ஒரு பிரச்சினை நம்மிடம் 'பலன் தராது' என்றால் கடைசிவரை பகையும் தீராது. ஒரு செயலின் தொடக்கம் எதுபோல தொடங்குகிறாதோ அதுபோல் முடிவும் அமைகிறது. இதில் நாம் பிரச்சனை தொடங்குவதற்கான நிலையைதான் கவனத்தில் கொள்ளவேண்டும். இதில் நல்ல செயல், தீயசெயல் எல்லாம் நம் எண்ணங்களை தாங்கி இருக்கும் மனம் சார்ந்த உளவியல் காரணங்கள்தான் அதை ஏன் நாம் அதே உளவியல் பூர்வமாக ஆராய்ந்து தீர்வுகாண முற்படகூடாது. ஏனென்றால் நம் செயலின் எல்லாவற்றிலும் தொடக்கம் இருந்தால் முடிவும் இருக்கும் அது அழிவானதாக இருந்தாலும், வளர்சியானதாக இருந்தாலும் தொடக்கமும், முடிவும் இருக்கும். இதில் நாம் வளர்ச்சியாவதைதான் கவனத்தில் கொள்ளவேண்டும். அதன் அடிபடையில் பார்த்தோமானால் வளர்சிக்கான எந்த செயலை செய்வோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். இதில் "விழிப்புணர்வு" எனபது மிக முக்கிய சொல்...
போராட்டம், புரட்சி இதன் மூலமே தீர்வு ஏற்படும் என என்னும் நாத்திகம் சார்த்த கருத்துடையோர் ஏன் தியானம் மூலம் ஏற்படும் விழிப்புணர்வை ஏற்க மறுக்கிறது. புத்தரை மேற்கோள்காட்டி பேசும் நாத்திகம் தியானத்தையும் அதன் மூலம் ஏற்படும் விழிப்புணர்வையும் முன்மொழியலாமே விழிப்புணர்வு ஏற்படுத்தினால் அவை உண்டானால் மக்களிடம் சண்டையும் தேவை இல்லை, சமாதானமும் தேவையில்லை..அது அது அதன் வழியே தொந்தரவு இல்லாமல் போகும்..ஒரு உதாரணத்திற்கு நான் உங்களை கோவமாக திட்டும்போது நீங்க கோவப்பட்டு என்னை அடிகிரீர்கள் என்று வைத்துகொள்ளுங்கள். இப்போது திட்டிய வார்த்தையை விட அடித்ததே வன்முறையாக போய்விடுகிறது. நான் திட்டியது உங்க மனதில் வலியை உண்டாககியிருக்கலாம் ஆனால் நீங்கள் அடித்தது என் உடலில் வலியை உண்டாக்கியது. இதில் வன்முறைக்கு வார்த்தையை விட உடம்பே பிரதானமாகிறது. இது ஒரு இனம், மதம் சார்ந்த அடிபடையில் நிகழும்போது இதன் வெடிப்பு படுபயங்கரமாக இருக்கும். இதன் தீர்வின் உள்ளாழத்தை எப்படி அறிவது.. கசப்பான சூழ்நிலையால் கோவமான எனக்கு உங்கள் மேல் உண்டான வார்த்தையா.? இல்லை நீங்கள் அதை சகிக்காமல் அடித்ததா.? சமாதானம் பேசும் இடத்தில் சமாதானம்தான் பேசியாகணும்..அடிக்கிற இடத்தில் அடித்துதான் ஆகணும் என்ற நிலை இருக்கும் போது இதில் தேவைகளை தேவையான நேரத்தில் தேடியும்,அடித்தும்தான் பெறவேண்டி இருக்கிறது விழிப்புணர்வு அற்று இருந்தாலும் அதைதான் செய்தாகவேண்டும் இருக்கிறது வாழ்வுக்காக...
எப்போதும் ஒரு நிலைத்தான் சிறந்தது என்று நினைத்து அதையே செயல்படுத்திக்கொண்டு மற்றவர்களையும் செயல்படவைத்தால் அது கால சுழற்சியில் மக்கிதான் போகும்..அதுபோல்தான் இந்த அகிம்சை தற்போது இம்சையாக இருக்கிறது. இது தற்போது நடைமுறை காலத்திற்கு ஏற்றதாக இருக்காது. இந்த அஹிம்சை ஓட்டு பொறுக்கி அரசியல்'வியாதி'காரணங்களுக்கு வேண்டும்யேன்றால் ஏற்றதாக இருக்கலாம். காந்திய தேசம், அஹிம்சை தேசம் என்று உலக நாட்டையே பொய் உரையாய் உரைக்கும் இந்நாடுதான் பொய்யாக மாவோஸ்ட் வேட்டையாடுதல் என்ற பெயரில் உள்ளூர் பழங்குடி மக்களை சுற்றி வளைத்து தாக்குகிறது. அஹிம்சை தேசம் என்ற சொல்ற நாடு ஏன்.? வன்முறை, மனித உரிமை மீறலை கட்டுகடங்காமல் நடத்திகொண்டிருக்கிறது. இதில் எல்லாமே வேஷம் போட்டுதான் நடக்கிறது.
