Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Wednesday, August 18, 2010

'உமாசங்கரை' பழிவாங்கிய அராஜ அரசு...


"ஒரு அரசு இயந்திரம் நல்ல முறையில் இயங்குவதற்கு காரணம் அவ்வரசு உழியர்கலே" என்று அறிஞர் அண்ணா அவர்களே கூறியிருக்கிறார் ஆனால் அண்ணாவின் தம்பிகள் என்று சொல்லிகொண்டு ஆட்சியில் அமர்ந்த அல்ப பன்னாடைகள்...இயந்திரத்தை, இயந்திரத்தை நிர்வகிப்பவரை(உமாசங்கர்.IAS) ஒழுங்காக இயங்கவிட்டார்களா... அரசு சலுகை என்ற பெயரில் உழியர்களுக்கு அவர்கள் கேட்கும் முன்னே பல சலுகைகளை வாரி இறைத்து தேர்தலுக்காக அவ்வுழியர்களை தன் கைவசமே வைத்துகொண்டு செயல் புரியும் அரசு..கையில் சிக்காமல் இருக்கும் நேர்மையான அதிகாரிகளை  பழிவாங்குகிறது.

அரசு உழியர்கள் லஞ்சம் வாங்க கூடாது என்பதற்காக லஞ்ச ஒழிப்பு துறை ஒன்று உள்ளது. இதில் கடைநிலை, இடைநிலை உழியர்கள் அப்ப அப்ப லஞ்சம் வாங்கி மாட்டுவது உண்டு. ஒரு குடும்பத்தில் அப்பன் ஒழுக்கமாக இருந்தால்தானே பிள்ளையை ஒழுக்கமாக வளர்க்க முடியும். அப்பன்  அயோக்கியனாக இருந்தால் பிள்ளை எப்படி வளரும். அப்பனை பார்த்துதான் பிள்ளை வளரும். அரசு ஊழல் இல்லாத ஆட்சி செய்தால் உழியர்களும் கையுட்டல் வாங்காமல் இருப்பார்கள் ஆனால்...."'நான் எப்படி வேணுன்னாலும் இருப்பேன் ஆனா நீ யோக்கியனா இரு' ஏன்னா, நான் பண்ற ஊழல் எனக்கு மட்டும்தான் ஆனா நான் அப்போ, அப்போ ஊழலில் இருந்து உனக்கு பல சலுகைகளை அறிவிப்பேன் அதுவரை நீ வாய்திருக்காமல் வேலைய பாரு" என்றால் அது எதுமாதிரி அரசு..இந்தியாவில் 'எந்த அரசியல்வாதி ஊழல் செய்தான்' என்று தண்டிக்கபட்டிருக்கான் இதை எண்ணி பார்த்தால் யாரும் இல்லை என்றுதான் என் எண்ணம். அப்படிப்பட்ட ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை  வெளிச்சத்திற்க்கு கொண்டுவரும் நேர்மையான அதிகாரி தடாலடியாக ஏதோ மொக்க(அல்ப) காரணம் சொல்லி மாற்றபடுகிறார் அல்லது தற்காலிக பணி நீக்கம் செய்யபடுகிறார்.

இதில் தற்பொழுது உமாசங்கர் என்ற IAS அதிகாரி அராஜக அரசால் பழிவாங்கப்பட்டார். இவர் வாங்கும் சம்பலத்திற்கும் மட்டும், மக்கள் நலனுக்கும் மட்டுமே பணி புரிந்துவந்த இவரை ஏதோ அல்ப காரணம் கூறி பணி இடை நீக்கம் செய்தது. எந்த வகையில் நியாயம். அரசியல்வாதி குடும்பம் நினச்சா முட்டிக்கும், இல்லனா ஒட்டிக்கும்...முட்டிக்கும் போது இன்னும் நல்லா முட்டவேண்டும் என்று அவ்வதிகாரி பயன்படுத்தப்பட்டார். இவ்வுண்மை தெரிந்தும் தன்பணியை நியாயமாக செய்து பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் வேலையில் முட்டிகனுவங்க மறுபடியும் ஒட்டிகனாங்க..ஒட்டிகுனதுக்கு தன்மானம் இல்லாத தமிழனுக்கு கவிதை வேற சொன்னாரு...அது என்ன கன்றாவி கவிதையோ எனக்கு மறந்துபோச்சு...இதன் பிறகுதான் உமாசங்கர் முழமையாக பழிவாங்கப்பட்டார். இவர் மேல் அரசு சுமத்திய  குற்ற சாட்டை நீதி மன்றம் புரகணித்தது.  (பராவில்லை நீதித்துறை சிலநேரத்தில் தன் கடமையை தவறாமல்தான் செய்கிறது...நீதித்துறைக்கு எங்கள் பாராட்டுகள்)  உமாசங்கர் சங்கதி, எதிர்கட்சிகள், பத்திரிகை துறை, மனித உரிமை போன்ற பல்வேறு அமைப்புகள் அவருக்கு ஆதரவாக அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் வரை போய்விட்டது. அப்போதுதான் அரசு மேற்கொண்டு எந்த நடவடிக்கையும்  எடுக்காமல் கைய பிசைந்து கொண்டு, விழித்துக்கொண்டு இருக்கிறது.

