இன்றைய
பரபரப்பு உலகத்தில் எதையும் ஆரஅமர உட்கார்ந்து பேச யாருக்கும் நேரம் இல்லை (கேட்டா அப்படிதான் சொல்வோம்)
உருபடியா எதையாவது செய்யவதென்றாலும் அப்படிதான், ஏன் சாப்பிட கூட நேரம் இல்லாமல்தான் பல பேர் தவிக்கிறார்கள்.
இப்படி இயந்திர வாழ்கையாய் மாறிபோனது. இதில், “உங்களுக்கு, இலக்கிய வாசிப்பு இருக்கா...”
என்றால், “யோய்
போய்யா, போய் பொழப்ப பாருய்யா... இலக்கியமாவது, மண்ணாகட்டியாவது... எனக்கு பேப்பர் படிக்கவே நேரம் இல்ல, இதுல
இலக்கியத்தை வாசிகிறதா.?” என்று சலித்து கொள்வார்கள். அப்படியே ஒருவேலை அவர்களுக்கும் கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றில் படிக்க விருப்பம் இருந்தாலும் அதன் வார்த்தை நீளம், பொருள் அறியாத நிலையால் படிக்கும் பொறுமை இழந்து அதை
விட்டே வெளியே வந்துவிடுவார்கள். அப்படி இருக்கும்போது மீண்டும் அவர்களை இலக்கிய
வட்டத்தில் வரவைப்புது சிரம்ம். இதே கொடுமைதான் எனக்கும் பல
எழுத்தாளர்களால், நாவல், சிறுகதை என்று சொல்லி நாவலாய் எழுதினதை எல்லாம் படித்துவிட்டு இலக்கியத்தை விட்டே ஓடியிருக்கிறேன்.
நாவலை பொருத்தவரை எப்படி என்றால், அது ஒரு கிரிகெட்டில் நடக்கும் டெஸ்ட் மேட்சு போல, ஆடிட்டே
இருக்கலாம், வேடிக்கை பார்கிறவனை பற்றியே
கவலையே இல்லாம... இப்படிதான் நாவல் எழுதும் எழுத்தாளர்கள் படிக்கிறவன் சலிப்படைவானே என்று
யோசிக்கவே மாட்டாங்க, அவங்களால எவ்வளவு முடியுமோ
அவ்வளவு வார்தையை வஞ்சகம் இல்லாம இழுத்துட்டு போய் முடிவும் தெரியாம, ஆரம்பமும்
புரியாமா.. ஏதோ ஒரு திக்குல போய் முடிப்பாங்க...
இதில் நாவல்
கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு சிறுகதையாய் வந்தது. அது கிரிகெட் ஒன்டே மேட்சு போல, அதுவும் பார்க்க இப்போது ஒருவித சலிப்பு ஏற்பட்டுகொண்டிருக்கிறது. இப்போது அது டி20 மேட்சாய் நடக்குது. அது கிரிகெட் ரசிகர்க்க்கு விருவிருப்புக்கு பஞ்சமில்லாம இருக்குது.
இதே டி20 போலதான், சிறுகதையின் வடிவம் இப்போது சிறுசிறுகதையாய் சுருங்கி போனது. இப்போது
எல்லாம் வாசகர்கள் தெளிவாக இருக்காங்க... அவங்க தெளிவு எல்லாம் டிவில பல மெகா
சிரியல் பார்த்தே வந்துடுச்சு.... அதனால் வார்த்தை ஜாலம், என்று வார்த்தையை இழு இழு என்ற இழுத்தால் எழுத்தாளர்கள் எப்போதும் கல்லா கட்ட முடியாது. அதனால் தேவைக்கு ஏற்றார் போல் இலக்கிய
வடிவத்தையும் மாற்றி கொண்டே போயாக வேண்டும்.
“சுமை வேண்டாம் சாரம் மட்டுமே போதும்” என்று வாசகர்கள் தெளிவாக இருக்காங்க...
