Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Saturday, August 14, 2010

எழுத்து, ஒளி, ஒலி எந்த பதிவு மக்களுக்கு சிறந்தது....

நாம் பார்க்கும் காட்சிகள் எதுபோலா இருக்கவேண்டும் எழுத்து வடிவிலா இல்லை ஒளி வடிவிலா இல்லை ஒலி வடிவிலா ஆனால் இதில் மூன்று வடிவில்தான் செய்திகள் மக்களுக்கு தெரிவிக்கபடுகிறது. சென்ற நுற்றாண்டுகள்வரை ஒளி, ஒலி வடிவம் வராதபோது எழுத்து வடிவமே சிறந்ததாக இருந்தது. தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகளின் பிறகு ஒலி, ஒளி வடிவத்திற்கு புது மெருகூட்டபட்டது. மக்கள் முன்னே செய்திகளையும், நல்ல கருத்துகளையும், தகவல்களையும் எடுத்து செல்வது எது சிறந்ததாக இருக்கிறது. அது காலத்தால் நிலைகொள்ளுமா...இல்லை தற்காலிகமாக வந்து சென்றுவிடுமா..இதில் எது நிலைபெரும் என்பதே என்கேள்வி...?

எழுத்து பதிவு: இவை நாம் பார்த்த நிகழ்வுகளை நம் சிந்தனையில் ஏற்றி காலசூழ்நிலைக்கு ஏற்றவாறு கருத்துகளை பிரித்து எழுத்து வடிவிலே கொண்டுவருகிறோம். இவை நமக்கு என்றும் பயன்படும் புத்தகங்களாக இருக்கின்றது. புத்தகத்தில் பதிய படும் நல்ல கருத்துகள் கல்லில் செதுக்கிய ஓவியங்களாக என்றும் நம்மனதில் நீங்க இடம் பெறுகிறது. அது அழகுக்கும், பல புரட்சி விதைக்கும் வித்திட்டுயிருக்கின்றது. கம்யூனிச சித்தாந்தம் உருவாவதற்கு  காரணமாக இருந்த காரல் மார்க்சின் மூலதனம் (capital ) என்ற புத்தகமே...அது எந்த ஒலியிலோ, ஒளியிலோ வரவில்லை...அது எழுத்து  வடிவில்தான் வந்தது.  உலகத்தின் ஜனநாயகத்திற்கு எதிரான மாற்று நிலையை கொண்டுவந்தது. ஏன் நாம் தினசரி  படிக்கும் செய்திதாள்கள் எழுத்து வடிவில் தானே பார்க்கிறோம், படிக்கிறோம் பின்பு  தகவல்களை எளிதாக உள்வாங்குகிறோம். இதில் எழுத்துதானே முதன்மையாக இருக்கிறது.  ஒவ்வொரு எழுத்தாளனின் வார்த்தைகளின் எழுத்துகள் அவனவனுக்கு சொந்தம் அவன் அதை தேவை கேற்றார்போல் மாற்றி அமைத்து அழகுபடுத்துவான் அதை மேலும் செம்மைபடுத்துவான். அது என்றும் 'ஆறஅமர  உட்கார்ந்து சாப்பிடுவதுபோல....' விரைவு சிற்றுண்டி (fast food) என்று சொல்கிறார்களே அது போல இல்லை....எழுத்தில் உள்ள வசதி வேறு எதிலும் வாராது. இப்போது நான் எழுத்தும் இந்த பதிவும் முன்னரே தீர்மானிக்கப்பட்டது இல்லை காட்சி வடிவிலோ பேசி பழகனது இல்லை ஒவ்வொரு எழுத்தை நான் தட்டச்சு செய்யும் போது சொல்லவேண்டிய கருத்துகள் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது இதை நான் காட்சி வடிவில் தரமுடியாது. நாம் எழுத்தில் பதிய படும் எழுத்துகள் அதில் உண்டாகும் மாற்றம் சமுகத்தின் பெரிய எழுற்சியை உண்டுபண்ணும் ஆற்றல் உடையது. ஆனால் அது உடனடியாக நடக்காது சில, பல காலங்கள் கூட ஆகலாம். அவை எழுத்தாளனின் கட்டுரைகளாகவோ, கவிஞசர்களின் பாடலாகவோ, அறிஞசர்களின் பொன்மொழிகலாகவோ, புரட்சி வித்திடுவோரின் புரட்சி எழுத்துகலாகவோ வெளிபட்டுகொண்டே என்றும் நிலைத்திருக்கும்.... நல்ல எழுத்து பதிவை காலத்தின் ஒரு பொக்கிஷமாக கொள்ளலாம். அதனால் எழுத்து பதிவு எனபது நம்பிக்கையின் ஆதாரம் சிந்தனையின் தொகுக்கப்பட்ட தொகுப்பு. அது என்றும் விரயமாகாது.

