Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Sunday, September 13, 2020

அன்பு பொய்யல்ல..


நாம் பொய் அல்ல.. நம்முள் குடியிருக்கும் மெய் பொய் அல்ல.. 

நாம் அன்பை உள்வட்டத்தில் தேடுகிறோம் ஆனால் அது வெளிவட்டத்தில் உள்ளது.

யாம் 20 வருடமாக புத்த ஆன்மிகத்தில் உள்ளேன். உண்மை அன்பின்தன்மையை அறிவேன். மனித மனத்தின் அன்பு, அன்பில்லை அது வியாபாரம்.

"நாய் கடித்திடுமோ.' என்று நாயை கண்டு நமக்கு பயம். அது, "நாம் அடித்திடுவோமோ.." என்று அதற்கு பயம். இது ஒரு உளவியல் சார்ந்த பிரச்சனை.  

பயம் என்ற இரண்டுக்கு நடுவில் அன்பு அடைபட்டு போயுள்ளது. 

நாம் இதுவரை பார்த்த நபர்கள் சுயநலனதிற்காக வாழ்ந்தவர்களையே பார்த்து பழகிவிட்டோம் அதனாலே இந்த விரக்தி, வெறுப்பு. இது இருக்கத்தான் செய்யும். தவிர்க்கமுடியாது. ஆனால் அப்படியே இருக்கவும்முடியாது. அதை கடந்த பார்வைக்கும் நாம் நகர்ந்தாகவேண்டும். அப்போது அங்கு தூய்மையான அன்பை உணரலாம். யாம் உணர்ந்துள்ளேன் நண்பா..

மனிதர்களுக்கு மட்டுமே சிரிக்கும் உணர்வு உள்ளது. ஆனால் பல பேர் விலங்காகவே இருக்க விரும்புகிறார்கள். 

#நாம் மனிதர்களை தேடுவோம். மனிதம்(அன்பு) சாகவில்லை..

:-Rk.Guru

13.9.2020

(Share this post...)

0 comments: