும் யார் கயிறை அறுத்தது என்று அவன நான் கொல்லாமவிடமாட்டேன்! என்று கத்தினான். இதை பார்த்த மக்கள் வயிறு குலங்க சிரித்தார்கள். அவர்கள் சிரித்த சிரிப்பை கண்டு நான் மகிழ்ந்தேன். பின் என் தந்தையிடம் சென்று என்னை பற்றி பெரிய நாடகமே நடந்தது...
"பழைய பாரம்பரிய மதவாதிகளுக்கு சிரிப்பை ஏற்றுகொள்வது சிரமம்தான் மாதா கோயிலில் நீங்கள் சிரிக்கவே முடியாது. மதங்களுக்கு மதபண்பு வேண்டும். சில பண்புகள் காணப்படவே இல்லை அவற்றில் மிக மிக முக்கியமானவை நகைச்சுவை உணர்வு...
ஓஷோவின் வாழ்வின் நகைச்சுவை கதையும், கருத்தையும் படித்த அனைவருக்கும் நன்றி....
என்றும் நட்புடன்:
8 comments:
osho fan? welcome!
write more...:)
நல்ல நகைச்சுவை..
வேடிக்கையாக இருக்கிறது கதையும் ஓஷோவை பற்றி உங்கள் புரிதலும்.
முடிந்தால் ஓஷோவின் உண்மை கருத்துகளை படிக்கவும்.
அப்படியே இது ஓஷோவின் எந்த புத்தகம் என்ற குறிப்பை கொடுக்கவும்.
நன்றி.
அருமை வாழ்த்துகள்
சூப்பரா இருக்கு
நல்ல பகிர்வு நண்பரே
உண்மைதான்
மதம் வளர்ப்போர்
மனித நேயம்
வளர்ப்பதில்லை........
அவர் சொன்னது உண்மைதான் :) நல்லா பகிர்வு..
வயிறு குலுங்க சிரித்தேன்...
Post a Comment