Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Thursday, August 5, 2010

இந்திய தண்டனை சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள்....

ந்திய விசாரணை சட்டத்தில் ஒருவர் விசாரணை என்ற பேரில் கைதாகினால் அவரை 15 நாள் சிறையில் வைக்கின்றனர் பின்பு போலிஸ் கஸ்டடிக்கு மனு செய்து விசாரணை கைதியை போலிஸ், உரி, உரி என்று உரித்து சில உண்மைகளை நிருபித்து பல பொய்களை சொடித்து விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மீறல் அதிகமாவே ஏற்பட்டு உள்ளே தள்ளுகின்றனர். 15 நாள் விசாரணை காலம் முடிந்து ஜாமீனில் வெளிவருகிறார். பின் ஒரு  வழக்கறிஞ்சரை வைத்து வழக்கை நடத்துகின்றார். இதில் அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தால் நிருபிக்கபட்டால் விசாரணை என்ற பெயரில் 15 நாள் ரிமான்ட் வைத்து பின்பு போலீஸ் கஸ்டடியில் வைத்து ஒருவரை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தல் அடைந்தவரானால் அவருக்கு இழப்பீடு யார் தருவது...குற்றம் அற்ற ஒருவருக்கு எப்படி 15 நாள் சிறை தண்டனை கொடுத்தார்கள். இத்தண்டனையால் அவங்க குடும்ப உறவுகள் எப்படியெல்லாம் பாதிக்கபட்டிருப்பார்கள். இது என்ன நியாயம் ...இது எதுவகையான சட்ட வடிவம் அப்போ விசாரணை என்ற பெயரில் யாரைவேண்டுமானாலும்  பிடிச்சு 15 நாள் ரிமான்ட் பண்ணலாமா, உள்ள தள்ளலாமா...இதற்கு இழப்பீடோ, நீதிமன்றம் மன்னிப்போ கிடையாதா...நீதிபதிகளெல்லாம் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா...அவர்களை விமர்சனம் செய்யகூடாதா...

தமிழ்நாட்டில் நெல்லையில் கல்லூரி வைத்து நடத்திய ராஜா போன்ற வாழ்கை வாழுகின்ற ஒரு கல்வி வியாபாரி ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார். அவரை கைது செய்து கீழ் கோர்ட்டில்  ஆஜர்செய்து போலிசாரால் குற்றபத்திரிகை தாக்கல் செய்து வழக்கு சில காலம் நடந்து அவர் குற்றம் அற்றவர் என்று தீர்ப்பு வருகிறது. பின்பு எதிர் சம்பந்தப்பட்டவர் ஐகோர்ட்டில் அப்பில் செய்து தண்டனை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை அடைகிறார். அதன் பின் இந்த கல்வி வியாபாரி உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கிலிருந்து எளிதாக விடுதலையாகிறார். கீழ் கோர்ட்டில்  தப்பித்து, மேல்கோர்ட்டில் தண்டனையாகி, உச்ச நீதிமன்றத்தால்  விடுதலையாகிறான். இது எதுவகையான சட்டம் என்று புரியலா... ஆட்சி அதிகாரம்  உள்ளவருக்கும், பணம் பலம்  பொருந்தியவருக்குமே  நீதி தலைசாய்த்திருக்கிறது. சந்தேகமே கொள்ளவேண்டாம்  நீதி அப்படிதான் இருக்கிறது.  சாமான்ய மக்களுக்கு நீதி என்றும் துரோகம் இழைக்கப்பட்டதாகதான் இருக்கிறது. இந்தியாவில் எனக்கு தெரிந்து எந்த அரசியல்வாதியும் ஒரு ஆயுள் தண்டனை கைதியாகவும், தூக்கு தண்டனை கைதியாகவும்  இருந்ததில்லை. இது அதிக பணம் படைத்தவனுக்கும் பொருந்தும். பணம் படைத்தவன் தேவை  அரசியல்வாதிக்கு தேவையாய்  இருக்கிறது.  அதனால இரண்டு பேருமே கூட்டு கலவாணிகலாகத்தான் இருக்கானுங்க....இவனுங்களுக்கு நீதிபொம்மை ஒரு தலையாட்டி பொம்மைதான்.