இப்போது இணைய பதியுலகம் ஊடாக நாங்கள் கேட்பது. அவருக்கு மீண்டும் பணி உறுதி செய்யப்படவேண்டும். உமா சங்கரை சுதந்திரமாக பணி செய்யவிடவேண்டும். அவரின் கோரிக்கைகள் நிறைவேற்றபடவேண்டும். அவரை பழிவாங்கும் போக்கை இவ்வரசு கைவிடவேண்டும்...

நல்ல நேர்மையான அதிகாரிகளை பகைத்துக்கொண்டு ஒரு அரசால் நீண்ட நாள் இருக்கமுடியாது. அப்படியிருந்தால் மக்கள் தேர்தலில் வாக்களிக்கும் போது அதற்கு பதில் சொல்லுவார்கள்...


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:    


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

12 comments:

Unknown said...

நிச்சியமாக குரு அவர்களே! என்னுடைய ஆதரவு உண்டு.

zerosyber said...

இவர்களை நாம் இன்று நேற்றா பார்க்கிறோம்?எப்போதுமே அப்படிதானே.

ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனை கொள்வது எப்படியோ அப்படிதான் உமா சங்கர் பிரச்னையும்.கண்டிப்பாக உமாசங்கர் பதவியில் அமர்தப்படவேண்டும்

zerosyber said...

இது வருந்த தக்க ஒன்று.நிச்சயம் பதவியில் அமர்தப்படவேண்டும்

zerosyber said...

இவர்களே இப்படி செய்தால் பி.ஜெ.பிபோன்றோர் ஏன் செய்ய மாட்டார்கள்.எதிரியை மன்னித்துவிடுங்கள் துரோகிகளை மன்னிகவேண்டாம் என்பது தான் ஞாபகம் வருகிறது

கனிமொழியாள் said...

அவர்கள்....
சொல்லுக்கு ஜால்ரா அடித்தால்...
நல்ல நிலையில் இருக்க முடியும்...
எதிர்த்தால், அதோகதிதான்...

இவரைப் போன்ற நேர்மையுடன் பணிபுரிபவர்கள் கண்டிப்பாக தேவை... மற்ற அரசு ஊழியர்களும் இவரைக் கண்டு பாடம் படிக்க வேண்டும்...

a.chandarsingh said...

"""இவ்வுண்மை தெரிந்தும் தன்பணியை நியாயமாக செய்து பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் வேலையில் முட்டிகனுவங்க மறுபடியும் ஒட்டிகனாங்க..ஒட்டிகுனதுக்கு தன்மானம் இல்லாத தமிழனுக்கு கவிதை வேற சொன்னாரு...அது என்ன கன்றாவி கவிதையோ எனக்கு மறந்துபோச்சு.""""


""KANGAL PANITHTHATHU

IDHAYAM INITHTHATHU"""

ITHUTHAN ANTHA KAVITHAI

தஞ்சை மைந்தன் said...

அருமை நண்பா

மும்தாஜ் said...

1 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலை மத்திய அமைச்சராக இருக்கும் ஆ.ராசா செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த போது, அவர் தலித் என்பதால் பழிவாங்குவதற்காக புகார் எழுகிறது என முதல்வர் கருணாநிதி கூறினார். ஆனால், அவருடைய ஆட்சியில் அரசு நிர்வாகம் சரியாக நடக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் பல்வேறு பணிகளுக்கு பந்தாடப்பட்டு வரும் உமாசங்கரும் ஒரு தலித் தான் என்பதை முதல்வர் அறியாமல் இருக்கமாட்டார். பழிவாங்கும் நோக்கோடு முதலாளிகள் ஒன்று சேர எடுக்கும் முயற்சிகளுக்கு அரசு துணை நிற்கப்போகிறதா இல்லையெனில் பழிவாங்கப்பட்டவர் பக்கம் நிற்கப்போகிறதா என்பது தான் தற்போது சமூகத்தின் முன் நிற்கும் கேள்வியாகும்.

நம் நாட்டு அரசியலில் நேர்மையாக இருந்த அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலை தான் இன்று உமசங்கருகும் ...
நமது கேடுகெட்ட அரசியலில் அவர் மட்டும் என்ன விதி விலக்கா?

பொறுத்திருந்து பார்போம் அரசு என்ன முடிவெடுக்கிறது என்று ...

மும்தாஜ் said...

நேர்மையுள்ள யாரும் உமாசங்கர் கு தான் சாதகமாக பேசுவார்கள்..
எனவே எங்கள் ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு RK சார்...
பதிவிற்கு நன்றி....

ramalingam said...

//பொறுத்திருந்து பார்போம் அரசு என்ன முடிவெடுக்கிறது என்று//
என்ன பொறுத்திருந்து பார்ப்பது. உமாசங்கர் மக்கள் மனதில் நின்று விட்டார். அரசுக்கு அழியாத அவப் பெயர்களில் ஒன்று கூட சேர்ந்து விட்டது. அவ்வளவுதான். விநாசகால புத்தி.

Babu Palamalai said...

நேர்மையாளர்கள் அரசியல்வாதிகளால் பந்தாடப் படுவது தொன்று தொட்டு நடக்கிற ஒன்றுதானே நண்பா!...
அதனால்தானோ என்னவோ அரசு அதிகாரிகள் பலரும் தலைமைக்கேற்ப
மாறிக்கொள்கிறார்கள் ..!
ஊதுகிற சங்கை ஊதுங்கள் ..!!

http://rkguru.blogspot.com/ said...

நேர்மையான அதிகாரிக்கு அதரவாக, நியாயமான கருத்திட்ட உங்கள் அனைவருக்கு என்நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்.