Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Tuesday, August 31, 2010

நீங்க குற்றவாளி இல்லை என்றால் இதை படியுங்க...

 
"குற்றவாளிகள் உருவாவதில்லை உருவாக்கபடுகிறார்கள்" என்று சொல்வார்கள் இவை முற்றிலும்  உண்மை..குற்றம் உருவாவதற்கும் சமுகம் சார்ந்த காரணிகளும் அதில் நடக்கும் நிகழ்வுகள்களும் ஒரு காரணமாகவும் இருக்கிறது.

ஏசுநாதர், இருந்த ஊரில் ஒரு பெண் விபசாரம் செய்தால் என்று ஊர் மக்கள் அவளை கல்லால் அடித்து துரத்தி வந்தனர் அவள் எசுநாதரிடம் அடைக்கலாமானார். அப்போது ஏசுநாதர், "உங்களில் யார் ஒரு குற்றமும் செய்யவில்லையோ அவர்கள் இவள் மேல் கல்லை விசி எறியுங்கள்" என்றார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவரும் கல்லெறிய வரவில்லை..ஆம், இதில் நாமும் குற்றவாளி மீது கல்லெறிய முடியாது ஏனென்றால் நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் இச்சமூகத்தில் குற்றவாளிகள்தான். மக்களுக்கு சிறிய, பெரிய குற்றங்கள் தெரியாதவரை அவை குற்றமாக தெரிவதில்லை அவையே தெரியும்போது ஏற்கனவே அக்குற்றத்தை தெரிந்தவருக்கு கூட  மிக பெரிய குற்றவாளியாகதான் தெரியும் .தெரிந்தவர்களும் குற்றவளியாகத்தான் இருப்பான் அவன் குற்றம் வெளியே தெரியாதவரை...

கவுன்சிலரா இருந்தவன் அமைச்சரானால் எப்படி எல்லாம் சம்பாதிக்க வேண்டும் எனபது அவனுக்கு சொல்லிய தெரியவேண்டியதில்லை....உழல் செய்த பணத்தில் சட்டத்தில் அவன் தேவையான அளவுக்கு வளைத்து கொள்வான். இதில் அவன் செய்த குற்றம் எப்படி, எப்படியோ  நியாபடுத்தபடும்...ஜேப்படி திருடன் ஒருவன் திருடினான் என்பதற்காக கைதாகிறான்.  இவன் குற்றவாளி, குற்றவாளியாககூட ஆக்கபடுகிறான்..அதே பல கோடி உழல் செய்யும் அரசியல்'வியாதி' அவனும் மக்கள் பணத்தைதான் திருடுகிறான் அப்படியென்றால் அரசியல்'வியாதியும்' ஒரு ஜேப்படி திருடந்தானே...ஆனால் இவன் சமூகத்தால் மதிக்கபடுகிறான். அத்திருடன் மிதிகபடுகிறான் இதுதான் சமுகத்தின் பார்வையில் இருக்கும் குற்றத்தின் ஏற்ற இறக்கம்..

பெண்களின் பெருமையை  பற்றி மணிகணக்காக பேசுவார்கள் பெண்களை தாய் என்பார்கள் சகோதரி என்பார்கள் ஒரு படிமேலே போய் எங்கள் தெய்வங்களே பெண்கள்தான் என்பார்கள் ஆனால் திரைமறைவில் பெண்களிடம் அவர்கள்  செய்யும் லீலைகள் தெரிந்தால் நாறிவிடும்...வாய்ப்புகள் கிடைக்காதவரை எல்லோரும் யோக்கியவான்கள்தான் வாய்ப்புகள் கிடைத்தால் தெரிந்துவிடும் அவர்கள் உண்மை முகம்..

சமூக சுத்தத்தை பற்றி பேசுவார்கள் அரசாங்க எதையும் சுத்தமாக வைத்துகொல்வதில்லை என்று சொல்வார்கள் அது சரி இல்லை இது சரி இல்லை என்று ஒரு பட்டிமன்றம் வைத்தால் அவர்கள்தான் அதில் வெற்றி பெருமளவுக்கு அவர்கள் வாதம் இருக்கும் ஆனால் அப்படி பேசிவிட்டு சாதாரணமா எச்சிலை கண்ட இடத்தில் துப்புவார்கள், கண்ட இடத்தில் குப்பைகளை கொட்டுவார்கள், இன்னும் செய்யகுடாத செயல் எல்லாம் செய்வார்கள். ஒவ்வொருவரின் உண்மை முகம் தெரிந்தால் அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். இந்த மாதிரி தவறுகள் எல்லாம் எப்படி வருகிறது. இதுவும் ஒரு குற்றமான ஒரு செய்யலதான்...
 
