கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தில் ஒரு தனி மனிதருக்கு அளிக்கபட்டிருக்கும் உரிமை. ஆனால் ஜனநாயகத்தில் அச்சுதந்திரங்கள் இன்னும் விமர்சிக்க கூடியதாகதான் இருக்கிறது. எதுவெண்டுமானாலும் பேசிடலாம், எழுதிடலாம், என்று கேட்டால், அது இன்னும் வரை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஜனநாயக சுதந்திரம் என்பதே இன்னும் யாருக்கும் புரியாத ஒருவித குழப்ப நிலையிலே மக்கள் மனதில் உள்ளது. கேட்டால் பிறர் நம்பிக்கையில் நாம் தலையிட கூடாது, தனி மனித சுதந்திரத்தை பாழ்படுத்தகூடாது, பிறர் மதத்தை, சாதியை விமர்சிக்ககூடாது என்றேல்லாம் சொற்கள் பலவாறு பரந்துபட்டு இருக்கின்றன.
இதற்கு விளக்கம் நான் கொடுக்கிறேன். மனதில் நன்றாக பதியவைத்துகொள்ளுங்கள். "ஒரு பொது நபர் அவர் தன் நன்னடத்தையை காட்டி மக்களுக்கு சேவை ஆற்றுகிறார் அதனால் சில,பல லாபமும் அடைகிறார் என்றால் அவரின் நன்னடத்தையில் யாருக்கேனும் குற்றம் குறை இருந்தால் அவர் விமர்சிக்கபடுபவர். அதனை ஆதாரத்துடன் விமர்சித்தால் இன்னும் ஏற்றுகொள்ள கூடிய விமர்சனமாக இருக்கும்"
தனிமனித சுக, துக்கத்தை யாரும் விமர்சிக்க தேவையில்லை. ஆனால் அம்மனிதன் பிறரின் சுக, துக்கத்தில் குளிர்காயனும் என்று நினைத்தால் அதற்கு ஆதாரம் இருந்தால் அவ்வாதாரத்தை முன்னிருத்தி விமர்சிக்கலாம். அவரை ஒரு ஏமாற்றுகாரன்(ஃப்ரௌட்) என்றும் சொல்லலாம் தவறில்லை. அவர் தனிமனிதனாக இருந்தாலும் சரி, சாதி, மத அமைப்பை சார்ந்திருந்தாலும் சரி, அவர்கள் விமர்சிக்க தகுதியானவர்களே... இல்லையேன்றால் இங்கு ஜனநாயகம் என்று சொல்லே வெரும் வெற்று வாய்சொல்லாக இருக்கும்.
நான், "ஜனநாயகம்" என்ற வார்த்தையை படித்தாலோ, கேட்டாலோ பிரஞ்ச் புரட்சிக்கு வித்திட்ட, உலகத்தில் ஜனநாயக விதையை தூவிய புரட்சி சிந்தனையாளன் வால்டேர் அவர்களையே நினைத்துகொள்வேன். அவன் சொன்ன வார்த்தைதான் ஜனநாயக தூணை மேலும் உறுதியாக்கியது. அவர் சொன்ன வாக்கியம் இதோ, "உன் கருத்தில் எனக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம் ஆனால் நீ கருத்து சொல்லும் உரிமையை காக்க, என் உயிர் கொடுத்தும் காப்பேன்" என்றார். என்ன மகத்தான வரிகள்..! என்னை கேட்டால், உண்மையான ஜனநாயகவாதி வால்டேர்தான்.
