சுதந்திரத்திற்கு முன்பு, காந்தி இந்தியாவின் ஜனாதிபதி ஒரு பெண் இருக்க வேண்டும் என்றார். அதுமட்டும் இல்லாமல் அப்பெண் ஒரு தாழ்ந்த குல பெண்ணாக இருக்கவேணும் என்றார். ஆனால் சுதந்திரம் கிடைத்தவுடன் தான் சொன்னவை எல்லாம் மறந்து விட்டார் பழிய அரசியல்வாதி போல் ஆகிவிட்டார். நேரு ஒரு பிராமணர். அவர் ஒரு பெண்ணும் அல்ல.. மட்டும் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவரும் அல்ல..மறுபடியும் பிராமணர்களே அதிகாரத்தில் அமர்த்தப்பட்டார்கள். சுமார் 40 வருட மேலாக ஒரு பிரமான குடும்பம் இந்தியாவை அதிகாரம் செய்து வருகிறது. அது ஒரு அரசபரம்பரயாக ஆகிவிட்டது. மக்களாட்சியாக தெரியவில்லை. இந்த உண்மைய கொஞ்சம் நேரடியாக பாருங்கள் . காந்தி தன்னை ஒரு ஹிந்து சந்நியாசிபோலவே பாவித்துக்கொண்டார். ஆனால் மதத்தன்மை நிரம்பியவர் இல்லை. அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார் என்றால், இந்தியாவில் இந்துகள் அதிகம். ஆகவே அவர்களுக்கு ஏற்றவாறு, தன்னை மாற்றிக்கொண்டார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி ஓட்டு உரிமை வேண்டும் என்று டாக்டர்.அம்பேத்கார் வாதாடினார். நான் இதை முழுமையாக ஆதரிக்கிறேன் முக்கியகாரணம், இந்த இனம் மக்கள், சுமார் 5000 வருடங்களாக அடக்கி வைக்கப்பட்டவர்கள், எந்த உரிமையும் இல்லாதவர்கள், அவர்களுடைய சுமரியாதை அழிக்கப்பட்டது. அவர்களது ஜனத்தொகை கிட்டத்தட்ட இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் கால்பாகம் அவர்கள் செய்யும் வேலைகள் மிகவும் கீழ்த்தரமானது அதற்காக அவர்களை நாம் போற்ற வேண்டும், மதிக்க வேண்டும், அதற்கு பதிலாக , நாம் என்ன செய்தோம்.? அவர்களுடைய நிழல்கூட நம்மேல் படக்கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக இருந்தோம்.! அப்படி நிழல் பட்டால் நம்மை சுத்தம் செய்துகொள்ள, உடனே குளிக்க வேண்டுமாம்.!! என்ன ஆணவம்!!
அம்பேத்கார் கேட்டது மிகவும் சரியானதுதான் ஏனேனில், அப்பொழுத்தான், பார்லிமெண்டில் உள்ள அங்கத்தினர்களில் கால்பாகம் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரிதிநிதியாக இருப்பார்கள் இல்லாவிட்டால், அவர்கள் தங்களது குரலை எழுப்ப வாய்ப்பே கிடைக்காது. மனு ஏற்படுத்திய மட்டமான ஜாதி வேற்றுமைகள் களைவது எனபது முடியாத காரியம். இந்த நட்டு சரித்திரத்தில் மனு ஒரு சாபக்கேடு, பல லட்சம் மக்களின் சுயமரியாதையை, மனித பண்பை அழித்தவன் இவன்தான், அவர்கள் அனைவரும் ஆடு, மாடு போல் நடத்ப்பட்டார்கள் ஏன் அதை விட மோசமாக நடத்ப்பட்டர்கள்.