தமிழில் இந்த
சிறுசிறுகதைகளை எழுத்தாளர் சுஜாதா இருக்கும்போதே அவர் கையாண்டு எழுதிருகிறார். எனக்கும்
அதுபோல சிறுசிறுகதைகள் எழுதனும் என்று அப்போது இருந்தே ஒரு ஊந்துதல் இருந்தது அதனால் நேரம் கிடைக்கும்போது எழுதியதை எல்லாம் மொத்தமாக
தொகுத்து இங்கு வெளியிடுகிறேன். படித்து உங்கள் மேலான கருத்துகளை
தெரிவியுங்க்ள்.
நன்றி...!
மூன்று வார்த்தைக் கதை
தலைப்பு: ‘பல் தேய்ங்க..’ என்றாள் மனைவி.
கதை : பல்செட் கீழே விழுந்தது.
தலைப்பு:
‘அவனுக்கு தலைவார ஆசை’
கதை : கழன்று விடுமோயேன்று பயம்.
தலைப்பு: ‘கடற்கரை’
கதை: அங்கு அஸ்திக்
கரைத்துக்கொண்டிருந்தார்கள்.
தலைப்பு: ‘காதல்’
கதை: “கருவை கலைச்சுடு..” என்றான்.
தலைப்பு: ‘கன்னீத்தீவு
கதை: சிந்துப்பாத்தை,
சிங்கம் பார்த்தது.
தலைப்பு: ‘கல்யாண மேடையில் அரசியல்வாதி’
கதை: “தலைவர் வாழ்க, வாழ்க..!
தலைப்பு: ‘கல்லூரி’
கதை: “மச்சி, ஃபிகர் சூப்பர்..”
தலைப்பு: ‘தாய்மை’
கதை: தாரம் வந்ததும் போனது.
தலைப்பு: ‘பார்க் பெஞ்சில்
காதலர்கள்’
கதை: “எங்க வீட்டுக்காரரு பார்த்துட்டாரு...”
தலைப்பு:
‘காவல் நிலையத்தில் திருடன்’
கதை: போலிஸ், “மாமூலே கொடுப்பதில்ல...”
தலைப்பு:
‘குடும்பத்துப் பெண்’
கதை: “இன்னிக்கு மாமியார் தூங்கும்போது..!? “
தலைப்பு: 2075-ல் கணவன் மனைவி’
கதை:“நாளையோட ஒப்பந்தம் முடியுது..”
தலைப்பு:
‘கட்டிட மேஸ்திரி’
கதை: “சித்தாள் எப்போ வருவா..?
தலைப்பு:
‘வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருகை’
கதை: சதுர அடி 3000/-
தலைப்பு:
‘ஆம்புலேன்ஸ்’
கதை: போக்குவரத்து நெரிசலில் மூச்சு..!?
தலைப்பு:
‘ஊழல் வழக்கில் நீதிபதியின் தீர்ப்பு’
கதை: “தள்ளுபடி” வழக்குக்கு
மட்டும்...
தலைப்பு:
‘நடுனிசி இரவு’
கதை: முனங்கள் சத்தம் கேட்டது.
தலைப்பு:
‘கல்யாணம் ஆனவன் வாழ்வு’
கதை: “நான் பேச்சுலர்...” என்றான்.
தலைப்பு:
‘மாற்றாந்தாய்’
கதை: “தம்பியை மட்டும் கொஞ்சுகிறாள்”
தலைப்பு:
‘அறையில் காதலர்கள்’
கதை: “கடைசியாக நாம இங்கே..!?”
தலைப்பு: ‘அழகான பெண்’
கதை: “முகத்துல வியர்வை வடியுதே...”
தலைப்பு: ‘டாக்டரின் 100 ஆப்ரேஷன்’
கதை: போலி மருத்துவர் மாட்டிக்கொண்டார்.
தலைப்பு: ‘மாமியார் பாசம்’
கதை: “மருமக தாலியறுக்கனும்...” என்றாள்.
தலைப்பு:
“மூன்றுபேர் இரண்டு காதல்”
கதை: “அவனை கழற்றி விடு..”