இதோ இப்போ இருக்கே ஒரு இத்துபோன, செத்துபோன அதிமுக அரசு, அது சரியான தொட்டாச் சிணுங்கி அரசு. அதன் அடிமைகள், ஜெயலலிதாவை பற்றி ஏதாவது சொன்னால் உடனே கைது நடவடிக்கை இறங்குகிறது. அப்புறம் என்ன நமக்கு இந்திய அரசியல் சட்டம் கொடுத்த அடிபடை உரிமை உரிமை காக்கப்படுகிறது. ஒரு மசிறும் இல்ல... நான் எதுவேண்டுமானாலும் பேசிடலாம், எழுதிடலாம் என்று கூறவில்லை. நம்பகதன்மையுடன் ஆதார விளக்கத்துடன் நம் விமர்சனத்தை முன்வைக்கலாம். அப்படியும் ஆதாரம் இல்லாமல் முன்விரோதம் கொண்டு ஒருவர் நம்மை விமர்சித்தால் அவருக்கான விளக்கத்தை கொடுக்கலாம். இல்லையேன்றால் வன்முறையற்ற நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு அறிஞர் அண்ணாவை பற்றி ஒரு உதாரணம் சொல்கிறேன், அண்ணாவை எதிர்கட்சிகாரர்கள் மிக கேவலமாக அவரின் பிறப்பை எல்லாம் விமர்சித்தார்கள். எவனோ ஒரு கயவாலி அவரின் பிறப்பை பற்றி மிக அசிங்கமாக எழுதி, அவர் வீட்டின் எதிரே மாட்டிவைத்து போய்விட்டான். இதை பார்த்த அண்ணாவின் தொண்டர்கள், "அண்ணா மாட்டியவன் யார் என்று எங்களுக்கு தெரியும் அவனை உண்டு இல்லை என்று செய்கிறேன்" என்று கடும் கோவத்துடன் சொன்னார்கள். ஆனால் அண்ணா, மிக நிதானமாக, "அவர் அவரின் இயலாமையை வெளிபடுத்திருக்கிறார். அதை பகலில் எல்லோரும் படிப்பார்கள் ஆனால் இரவில் யாரும் அதை படிக்க முடியாது அதனால் அத்தட்டிக்கு பக்கத்தில் விளக்கை மாட்டி வையுங்கள்" என்றார். அதுதான் நம் அண்ணா... இது வன்முறையற்ற நடவடிக்கை மற்றும் எதிரியும் மன்னிக்கும் பெருந்தன்மை. துன்பத்தையும் இன்பமாக ஏற்றுகொள்ளும் மனபக்குவம்.
இதுபோல் இன்னொறு உதாரணும் கூட சொல்லலாம். புத்தரை ஒருவன் அவரின் சொற்பொழிவு, இந்து மக்களை தவறாக வழிக்கு நடத்துகிறது என்று எண்ணி அவரை பிடிக்காமல் அவர் முகத்தில் காரி துப்பிவிடுகிறான். புத்தர் கூட இருந்தவர்கள் மிகவும் கொதிகிறார்கள். புத்தர் அவர்களிடம், "துப்பியவருக்கு என் கருத்து பிடிக்கவில்லை. அதை வார்த்தையால் அவரால் வெளிபடுத்த தெரியவில்லை. செய்கையால் அதை செய்துவிட்டார். எனக்கு இரண்டும் ஒன்றுதான். வாருங்கள்.." என்றார். மறுநாள் அந்த துப்பிய நபர், தான் செய்ய தவறை எண்ணி புத்தரின் பாதங்களில் சரணடைந்தான்.
இதுபோல் எண்ணற்ற அறிஞர்கள், சிந்தனையாளர்கள், மகான்கள் வாழ்ந்த பூமி இப்பூமி. முறைபடி பார்த்தால் நம் இந்தியாதான் உலத்திற்கே ஜனநாயகத்தை போதித்திருக்கவேண்டும் ஆனால் ஏனோ மக்களின் சாதி,மத நம்பிக்கை, சுயநல ஆசை எல்லாம் சேர்ந்து இங்கு ஜனநாயக மாண்பை குழி தோண்டி புதைத்துவிட்டது. அதன் விளைவுதான் மத்திய, மாநில அரசு விமர்சித்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்குகிறது மற்றும் இதன் போக்கிலே தனி மனிதர்களும் அந்நம்பிக்கையில் இருந்து மீள முடியாமல் விலகி செல்கிறார்கள்.
:-இரா.குரு
7/11/2016
(பதிவை அனைவருக்கும் பகிருங்கள்)
0 comments:
Post a Comment