ஒளி பதிவு : சில சமாட்சாரங்களை எழுத்தை விட காட்சியின் மூலம் மக்களுக்கு எளிதாக தெளிவுபடுத்தலாம், நல்ல விழுப்புணர்வையும் உண்டாகலாம் உதாரணத்திற்கு (HIV) எயிட்ஸ் விளம்பரங்கள், பல நித்தய 'ஆனந்தாகளின்' சமாச்சாரங்கள் வெளி உலகத்திற்கு தெரிந்து போலி பிரமச்சரியம் பேசுவோரை உடைத்தது. இதில் நாம் சமூக நீதி அவலங்களை எழுத்தில் சொல்வதை விட காட்சி மூலம் பார்க்கும் போது கேள்விகள் ஆயிரம் பிறக்கும். மேல் மட்டத்தில் நடக்கும் அநியாயங்கள் அதை மறைமுகமாக எடுக்கபட்ட காட்சிகள் மக்கள் முன் கொண்டுவராமல் இன்னும் அதிகம் இருக்கின்றன ஆனால் லாப நோக்கில் வெளிப்படாமல் ஆளும் அரசுக்கு அடிபணிந்து இருகின்றது. அதில் சில காட்சிகள் போதும் பல ஆளும் அதிகாரங்கள் தரைமட்டம் ஆக்க ஆட்சிகளே கவரும் நிலைக்கு கொண்டு செல்லும் . ஒருவன் கையும் களவுமாக பிடிபட்டபோது ஒளிபதிவில்  பதிவாகினால் அப்போது குற்றவாளி, குற்றத்தை  ஒப்பு கொள்வதை தவிர வேற வழி இல்லை. ஒளி வடிவம் சென்ற நூற்றாண்டின் முடிவிலும், இந்த நுற்றாண்டின் தொடக்கத்திலும் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது. திரைப்பட  படைப்புகளின் படைப்புகள் சமூகத்திற்கு நல்ல சிந்தனையும் உண்டாக்கிருக்கிறது, சீர்கெட்ட நிலையும் கொடுத்திருக்கிறது. ஒரு நல்லது செய்யும் போது கெட்டதும் கூடவே வரும் என்பார்கள் அதுபோலதான் திரைப்படமும்...அந்த காலத்தில் மூட நம்பிக்கை வளர்ப்பது ரொம்ப எளிமையாக இருந்தது ஆனால் இப்போது ஒளிவடிவத்தால் சாத்தியமே இல்லை மூட நம்பிக்கைகள் ஒரு சில மணிநேரத்தில் எளிதில் உடைக்கப்படும். உதாரணம் பிள்ளையார் பால் குடித்தது.  தமிழ்நாட்டுல பால் குடித்த பிள்ளையார் ஒரே இரவில் கடல்கடந்து அமெரிக்க வரை போய்ட்டார். அந்த அளவுக்கு மூடநம்பிக்கைகள் மக்கள் எளிதில் கேள்விகள் கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறார்கள். பிள்ளையார் பால்  குடித்ததை விஞ்சானிகள் விஞ்சான பூர்வமாக ஆராய்ந்து ஒளி வடிவில் விளக்கம் கொடுத்தார்கள். அப்புறம்தான் அம்மூடநம்பிக்கை மக்கள் மனதில் இருந்து மெல்ல மெல்ல அமிழ்ந்தது போனது. நாம் பழைய நினைவுகளை காட்சி வடிவில்தான் பார்க்கவேண்டும் என்று நினைப்போம் நாம் குழந்தையாக இருந்தபோது எடுத்த ஒளிதொகுப்பு, நம் தாத்தா, பாட்டி கலந்துகொண்ட நிகழ்சிகள், நம் நண்பர்களுடன் சுற்றுலாவுக்கு சென்ற இனிய நாட்களின் தொகுப்புகள், இனிய திருமண நாளின் ஒளி தொகுப்பு..என்று இதுபோல சொல்லிகொண்டே போகலாம் இவையாவும் காட்சிகளாக பார்க்கும் போது நம் மனதில் உணர்வின் ஆனந்தம், கொந்தளிப்பு, பரிதவிப்பு, கோவம், படபடப்பு போன்ற உணர்வுகள் எல்லாம் வந்துவிட்டு போகும் நம் மனம் அதற்கு உடனடி தீர்வை நோக்கி அழைத்து செல்லும். ஒளி வடிவம் எனபது உடனடி செய்தி பரிமாறிகொள்வது புரிந்துகொள்வதை எளிமையாக்கி படிகாதவங்களுக்கும் புரியவைப்பது, சமூகத்தின் அடுத்த பரிமாணத்திற்கு கொண்டுசெல்வது... அதனால் நவீன செம்மைபடுத்தப்படும் சமூகத்திற்கு காட்சி வடிவம் தேவையானதாக இருக்கிறது.