அம்பேத்கார் கேட்டது மிகவும் சரி ஆனால் காந்தி, அம்பேத்கார், தன் வேண்டுகோளை கை விடவேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். காந்தி கடைபிடித்த முறை தர்க்க ரீதியாகச் சரியில்லை தன்னுடைய பட்டினிப் போராட்டத்தால் மக்களின் அனுதாபத்தைப் பெற்று, ஒரு காரியத்தில் வெற்றி பெறலாம். அதற்காக அந்த காரியம் சரியாகிவிடாது இதை நன்றாக சிந்தியுங்கள். இது ஒரு சாத்வீக மன மிரட்டல் தான் பய முறுத்தல்தான் அதாவது "நீங்கள் நான் சொல்வதற்க்கு இனங்காவிட்டால் நான் சாப்பிடாமல் இருந்து தற்கொலை செய்து கொள்வேன்". இது பயமுறுத்தல் இல்லாமல் வேறென்ன..? பிறகு என்ன நடந்தது..? இந்த தேசத்தின் முக்கிய தலைவர்கள் அறிவிப்பை கைவிடாவிட்டால் காந்தி இறக்க நேரிடும் அதனால் நாட்டில் பெரிய கொந்தளிபே... ஏற்படும் தாழ்த்தப்பட்டவர்கள் மேலும் ஒதுக்கபடுவார்கள் ஏன் உயிரோடு எரிக்கப்பட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை ஏனெனில் இறப்புக்கு காரணம் இந்தத் தாழ்த்தபட்ட மக்கள்தான் என்று உயர் ஜாதி ஹிந்துகள் நினைத்து விடுவார்கள இது பல கேடுகளை விளைவிக்கும் என்று பயமுறுத்தினார்கள் அம்பேத்கார் எவ்வளவோ வாதாடியும் வெற்றி பெற முடியவில்லை கடைசியில் விட்டுக் கொடுக்கும்படியாகி விட்டது.
நான் அம்பேத்கார் நிலையில் இருந்திருந்தால், காந்தியிடம் "நீங்கள் தாரளமாக இறக்கலாம். உங்கள் இறப்பு, ஒரு வாதமாகாது இது ஒரு முட்டாள் தனமான செய்கை" என்றே கூறி இருப்பேன்.
ஒரு நிகழ்ச்சி
ஒரு அழகான பெண்ணை ஒரு அவலட்சணமான கிழவன் மணக்க ஆசைப்பட்டான். அவனுடைய வயது கிட்டத்தட்ட அந்த பெண்ணின் தகப்பனாரின் வயது இருக்கலாம். அவன் நம் காந்தியின் வழியை பின்பற்ற முனைந்தான் அவன், தன் பாயை எடுத்திக் கொண்டு அந்த பெண்ணின் வீட்டின் முன் விரித்து படுத்துவிட்டான் எல்லோரிடமும் "அந்த பெண்ணின் தகப்பனார், தன் பெண்ணை எனக்கு மனம் செய்து தரவில்லையென்றால், நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்" என்று அறிவித்தான். இப்பொழுது அவனை சுற்றி கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் அவன் மேல் அனுதாபம் கொண்டு "என்ன ஒரு காதல்..! இதை போன்ற காதலை கதைகளில்தான் கேட்டிருக்கிறோம். இந்த மனிதனை ஒப்பிட்டால் மஜ்னு, பார்ஹாதர் ஒன்றுமே இல்லை" என்று ஆளுக்கு ஆள் கூறினார்கள்
அந்த பெண்ணின் தகைப்பனர் மிகவும் கவலையடைந்தார். அந்த பெண்ணும் பயத்தில் நடுங்கியவாறு இருந்தால். பிறகு அந்த வீட்டை சுற்றி நின்று கொண்டு சத்தம் போடா ஆரம்பித்தார்கள் அவர்கள் "இந்த ஆள், பட்டினியால் இறந்துவிட்டால். அது உனக்கு ஆபத்தைக் கொடுக்கும் இந்த மனிதன் மிகவும் சாத்வீகவாதி மத நம்பிக்கையுடையவன் உடனே அவனது கோரிக்கையை நிறைவேற்று" என்று சப்தம் போட்டார்கள்.