நீதி மன்றம் வெறும் சாட்சிகள் அடிப்படையிலும், அரசு தரும் தகவல் அடிபடையிலே இயங்குகிறது. ஆளும் அரசு அராஜ  அரசாக இருந்தால் நீதி எப்படி நேர்மையாக இருக்கும். "ஆயிரம்  குற்றவாளிகள்  தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது" என்று சொல்வார்கள் இது சரியான வாக்கியமா...? ஆயிரம் குற்றவாளி தப்பிகபடலாம் என்றால் அக்குற்றவாளிகள் என்ன நாட்டுகாக பாடுபட்டவர்களா...திருட்டு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு எல்லாம் அரங்கேற்றிதான் குற்றவாளியாகிறான் அவன் தப்பித்தால் நீதி இழைக்க பட்டவருக்கு அது அநீதியாகதானே இருக்கும். ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதற்காக பல கேடி கிறீமினல்களை தப்பவிடலாம என்றால் இது என்ன ஒரு முட்டாள்தனமான வாக்கியமாக இருக்கிறது பாருங்கள்...ஆனால் இங்கே இவ்வாக்கியத்திற்கு பொய்யாக சில குற்றவாளிகளும்  பல நிரபராதிகள்தான் தண்டிக்கபடுகிறார்கள். இதில் "வாய்மையே வெல்லும்" என்று வசபாட்டு வேற...எங்க ஊர் பக்கம் நீதிமன்ற லட்சணத்தை பற்றி சொல்வார்கள். "ஆடு காணோம் என்று கோர்டுக்கு போனா மாடு  வித்துதான் கேசு முடிக்குனும்"  இந்த நிலையில்தான்  இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் உள்ளது.  நீதிமன்றங்கள் முழுக்க முழுக்க ஆளும் அரசுக்கும், பணம் படைத்த முதலைகளுக்கும் ஆதரவாகவே மறைமுகமாக செயல்படுகிறது....இதில் எள்ளளவும் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இதுதான் உண்மை. தினமும் நாட்டில் நடக்கும் அரசியல் நிகழ்வையும், நீதிமன்ற  நிகழ்வையும் பார்த்தாலே நமக்கு புரிந்துவிடும். 

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

29 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

"ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது"///

இதெல்லாம் அந்த காலம் .. இப்போ இதெல்லாம், 25,௦௦௦ கொன்னாலும் 25 வருஷம் கழிச்சு வெறும் 2 வருஷம் தண்டனை தான்...

அதனால தைரியமா தப்பு பண்ணலாம்..

சட்டத்தில ஓட்டை இருந்தா அடிக்கலாம்... ஓட்டையில ஒரு ஓரமா சட்டம் இருந்தா என்ன பண்றது...

Cartoonist Chella said...

Sir! Thought provoking. idha nakkheranukku kodukkalaam.. media can work well on tis. especially nakeeran!

தஞ்சை மைந்தன் said...

/////"வாய்மையே வெல்லும்" ///
இந்த வாக்கியத்தில் எனக்கு உடன்பாடு வாய்மையே வெல்லும் என்பதால் தான் நிரபராதிகள் மாட்டி குற்றவாளிகள் மாட்டிக்கொள்கிறார்கள், "உண்மையே வெல்லும்" என்ற நிலை வரும்போது தான் இந்த நிலை மாறும், நீங்கள் சொல்வது சரி தோழா உளவியல் ரீதியாக ஒருவரை விசாரிக்கிறோம் என்ற பெயரில் அதிகபடியான மனித உரிமை மீறல்கள் ஆனால் இது போன்ற மனித உரிமை மீறல் நிரபரதியிடம் மட்டும் தான் நடக்கிறது, ஆனால் உண்மையான குற்ற்றவாளி வாய்தா வாங்கி வாங்கி நிதித்து கொண்டே போய் பிறகு வழக்கு முடிவதற்குள் இறந்தே போகும் நிலைதான் இதனால் எவ்வளவு வரிப்பணம் வீணாய் போகிறது இதை பற்றி எல்லாம் யாருக்கும் கவலை இல்லை மாற்றம் தேவை நாட்டில், உங்கள் கட்டுரை அருமை தோழா அருமையான முயற்சி பணி தொடர வாழ்த்துக்கள்

PRINCENRSAMA said...

