நான், நான் அல்ல.. எல்லாம் நீதான் ஐயா,
எங்கள் தாவோவே,
பிதாவே, அல்லாவே, புத்தரே...
என் மனமும் நீதான் ஐயா,
நீயே கடலாக
இருக்கிறாய் அதில் நீர் குமிழியாய் எங்கள் மனம் எழுகிறது. அதில் ஆசை எனும் மாயை நீதானே
பிரிதிபளிகிறாய். அது வெறும் மாய ஒளிதானே என புரியாதவர் அழுகிறார், ஆர்பரிக்கிறார், ஓடுகிறார், எல்லா
வினையும் செய்கிறார், பின் மரணிகிறார். அவருக்கு கால சக்கரம்
மீண்டும் சூழல்கிறது. அவர் மீண்டும் பிறக்கிறார்.
மாய ஒளி புரிந்தவர்
அமைதியாகிறார். அதை வேடிக்கை பார்கிறார். நீர்குமிழும்(மனமும்) நீதான் என்று புரிந்தவரிடம்
உன் திருவிளையாடல் நிறுத்தபடுகிறது. நீர்குமிழ் உடைகிறது. உன்னில் நான் கலக்கிறேன். நீயே, நீ, உன்னில் கரைத்துகொள்கிறாய்.
நீதான் ஐயா
நான், உன்னை புரிந்துகொள்ள இப்பிறவில் எனக்கு ஒரு சந்தர்பம் கொடுக்கிறாய்.
நான் வெற்று மூங்கிலாய் இருகின்றேன் நீதான் ஐயா, அதில் இசையாய்
இசைகிறாய். இங்கு என் முயற்சி எதுவும் இல்லை, எனக்கு எதுவும்
தெரியாது, எனக்கு எதாவது தெரிந்தது என்றாலும் அதுவும் உன்னில்
இருந்து வந்ததே இதில் என் பங்கு எதுவும் இல்லை. உன்னிடம் சராணகதி ஆவது மட்டுமே என் பங்கு... பார்க்கும்
இடம் எல்லாம் நீதானே
ஐயா... நீயே கொலை செய்கிறாய், நீயே கொலைபட்டு கீழே விழுகின்றாய்,
நீயே கொலைகான கருவியாகவும் ஆகின்றாய்.
எல்லாம் வெவ்வேறானது அல்ல எல்லாம் நீயே, ஒன்றாகவே இருக்கின்றாய்.
நான் உன்னை
அடையாளம் கண்டேன். நான் உன்னை கண்டு சிரித்தேன்.
நீயும் என்னை பார்த்து சிரித்தாய்.
என் மனமாக
நீ இருந்தாயே... நீயே ஆசைபட்டாய், நீயே கோவபட்டாய் ஆனால் நீ,
எனக்கு அறிவென்ற கயிற்றையும் கொடுத்தாய் அதில் நான், மனம் என்ற பாதள கிணற்றில் இருந்து மேலே ஏறிவந்தேன். உன் இன்முகம் கண்டேன்.
நீ எனக்காக அங்கு காத்துகொண்டுதான் இருந்தாய்.
என் தந்தையையே, தாயே, உன்னை எப்படி இவ்வளவு நாள், நான் காணாமல் இருந்தேன். இனிமேல் நான் உன்னைவிட்டு பிரியமாட்டேன். நீயும் என்னை
விடமாட்டாய் என்பதை நான் அறிவேன்.
மேலும் நான், உன்னை அணைத்துகொள்ள காத்திருக்கிறேன். நான் அறிவேன் அது சீக்கிரம் நிகழும்
என்று.
என் பிரபஞ்ச இருப்பே.... என் போலவே உன் பிள்ளைகளும், நீ உண்டாக்கிய நீர்குமிழ் பாதள
கிணற்றில் அள்ளளுற்று இருக்கிறார்கள். அவர்களையும் சீக்கிரம் மேலேற்ற வேண்டும். என்
அம்மையப்பனே, என் அருட்பெருஞ்ஜோதியே, என் தாயுமானவே...
எங்களை காத்தருளும். உன் கருணைக்கு ஈடுயிணையில்லை....
என் உடலாகவும், உயிராகவும், என் மனமாகவும் ஆகின்றாய். பின் வாழ்கை படகை
உன்னில் செலுத்துகின்றாய் அதில்தான் எத்தனை எத்தனை அச்சம், ஆசை,
எண்ணிலடங்கா துன்பம் என்ற புயலாக அல்லவா நீ
வீசுகின்றாய் உன்னை அடையாளம் கண்டு புரியாதவர், அப்புயலில் சிக்கி விழுகிறார்கள்.
புரிந்தவர்கள் படகை செலுத்தி உன் கரையில் வந்து சேர்கிறார்கள். எனக்கும் உன் கரை தெரிந்துவிட்டது
ஐயா, என் தாவோவே நீ எனக்காக(உனக்காக) இவ்வளவு நாள் காத்திருக்கின்றாய். நீயே என்னை
பெற்றெடுத்தாய் நீயே என்னை வளர்த்தாய் நீயே இப்போது என்னை அனைத்துகொள்வாய். உன்னில்
நான் கரைவேன்.
உன்னில் என்னை,
உணரவைக்க,
என்னில் ஆடுகிறாய்..
எண்ணிலடங்காமல்
ஆடுகிறாய்...!
நான் புதிய
பரிமானம்
கொண்டேன் உன் கருணையால்...!
உண்மையான
அன்பு, கருணை, நேசத்தை, நான், உன்னால்
அறிந்தேன்.
நான் என்பது
கூட இங்கு தவறாகும் நீயே நீ அறிந்தாய்.
என்றும் நட்புடன்:
0 comments:
Post a Comment