அந்த பெண்ணின் தப்பனாருக்கு ஒன்றுமே புரியவில்லை. அவரது நெருங்கிய நண்பர்கள் அவரிடம் "நீங்கள் பழைய காந்தியவாதிகளை சந்தித்து ஆலோசனை கேளுங்கள் என்று கூறினார்கள் அவரும் அப்படியே ஒரு ஆளை கண்டுபிடித்து ஆலோசனை கேட்டார். அதற்கு அவர் இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. பக்கத்தில் ஒரு அசிங்கமான விபச்சாரி ஒருத்தி இருக்கிறாள். அவளுக்கு வயது அதிகம் நீங்கள் அவளிடம் சென்று ஒரு நுறு ருபாய்யைக் கொடுத்து தன் பாயை எடுத்துக் கொண்டு வந்து அவரது பக்கத்தில் படுக்கச் சொல்லவும். பிறகு, அவள் மக்களை பார்த்து "இந்த ஆள் என்னை கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்" என்று சொல்லச் சொல்லவும்" என்றார்.
அப்படியே அந்த விபச்சாரி செய்ய அந்த கிழவன் இரவோடு இரவாக தன் பாயை சுற்றிக் கொண்டு தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவிட்டான்..! இது எந்த வாதப் பிரதிவாதத்தில் சேர்ந்தது..!
இந்திய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில் அரசியல்தனம் கலந்திருகிறது. இதுவும் இந்துகளுக்கே சாதமானதாக இருக்கிறது.
என்றும் நட்புடன்:
4 comments:
உங்களின் கருத்து சிறிது ஏற்க குடியதுதன் ,,அதே நேரத்தில் வரும் காலங்களில் கூட அம்பத்கர் சட்டத்தை கடை பிடிக்க அவசியம் இல்ல. ஏன் என்றால்? தாழ்த்த பட்ட மக்களுக்கு என்று அனைத்து சலுகைகளும் கிடைத்து விட்டது உதாரணம் ஸ்டேட் பேங்க், முதல் அனைத்து கல்லூரிகள்,மருத்துவமனை போன்ற இடங்களில் தற்பொழுது தாழ் த பட்ட மக்கள் மிக உயர்த்த பதவியில் தன உள்ளனர் ...நம் இந்திய திற்கு நாம் அனைவரும் ஒரு குழந்தை தான் ஒரு காலத்தில் தாழ்தபட்ட மக்கள் கஷ்ட பட்டனர் (ஊனமாக) இருதனர் பிறகு அம்பத்கர் சட்டம் அவர்களை எழந்து நடக்க உதவியது
தற்பொழுது எல்லோரும் சமம் ஆக உள்ளனர் இனிமேலும் அணை வருக்கும் ஒரே சட்டம் வேண்டும் அப்பொழுது தான் பிரிவினை அகலும். மார்க் அடிபட யல் சீட் கொடுக்க வேண்டும் ..நேரு பிராமன் நா ? என்று எனக்கு தேறிய வில்லை அதே நேரத்தில் தகுதி அடிபடியில் தான் அவருக்கு பிரதமர் பதவி கொடுக்க பட்டது ...அதே நேரு விடம் காந்தி கு கருது வே ரூ பாடும் ஏற் பட்டது .பாகிஸ்தான் பிரிக்கும் பொழுது அதை பிரித்து பாகிஸ்தான் 40 கோடி கொடுத்து பிரித்தும் காந்தி தான் நேரு விற்கு இதில் உடன் படு இல்லை காந்தி உண்ணா விரதம் இருந்து தான் இதை பெரடர் ...எம் கருத்தில் உங்கள்ளுக்கு வருத்தம் இருந்தால் என்னை மன்னிக்க வேண்டு கிரான்
OSHO SOHO Thaan........
///நான் அம்பேத்கார் நிலையில் இருந்திருந்தால், காந்தியிடம் "நீங்கள் தாரளமாக இறக்கலாம். உங்கள் இறப்பு, ஒரு வாதமாகாது இது ஒரு முட்டாள் தனமான செய்கை" என்றே கூறி இருப்பேன்///
இதுதான் உண்மையும் கூட!!! உங்களின் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு.
அரசியலா.. ஒருமுறை பட்டது போதும்...
Post a Comment