//நீதி மன்றம் வெறும் சாட்சிகள் அடிப்படையிலும், அரசு தரும் தகவல் அடிபடையிலே இயங்குகிறது./


"அவை நீதி மன்றங்களல்ல; வழக்கு மன்றங்கள் மட்டுமே" என்றார் தந்தை பெரியார். அது எத்தனை உண்மையான வார்த்தை.

ajayan bala baskaran said...

தங்களிடம் தொடர்ந்து இது போன்ற சமூக அக்கறை சார்ந்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன் குரு .. வாழ்த்துக்கள்

http://rkguru.blogspot.com/ said...

@வெறும்பய
தைரியமா யார் தப்பு பண்ணலாம்....நீங்களா நீங்கள் என்றால் கண்டிப்பாக அது முடியாது. ஒன்னு நீங்க அரசியல் அதிகாரம் படைத்தவராக இருக்கும் இல்லை பணம் படைத்தவவராக இருக்கவேண்டும். இது இரண்டும் இல்லை என்றால் சட்டம் தன கடமையை செய்யும்.

http://rkguru.blogspot.com/ said...

@Bala
அனுப்புலாம்... கருத்திட்டமைக்கு மிக்க நன்றி...

http://rkguru.blogspot.com/ said...

@தஞ்சை மைந்தன்
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க ...

http://rkguru.blogspot.com/ said...

@PRINCENRSAMA
அவரு ஒரு தீர்கதரிசி...

கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க ...

Hector's Blog said...

இந்தியாவின் சட்டங்களை இயற்றுபவர்கள் சட்டசபையிலுள்ள அர‌சியல்வாதிகளாகும். இவர்கள் வேண்டுமென்றே இந்த ஓட்டைகளை விட்டு வைத்துள்ளார்கள். அப்போதுதான் அவர்களும் தப்பிக் கொள்ள வசதியாகவிருக்கும். பணமிருந்தால் வாய்தா வாங்கியே வருட‌க் கணக்கில் வழக்கை இழுத்துக் கொண்டே போகலாம். இறுதியில், இந்த சட்டங்களின் கீழே தண்டனையை அனுபவிப்பவர்கள் அப்பாவி ஏழை மக்கள் மட்டுமேயாகும்.

http://rkguru.blogspot.com/ said...

@இலக்கிய சாளரம்
கண்டிப்பாக எழுதுகிறேன் தோழா...

கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க ...

மும்தாஜ் said...

நீங்கள் சொல்வது சரி தான் தோழரே..
பணம் யாரிடம் உள்ளதோ அவர்களின் காலடியில் தான் இன்றைய சட்டம்,தீர்ப்பு எல்லாமே..
இதற்கு சரியான உதாரணம் போபால் விஷவாயு வழக்கு ...
15000 உயிர்களை கொன்ற ஒரு மனிதனுக்கு 25 வருடம் கழித்து நம் சட்டம் என்ன நீதியை தந்து விட்டது
தள்ளி போடப்படும் தீர்ப்பு எப்பவுமே பொய்யான தீர்ப்பு தான்...
இந்த கேடுகெட்ட அரசியல் சூழ்நிலை வரும் என்று தெரிந்து தானோ என்னவோ நீதிதேவதை தன்னுடைய கண்ணை கட்டி கொண்டு இருக்கிறாள் போலும்....
இன்று நம்மை ஆட்டி படைக்கும் பஞ்சத்தால் காசுக்காக குற்றத்தை ஒப்புக் கொள்ளும் கேவலமான நிலை உருவாகி உள்ளது...
இன்னும் எவ்வளவோ சொல்லி கொண்டு போகலாம்

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்....
உங்கள் மனக் குமுறல்கள் புரிகிறது தோழரே
நல்ல பதிவிற்கு நன்றி

Anonymous said...