தலைப்பு: நண்பனின் காதலி
கதை: “துரோகம் செய்யவில்லை” என்றான்.
இரண்டு வார்த்தைக் கதை:
தலைப்பு:
‘நாய் ஒன்று புகுந்துவிட்டது’
கதை: மாரத்தான் ஓட்டம்..
தலைப்பு: பாட்டி கதை சொல்லாமல் துங்கிவிட்டாள்
கதை: பாட்டியின் மரணம்.
தலைப்பு:குடிமகன்களின் காலை
உணவு
கதை:”சரக்கு இல்லையாமே...”
தலைப்பு:’கொசுவை கடித்த
எறும்பு’
கதை: “என் இரத்தம்..”
தலைப்பு:’2100-ல் பள்ளிக்கூடம்’
கதை: “தமிழா, அப்டின்னா...”
தலைப்பு:’குப்பைத் தொட்டியின்
கனவு’
கதை: “தங்கம் குப்பையாகுமா..?”
தலைப்பு:’நாட்டின்
சிக்கனத்தைப்பற்றி நீதி அமைச்சர்’
கதை:”பொண்ணு கல்யாணத்தை....! “
தலைப்பு: ‘விமான பாதையில் வந்த
பறவை’
கதை: “கடவுளே...” என்றார்கள்.
தலைப்பு::இன்றோடு அவளை’
கதை: டிவியை நிறுத்தினாள்.
தலைப்பு: ‘குழந்தை கடவுளிடம் பிரார்தனை’
கதை: சோறு காத்திருக்கிறது.
தலைப்பு:
‘பையன் பிறந்தான்’
கதை: “கன்னிகாதாரமா...”
கேட்கணும்.
தலைப்பு:’தலைவர்களின் அறிக்கை’
கதை:
“முன்பேழுதியது எங்கே...?”
தலைப்பு:’மலர்கள்’
கதை:இறுதி ஊர்வலம்..
தலைப்பு:’பூ விற்பவள்’
கதை: தலை வாடியது.
தலைப்பு:அவன் நடந்த பாதையில்
மின்னல்
கதை: அவளைக் கண்டான்.
தலைப்பு:இரு நாட்டு கிரிகெட்
வீர்ர்கள்
கதை: “புக்கிஸ் சொல்லிட்டானா..”
தலைப்பு:சுனாமியில் தேங்கிய
தண்ணீர்.
கதை: “குழந்தைகளின் கப்பல்...”
-151-
தலைப்பு:ஊழலுக்கு எதிராக
அமைச்சர் ராஜனமா..
கதை:தொழிலதிபர்கள், கொண்டாட்டம்...
தலைப்பு:நாடாலும் உரிமை
பெண்களுக்கும் வேண்டும் என்றான்.
கதை: “என்னடி சமையலு...”
தலைப்பு:சுதந்திரத்திற்கு
பின் இந்தியா
கதை: “கமிஷன் வந்துடும்...”
தலைப்பு: தந்தைப் பெரியார்
படம் போட்ட திருமண அழைப்பிதழ்
கதை: “மாங்கல்யம் தந்துனானே...”
தலைப்பு:கல்யாணப் புகைப்படம்
கதை:கடைகியாக சிரித்தது.
தலைப்பு: வாடகை வீடு
கதை: கல்லறை சொந்தமானது.
தலைப்பு:என்னை யாரோ
துரத்துகிறார்கள்.
கதை:என் நிழல்...
ஒரு வார்த்தைக் கதை
தலைப்பு: ‘கண்ணீர் அஞ்சலி’
கதை: காதல்
தலைப்பு:
அவள் உறவு அவனுக்கு தெரிந்துவிட்டது.
கதை: கொலை
தலைப்பு: என்னை நான் பார்த்தேன்’
கதை: புகைப்படம்
தலைப்பு: ‘நல்வரவு’
கதை: வணக்கம்.
என்றும் நட்புடன்:
0 comments:
Post a Comment