ஒலி பதிவு : இது முழுக்க முழுக்க செவி சம்பந்தப்பட்டது...காது ஓட்டையானால் ஒலி பதிவே ஓட்டைதான்..ஆமாம் முழுசா கண்ணு தெரியாதவனுக்கு எதுக்கு கண்ணாடி அதுபோலதான்  ஒலிபதிவு தேவையற்றதாகிவிடும். நாம் கேட்கும்வரை எல்லா திசைகளிருந்தும் ஒலிகள் வந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் ஒலியை பதிவாய் சேமித்து கேட்கும்போதுதான் புதிதாக ஒரு உயிர் வந்தது போல இருக்கும். காதலன் காதலியிடம் தொலைபேசியில் கொஞ்சி பேசுதல் எனபது ஒலியின் மூலம்தான் சாத்தியம். அங்கே எழுத்துக்கோ, ஒளிக்கோ வேலை இல்லை மின்னலை விட இடி ஆபத்து குறைவுதான்... காதலர்களை விட காதல் ஆழமானதுதான். அதனால்தான் காதல் வாழ்கிறது. அது என்றும் ஒலிபோல் உயிர்தன்மையானது ..அந்த காலத்தில் ஊமை படம்  பார்த்தவர்கள் ஒன்றும் ரசனை இல்லாமல்தான் பார்த்தனர். அதுவே ஒலி சேர்க்கும் போது உயிரின் உணர்வுடன் ரசித்து பார்த்தனர். அண்ணாவின் மேடை பேச்சியின் ஒலிபேழை இன்றும் கேட்பவர் நெஞ்சினிலே தமிழ் உணர்வையுயம், சிந்திக்கும் திறமையும் வளர்த்துவிடும்...ஏன் இன்று உலகத்தின் பெரும் புரட்சி புயலாக மாறி இருக்கும் தொலைபேசி என்கின்ற தொல்லைபேசி அனைத்து மக்களாலும் ஏற்று கொண்ட ஒரு சாதனம்...சட்டையில எழுதுகோல் (pen) இல்லாமல் கூட இருப்பாங்க ஆனா தொல்லைபேசி இருக்காமல் இருக்க மாட்டாங்க அப்படி மக்களிடம்  ஊடுருவிட்டது. ஒலியை தாங்கிய இந்த அலைபேசிக்கு ஒலி இருந்தால்தான் சாத்தியம் இல்லை என்றால் இந்த சாதனமே பயனற்றதாகிவிடும்.  நம் தானை தமிழர் கருணாநிதியை, அம்மையார் ஆட்சியில் ஏதோ  உழல் செய்தார் என்று கைது பண்ணி அழைத்து சொல்லும்போது அதை ஐயாவின் முன்னே இருந்த குடும்ப தொலைக்காட்சி எடுத்த ஒலி பதிவில் "ஐயோ என்ன கொல்றானுங்கப்பா, கொல்றனுங்க...." என்ற  ஒலி பதிவு சேர்த்தால்தான் அவங்க தொண்டர்களால் மட்டும்  மிகவும் பரப்பாக பேசப்பட்டது. இது ஒலி வடிவம் இருந்ததால்தான் சாத்தியமானது. அதனால் ஒலிவடிவம் ஓளிக்கு உயிர் கொடுப்பது..இவை இரண்டும் இருந்தால்தான் காட்சி அமைப்பு சிறந்ததாக இருக்கும்.
                                       
