நாம் இளமையாக இருந்து, கண்ணாடி முன் நின்றபோது, கண்ணாடி
அழகாக காட்சி அளித்தது. இளமை மெல்ல மெல்ல
போய்கொண்டிருக்கும்போது இப்போது கண்ணாடி, அழகற்று போய்விட்டது. அதை பார்கவே பல
பேருக்கு பயமாக இருக்கிறது.
இதில் கண்ணாடி, அப்போது எப்படி இருந்தோ, அப்படியேதான் இப்போதும்
உள்ளது. அதற்கு எந்தவித அழகைபற்றியும்,
அசிங்கதைபற்றியும் கவலை இல்லை. அது முன் யார் போய் நின்றால் அப்படியே அது
பிரிதிபளிக்கும்.
எனக்கு தெரிந்தவர் சொன்னார், “பொதுவாய் பெண்கள்
தங்களை அதிக நேரம் அலங்கரித்துகொள்வதே தங்களின் அழகற்றதை மறைக்கதான் ஆனால் அழகான பெண்கள் தங்களை
அலங்கரித்துகொள்ள அதிக நேரம் எடுத்துகொள்ள மாட்டார்கள்.பியூட்டி பார்களுக்கும் போகமாட்டார்கள்” என்றார்.
அவர் சொன்ன பின்தான் எனக்கே ஒரு உண்மை தெரிந்தது,
“ஏன் பல பெண்கள் தங்களை அலங்கரித்துகொள்ள அதிக நேரம் எடுத்துகொள்கிறார்கள்” என்று.
சேரில் இருந்துதான் அழகான தாமரையும் வெளிவருகிறது.
அழகிய தாமரையின் விதையும் சேரில்தான் இருக்கிறது. அசிங்கம் என்று சொல்வதில் அழகும்
உள்ளடங்கி உள்ளது.
காமம் அசிங்கம் என்று மதங்கள் சொல்கிறது.
அதைபின்பற்றி பல மனிதர்களும்
சொல்கிறார்கள். என் அப்பா, அம்மா காமம் அசிங்கம் என்றிந்தால் அசிங்கம் என்ற
சொல்படுகிற காமத்தைபற்றி இப்போது நான் எப்படி எழுதமுடியும்.
ஒவ்வொரு புனித்திலும் ஒரு அசிங்கம் உள்ளது. ஒவ்வொரு
அசிங்கத்திலும் ஒரு புனிதம் உள்ளது.
மனம்தான் இது அழகு, அது அசிங்கம் என்று பிரிக்கிறது.
கண்ணாடி எப்போதும்போல் கண்ணாடியாகதான்
இருக்கிறது.
என்றும் நட்புடன்:
0 comments:
Post a Comment