Saturday, June 21, 2025
அமெரிக்காவின் ரவுடி இஸ்ரேல்
அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ, ஈரான் தலைவர் காமெனியை கொலை செய்துவிட்டால் நீங்கள் எப்படி ரியாக்ட் செய்வீர்கள்? உங்கள் பதில் என்னவாக இருக்கும்? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு புதின், "இப்படியான சாத்தியங்கள் குறித்து நான் விவாதிக்கக்கூட விரும்பவில்லை. இது கேள்விக்கு மிகச் சரியான பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
-------------------------------
# ரஷ்ய அதிபர் புதின் மிகப்பெரிய மூளைக்காரன்தான் என்ன ஒரு  சமார்த்தியமான பதில்.!!
" விவாதிக்க விரும்பவில்லை.. " என்றால் அவருக்கு தகுந்த பாதுகாப்பு எங்களால் கொடுக்க முடியும்.
"எங்கள தாண்டிதான் அவர தொட முடியும்..." என்பதுதான் புட்டின் சொன்ன பதிலின் ஆழமான பொருள் உள்ளது. 
அதனால் அமெரிக்காவவோ, இஸ்ரேலோ  சர்வாதிகார ஆதிக்க மனோபாவத்தை விட்டு தொலைய வேண்டும்.
இராணுவம் ஒரு நாட்டிற்குள் செல்லாமல் நவீன ஏவுகனை, ட்ரோன் மூலம் ஒரு நாட்டை அழிக்கலாம் தற்போது அந்த போர் நிலைக்குதான் எல்லா நாடுகளுக்கும் உள்ளது. 
அதனால் இனிமேல் ஒரு நாட்டை முழுதாக யாராலும் கட்டுப்படுத்த முடியாது உதாரணம் மூன்று வருடங்களால் நடக்கும் ரஷ்ய, உக்ரையின் போர். 
போர் தந்திரம், போர் யுக்திகள் எல்லாம்  மாறிவிட்டது.
அதனால் அமெரிக்காவின் அடாவாடி கைப்புள்ளையான  இஸ்ரேல் இதை மரமண்டையில் ஏற்றிக்கொள்ளவேண்டும்.
நட்புடன்... 💐
:-Rk. Guru
Astrologer, Social Activist 
Life & Spiritual Counseller 
Whatsapp: +917904507839
(Share this post...)