எழுத்து, ஓளி, ஒலி வடிவத்தில் எந்த பதிவு சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கும்போது. நாம் எந்த பதிவும் சீக்கிரமாக கிடைக்கவேண்டும் என்றுதான் நினைப்போம் ஆனால் அப்பதிவுகள் ஐந்து வருடம் பல கொடுமைகளை பார்த்து, அனுபவித்து இருந்தாலும் கடைசி நேரம் தேர்தலின் போது பிரியாணி பொட்டலத்துக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு வாக்களிபபதுபோல எல்லாம் மறந்துவிடும் நம் மனதில் தங்காமல் அழிந்துவிடும். ஒவ்வொரு ஆட்சி நடக்கும்போதும் இப்படிதான் நடக்கிறது. நம் மக்களுக்கு மறக்குற நல்ல குணம் ரொம்ப அதிகம் என்னதான் விடிய விடிய கதை கேட்டாலும் சீதைக்கு ராமன் சித்தப்பா என்றுதான்  சொல்லுவாங்க... அதனால் ஒலிவடிவம் அப்ப அப்ப சூழ்நிலைக்கு ஒளியுடன் சேர்ந்து வரும்போதுதான் இரண்டுக்கும் அழகு..அதை நாம் மறக்காமல் இருந்தால்...ஆனால் எழுத்து அப்படி இல்லை அது ஒரு சிற்பியின் ஓவியம் போல் அதன் அழகு, அற்புதம், அதிசயம், எல்லாம் அதன் உயிர் ஓட்டத்தில் உள்ளடங்கியவை. இந்த பதிவையே நான் உங்களுக்கு தெரிவித்தது இந்த எழுத்துகள்தானே...இவை என்றும் எனக்கு உற்ற நண்பன்...லாவகமிக்கவன் வளைந்து கொடுப்பவன், தவறுகளை திருத்தி மறுவடிவம் கொடுப்பவன், ஏற்ற இறக்கங்களை அறிபவன், மனம் புன்படும் வார்த்தைகளை தவிர்த்து இனிய சொற்களை பயன்படுத்துபவன் அதுவும் நம் தாய் தமிழின் எழுத்துகளின் வரும் நளினம் வேற எதிலும் வராது. அதனால் என் தீர்ப்பு "எழுத்துகளுக்கு" உங்கள் தீர்ப்பு உங்கள் முடிவுகளுக்கே....விட்டுவிடுகிறேன்.

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:




(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி , உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

17 comments:

Unknown said...

தீர்ப்பு சரிதான். ஒளியுடன் சேர்ந்த எழுத்து நன்று(ஓவியம்/புகைப்படம்). உங்கள் எழுத்து நடை நீங்க பேசுவது போல இருக்கிறது. (ஒலி).

http://rkguru.blogspot.com/ said...

@கலாநேசன்
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க....

Unknown said...

//ஐந்து வருடம் பல கொடுமைகளை பார்த்து, அனுபவித்து இருந்தாலும் கடைசி நேரம் தேர்தலின் போது பிரயாணி பொட்டலத்துக்கும், பணத்திற்கும் ஆசைப்பட்டு வாக்களிபபதுபோல எல்லாம் மறந்துவிடும்///

அடுத்த பிரியாணிக்கு நாள் நெருங்கிடுச்சு ...

http://rkguru.blogspot.com/ said...

@கே.ஆர்.பி.செந்தில்
சூடா பிரியாணியும் ரெடியாயிடும்....

சசிகுமார் said...

அருமை

தஞ்சை மைந்தன் said...

////ஆனால் எழுத்து அப்படி இல்லை அது ஒரு சிற்பியின் ஓவியம் போல் /////
தோழா அருமையான வரிகள் இந்த எழுத்தின் சிறப்பை பற்றிய இந்த கட்டுரை சிற்பத்தை படைத்த நிங்களும் ஒரு நல்ல சிற்பிதான்

மும்தாஜ் said...

நல்ல பதிவு...
சரியான எடுத்துக்காட்டுகள்(கலைஞர் கத்தியது)
பிள்ளைகளிடம் 10 முறை படிப்பதை விட ஒரு முறை எழுதினால் மனதில் நன்றாக பதியும் என்று சொல்லுவோம்...
அது உண்மையும் கூட..
எனவே என்னுடைய ஓட்டும் எழுத்துக்களுக்கு தான் ...
நன்றி தோழரே,,

Anonymous said...

romba nalla iruku guru sir ungaludiaya karuthu..:)

vigneshnarayanan said...