சட்டத்தை திருத்தாமல் ஓட்டைகளுடன் வைதிருபவர்கள் அரசியல் வாதிகள். இதில் கட்சிபகுபாடு கிடையாது. அவர்கள் சுய ஆதாயத்திற்காக சட்ட ஓட்டைகளை பயன் பதுதிகொல்கிரர்கள்.
பணம் பதவி படைத்தவரிடம் சட்டம் ஒன்றும் செய்யாது.

John Rob said...

சட்டத்தை திருத்தாமல் ஓட்டைகளுடன் வைதிருபவர்கள் அரசியல் வாதிகள். இதில் கட்சிபகுபாடு கிடையாது. அவர்கள் சுய ஆதாயத்திற்காக சட்ட ஓட்டைகளை பயன் பதுதிகொல்கிரர்கள்.
பணம் பதவி படைத்தவரிடம் சட்டம் ஒன்றும் செய்யாது.

கணேஷ்... said...

//சாமான்ய மக்களுக்கு நீதி என்றும் துரோகம் இழைக்கப்பட்டதாகதான் இருக்கிறது.இந்தியாவில் எனக்கு தெரிந்து எந்த அரசியல்வாதியும் ஒரு ஆயுள் தண்டனை கைதியாகவும், தூக்கு தண்டனை கைதியாகவும் இருந்ததில்லை.


நீதி மன்றம் "வெறும்" சாட்சிகள் அடிப்படையிலும், அரசு தரும் தகவல் அடிபடையிலே இயங்குகிறது. ஆளும் அரசு அராஜ அரசாக இருந்தால் நீதி எப்படி நேர்மையாக இருக்கும்.//...............உண்மை வரிகள் குரு.

அருமையான பதிவு.

அன்புடன் கணேஷ்

Thenammai Lakshmanan said...

உண்மை.. குரு நல்ல சொன்னீங்க.. ஆடு காணோம்னு போனா மாடு வித்துத்தான் கேஸ் முடிக்கணும்..

சசிகுமார் said...

பதிவு சூப்பர் என் ஓட்டு போட்டாச்சு, கள்ள ஓட்டு போடலாமுன்னு பார்த்தா முடியல சாரி சார்

Anonymous said...

very nice article....congrats

ரிஷபன் said...

// சாமான்ய மக்களுக்கு நீதி என்றும் துரோகம் இழைக்கப்பட்டதாகதான் இருக்கிறது. இந்தியாவில் எனக்கு தெரிந்து எந்த அரசியல்வாதியும் ஒரு ஆயுள் தண்டனை கைதியாகவும், தூக்கு தண்டனை கைதியாகவும் இருந்ததில்லை. //
அதனால்தான் அவர்களுக்கு துளிர் விட்டுப் போச்சு..

Jey said...

// சாமான்ய மக்களுக்கு நீதி என்றும் துரோகம் இழைக்கப்பட்டதாகதான் இருக்கிறது///

உண்மை....

http://rkguru.blogspot.com/ said...

@Navalyooraan
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க ...

http://rkguru.blogspot.com/ said...

@mum
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க ...

http://rkguru.blogspot.com/ said...

@Anonymous
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க ...

http://rkguru.blogspot.com/ said...

@John Rob
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க ...

http://rkguru.blogspot.com/ said...

@கணேஷ்...
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க ...

http://rkguru.blogspot.com/ said...

@தேனம்மை லெக்ஷ்மணன்
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க ...

http://rkguru.blogspot.com/ said...

@சசிகுமார்
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க ...

http://rkguru.blogspot.com/ said...

@ரிஷபன்
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க ...

alex said...

இந்தியா எண்ட நாடு பசு தோல் போர்த்திய புலி , ஜனநாயகம் எண்ட போர்வையில் கொடுங்கோல் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது , ஒரு வேளை இதற்க்கு எதிராக ஒரு புரட்சி வெடித்தால் ,இந்த நிலை மாறுவதற்கு சாத்தியம் இருக்கிறது ., குரு அண்மையில் என் நெருங்கிய நண்பருக்கு இது போல ஒரு நிகழ்ச்சி நடந்தது .நீங்கள் எழுதியது முற்றிலும் உண்மை .