ஒவ்வொருவரின் வாழ்விலும் தினம்தோறும் அறிவுக்கு அப்பாற்பட்ட செயல்கள்தான் நடக்கிறது. அதில் முக்கள்வாசி அருவருப்பாகதான் இருந்துகொண்டிருக்கிறது


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:   




(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

15 comments:

Riyas said...

//நீங்க குற்றவாளி இல்லை என்றால் இதை படியுங்க//

நான் படிச்சிட்டேங்க..

Unknown said...

///எல்லோரும் குற்றவாளிகளே பிடிபடும் வரை/// அதுதான் உண்மை நண்பர் ஆர்.கே அவர்களே

கணேஷ்... said...

//ஒவ்வொருவரின் உண்மை முகம் தெரிந்தால் அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் அதிக வித்தியாசம் இருக்கும்//
உண்மையான வரிகள் நெருங்கிப் பழகினால் தான் தெரியும் உண்மை முகம்.

அருமையான பதிவு குரு

தோழமையுடன் கணேஷ்.

ம.தி.சுதா said...

//...கவுன்சிலரா இருந்தவன் அமைச்சரானால் எப்படி எல்லாம் சம்பாதிக்க வேண்டும் எனபது அவனுக்கு சொல்லிய தெரியவேண்டியதில்லை.....//

உண்மை தான் சகோதரா....
எல்லா ஓட்டிலும் நச்சென்று ஒரு குத்து போட்டிருக்கு.....
அதோட இன்னொன்று மீனுக்கு ஏன் யாரும் சாப்பாட போடல நான் போட்டிருக்கிறேன். காலை மறக்காமல் போடுங்க சகோதரா...

ம.தி.சுதா said...

@ Riyas said...
சகோதரா உங்க வீட்டு நாயை எனக்கு கொஞ்ச நாள் தாறிங்களா... யார் பதிவு போட்டாலும் உடன மோப்பம் பிடிக்குது....

Thenammai Lakshmanan said...

ஒவ்வொருவரின் உண்மை முகம் தெரிந்தால் அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் அதிக வித்தியாசம் இருக்கும்//

உண்மைதான் குரு.. சரியா சொன்னீங்க..

Jayaseelan said...

Vitthiyasamaana Pathivu...

Bawani ks said...

nanum padiciden...mudrilum unmai.
unmai pesum palakem kude payirciyaltan varum

பனித்துளி சங்கர் said...

மிகவும் சிறப்பான பதிவு நண்பரே . சிந்திக்கும் வகையில் உதாரணங்களுடன் முன் வைத்திருக்கும் விதம் சிறப்பு .
நீங்கள் சொல்வதுபோல் எதோ ஒரு வகையில் எல்லோரும் ஏதேனும் ஒரு தவறை செய்திருப்பார்கள் என்பது மட்டும் யாராலும் மறுக்க இயலாத ஒன்றுதான் . பகிர்வுக்கு நன்றி .

சீமான்கனி said...

குருஜி சொன்னா அப்பீலே இல்லை...

nilaamathy said...

உண்மையான வரிகள்

Palani said...

உண்மை தான். யார் மற்ற முடியும். நாம் தான் !

Anonymous said...

//வாய்ப்புகள் கிடைக்காதவரை எல்லோரும் யோக்கியவான்கள்தான் வாய்ப்புகள் கிடைத்தால் தெரிந்துவிடும் அவர்கள் உண்மை முகம்..//

சரியா சொன்னீங்க நண்பரே.... நெத்தியடி பதிவு.... கலக்குங்க....

மங்குனி அமைச்சர் said...

வாய்ப்புகள் கிடைக்காதவரை எல்லோரும் யோக்கியவான்கள்தான் வாய்ப்புகள் கிடைத்தால் தெரிந்துவிடும் அவர்கள் உண்மை முகம்..///

இப்படியெல்லாம் உண்மையை ரோட்ல போட்டு உடைக்க கூடாது

தனி காட்டு ராஜா said...

//பெண்களின் பெருமையை பற்றி மணிகணக்காக பேசுவார்கள் பெண்களை தாய் என்பார்கள் சகோதரி என்பார்கள் ஒரு படிமேலே போய் எங்கள் தெய்வங்களே பெண்கள்தான் என்பார்கள் ஆனால் திரைமறைவில் பெண்களிடம் அவர்கள் செய்யும் லீலைகள் தெரிந்தால் நாறிவிடும்...வாய்ப்புகள் கிடைக்காதவரை எல்லோரும் யோக்கியவான்கள்தான் வாய்ப்புகள் கிடைத்தால் தெரிந்துவிடும் அவர்கள் உண்மை முகம்..//

பெண்களே அந்த லீலை -யை விரும்பினால் தவறு ஓன்றும் இல்லையே தல ...