கண்டிப்பாக எழுத்து பதிவு சமுதாயத்தில் பல மாற்றங்களை உண்டாக்கியுள்ளது,மேலும் அது தான் வரலாறுகளை நமக்கு சொல்லும் ஊடகங்களாய் உள்ளது, ஆனால் எழுத படிக்க தெரியாத பாமரருக்கும் செய்திகளை கொண்டுசேர்க்கும் வேலையை ஒலி மற்றும் ஒளி பதிவுகளே செய்கின்றது.... எழுத்து பதிவு எந்த அளவிற்கு வெற்றி பெருமென்பது எழுத்தாளரின் மொழி ஆளுமையை பொறுத்தது,படிக்க,படிக்க ஆர்வம் குறையாத புத்தகங்கள் உள்ளன,மேலும் எழுத்து பதிவு
நம்பகத்தன்மை கொண்டதா என்றால் அது அறிதியிட்டு கூற முடிவதில்லை,செய்திதாள்கள் சிறந்த உதாரணங்கள்... எழுத்து பதிவு வல்லமை பெற்றதா என்றால் அது குறைந்து வருவதாகவே உணர்கிறேன்,ஒலி மற்றும் ஒளி பதிவுகள் பலரையும் தன் வசப்பட்டுதியுள்ளது.. அதற்காக ஒளி மற்றும் ஒலி பதிவுகள் சிறந்தது என்று கூறவில்லை,அதிலும் பல காரணிகள் உண்மையை திரித்துவிடுகின்றன.... எழுத்து பதிவு சிறந்தது என்றால் அது நிச்சயம் எழுத்தாளரின் திறமையையும்,நேர்மையையும் கொண்டதாக இருக்க வேண்டும்... அப்படி இருக்கும்பட்சத்தில் மக்களுக்கு எழுத்து பதிவு சிறந்ததே!!

http://rkguru.blogspot.com/ said...

@தஞ்சை மைந்தன்
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க....

http://rkguru.blogspot.com/ said...

@mum
கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க....

http://rkguru.blogspot.com/ said...

@Anonymousகருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க....

http://rkguru.blogspot.com/ said...

@vigneshnarayananகருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க....

http://rkguru.blogspot.com/ said...

@சசிகுமார்
nandri sasi...

kippoo said...

"ஒவ்வொரு எழுத்தாளனின் வார்த்தைகளின் எழுத்துகள் அவனவனுக்கு சொந்தம் அவன் அதை தேவை கேற்றார்போல் மாற்றி அமைத்து அழகுபடுத்துவான் அதை மேலும் செம்மைபடுத்துவான். அது என்றும் 'ஆறஅமர உட்கார்ந்து சாப்பிடுவதுபோல....'
நல்ல எழுத்து பதிவை காலத்தின் ஒரு பொக்கிஷமாக கொள்ளலாம். அதனால் எழுத்து பதிவு எனபது நம்பிக்கையின் ஆதாரம் சிந்தனையின் தொகுக்கப்பட்ட தொகுப்பு. அது என்றும் விரயமாகாது."
அது ஒரு சிற்பியின் ஓவியம் போல் அதன் அழகு, அற்புதம், அதிசயம், எல்லாம் அதன் உயிர் ஓட்டத்தில் உள்ளடங்கியவை.

////பல உண்மைகளைத்தான் கூறி உள்ளீர்கள் நண்பா அதில் இவை மிகவும் பிடித்துள்ள்ளது.எழுத்துக்குதான் எனது தீர்ப்பாக உள்ளது////

Anonymous said...

எழுத்துக்களில் ஹைப்பர்லிங்க் மூலம் வேறு தரவுகளை தரமுடியும் இணையத்தில் என்பது மற்றவற்றிலிருந்து விசேடமானது. அதே சமயம் ஒலிப் பதிவானது பார்வையற்றோர் முதல் பாமரர் வரை அனைவருக்குமானது. அதே போன்று எப்படி ஒரு பக்க அளவினதான கதையை விட ஒரு திரைப்படக்காட்சி ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துமோ அதுபோன்றதொரு விடயம் ஒலி,ஒளிப் பதிவுகள் ! இம்மூன்றையும் தொடர்ந்து பலவருடங்களாகத் தமிழில் ”தனியாக” செய்துகொண்டிருப்பவன் என்ற பெருமைக்கும் அதே சமயம் சோகத்திற்கும் சொந்தமானவன் என்ற முறையில் உங்கள் இந்த கட்டுரையின் அலசல்கள் மேலும் பலருக்கும் இவ்விடயத்தை கொண்டுசெல்லும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

அன்புடன்..
ஓசை செல்லா

http://rkguru.blogspot.com/ said...

@Anonymous
புரிதலான கருத்திட்டமைக்கு மிக்க நன்றிங்க....