எதிர்ப்பு இல்லாதவரை எல்லோரும் நண்பர்கள். ஒருவருடைய விருப்பு, வெறுப்பு மாறும்போதுதான் தாக்குதல் ஆரம்பமாகிறது. புலி குட்டி, நாயிடம் பால் குடிக்கலாம். அது புலியாகும்வரை...! உண்மை குணம் வெளிபடும்வரைதான் மனிதன் என்று நாம் நம்புவது. வெளிபட்டால் அது மனிதனும் இல்லை மிருகமும் இல்லை.. இதை நாம் எப்படி அறிந்தோம் பகுத்துதானே பகுத்தறிவது என்றால் பகுத்து அறிவதுதான் அது கல்லானாலும் சரி, கடவுளானாலும் சரி. கடவுள் கருத்துக்காக பிறர் மனம் புண்படும் என்று சமரசம் செய்யும் போது அச்சமரசம் மனம் சம்பந்தப்பட்டதாகிறது. கொள்கையை அடமானம் வைக்கும் ஒருவரை அதிகமாக பாராட்டுவதும் சமரசத்தீர்க்கு ஈடுதான் பாராட்டி பேசினால் அவர்கள் மனம் குளிரும் பின் சமரச திட்டம் தயாராகும் அப்புறம் எல்லாம் கலைந்துவிடும் மறுபடியும் தொடக்கத்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். அது உப்பு சப்பில்லாமல் தொடங்கிவிடும். பின் எடுபடாமல் போய்விடும்
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)
15 comments:
நல்ல பதிவு நண்பா..தொடருங்கள்..
இன்பம் எங்கே என்று தேடி தன்னைத் தொலைக்காமல் இருக்க வேண்டும்..
நல்ல ஆராய்ச்சி :)
பதிவுக்கு பதில் சொல்லும் பதிவாய் ஒரு பதிவிட்டுள்ளேன் வாருங்கள் தோழரே
http://marumlogam.blogspot.com/2010/11/2.html
//எதிர்ப்பு இல்லாதவரை எல்லோரும் நண்பர்கள்.///
சரியா சொன்னிங்க.. நல்ல பதிவு.. பகிர்வுக்கு நன்றி :-))
"உண்மை குணம் வெளிபடும்வரைதான் மனிதன் என்று நாம் நம்புவது. வெளிபட்டால் அது மனிதனும் இல்லை மிருகமும் இல்லை."
//////அருமையாக சொன்னீர்கள் நண்பா ///////
நல்ல பதிவு
ஜெனித்தா பிரதீப்
"எதிர்ப்பு இல்லாதவரை எல்லோரும் நண்பர்கள்"
மிக நல்ல பதிவு.. தொடருங்கள் வாழ்த்துக்கள்
//புலி குட்டி, நாயிடம் பால் குடிக்கலாம். அது புலியாகும்வரை...!//
உண்மை தான் தல :)
கலக்குங்க தல :)
அருமையான தகவல் நன்றி சகோதரம்.
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
mathisutha.blogspot.com
நண்பர்களே என்னுடைய இந்த பதிவிற்கு வந்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
http://vandhemadharam.blogspot.com/2010/11/blog-post_18.html
உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
சசிகுமார் (வந்தேமாதரம்)
ரொம்ப நாளா வந்து படிக்க முடியல.. இன்னைக்குதான் மொத்தமா படிச்சேன் ...
//எதிர்ப்பு இல்லாதவரை எல்லோரும் நண்பர்கள்
//
சூப்பர்! நல்லா சொன்னீங்க..வாழ்த்துக்கள்
இந்த பக்கத்தில் வைத்திருக்கும் படம் நான் உருவாக்கியது. மிக்க நன்றி இங்கே உபயோக படுத்தியதற்கு.
Guru
http://www.inbaminge.com
http://inbaminge.blogspot.com
புத்தரை மேற்கோள்காட்டி பேசும் நாத்திகம் தியானத்தையும் அதன் மூலம் ஏற்படும் விழிப்புணர்வையும் முன்மொழியலாமே!!!
sariyana line
Post a Comment