Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Friday, August 19, 2016

என் எழுத்து தொட்டு நக்குகிற தேன் அல்ல..



அடடா, அருமையான தமிழ்திரைபடம் சமீபத்தில் வெளிவந்து நன்றாக ஓடிகொண்டிருக்கும் "ஜோக்கர்" என்ற படம் அரசியலை கிழிகிழின்னு கிழிச்சிருக்கு. கிழிச்சிட்டார் இயக்குனர். படம் முழுவதும் எதார்த்தமான இயல்பான நடிப்பு. இடதுசாரி சிந்தனை அதிகம் நிரம்பிய படம். அவசியம் எல்லோரும் பார்க்கவேண்டிய படம். இந்த படத்திருக்கு மத்திய, மாநில அரசுகள் கண்டிப்பாக விருது கொடுக்கவேண்டும். அப்படி விருது கொடுக்க தவறினால் இது உண்மையில் கேடுகெட்ட ஜனநாயக அரசுதான் என்று நான் இன்னும் ஒரக்க சொல்வேன்.

நான் 15 வருடங்களுக்கு முன்பிருந்தே பொதுவுடைமை, சமூகநீதி தோழர்களான காரல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மார்க்சிம் கார்கி, தந்தைபெரியார், அம்பேத்கார் போன்ற புத்தங்களை அதிக படித்து வளர்ந்தவன். அப்போதெல்லாம் உள்ளுக்குள் ஒருவித போராட்ட உணர்வே எனக்கு அதிகம் நிரம்பிருக்கும்.. இடையில் பௌத்ததில் நாட்டம் ஏற்பட்டது. புத்தர் புத்தகங்களை அதிக படிக்க ஆரம்பித்தேன். இதில் ஒஷொ, புத்தரை அவரின் அழகிய வார்த்தைகளால் விளக்கிருந்தார். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பின் ஒஷொ எழுத்துமேல் எனக்கு தனியாத தாகம் ஏற்பட்டது. இதில் என் உள்ளுக்குள் இருந்த போராட்ட உணர்வு இலக்கிய, ஆன்மிக வடிவமாக மாறியது.

என் எழுத்து தொட்டு நக்குகிற தேன் அல்ல... தொட்டால் சுடும் நெருப்பு. நான் இன்றும் "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க உறுப்பினர். நான் 2009 இருந்து சமூக வளைதலங்களில் என் கருத்துகளை எழுதிவருகின்றேன். எனக்கு யாரிடமும் பயம் இல்லை. எனக்கு தோன்றுவதை தைரியமாக சொல்வேன், எழுதுவேன். எனக்கு சாதி, மத அமைப்புகளிடம் இருந்தும், முக்கிய இரு கட்சிகளிடம் இருந்தும் எவ்வளவோ மிரட்ட போன் கால்கள் வந்தது. நேரடியாக சில பேர் மிரட்டிவிட்டு சென்றார்கள். இரண்டு முறை போலிஸ் விசாரனை வேற நடந்தது.

ஒரு எழுத்தாளன் என்பவன் வார்த்தைகளில் சமரசம் செய்துகொள்ள கூடாது. எதற்கும் வலைந்து கூனிகுறுகக் கூடாது. நினைப்பதை துணீந்து எழுதனும் அப்படி எழுதுபவனே சமூக எழுத்தாளன்.

சில நண்பர்கள் சொல்கிறார்கள், "நல்ல நல்ல கருத்துகளைதான் எழுதுர.. ஏன் அதை புத்தகமாக எழுதி வியாபரம் செய்யலாமே உனக்கு பணம் கிடைக்குமே" என்றார்கள். "புத்தகம் எழுதலாம்தான் ஆனால் எனக்கு பணம் சம்பாதிக்கனும் நோக்கம் அல்ல... அதற்கு பல தொழில் இருக்கு. என் கருத்து மக்களிடம் சென்று சேரனும் அது எந்த ஊடகம் வழியாக சென்றால் என்ன... இதில் லாப நஷ்ட கணக்கு பார்க்க முடியாது." என்றேன்.

நாம் சமூகத்தில் குடும்ப அமைப்பு கொண்டு வாழ்கிறோம். சமூகம் அரசியல் சார்ந்து உள்ளது. அந்த அரசியல் தீமிர் பிடித்த அரசியல்வாதி கைகளிலும் பணம் படைத்தவன் கைகளில் உள்ளது. நாம் நம் தலைமுறைக்கு செய்யவேண்டிய முக்கிய கடமைகள் உள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் நம் பிள்ளைகளுக்கு முதலில் காந்தியை அறிமுகபடுத்துவதைவிட காரல் மார்சையும், தந்தை பெரியாரையும் அறிமுகபடுத்தவேண்டும். பிள்ளைகளுக்கு சமூக அரசியலை வளர்க்கவேண்டும். இந்திய அரசியலமைப்பு மற்றும் மூப்பிரிவு சட்டங்களை சொல்லிகொடுக்கவேண்டும். எவ்வளவு பெரிய அதிகார தீமிர் பிடித்த மயிராக இருந்தாலும் அவன் கண்ணுல விரலைவிட்டு ஆட்டும் அளவுக்கு போராடும் மனோபாவத்தை வளர்க்கவேண்டும்.

இந்த ஜனநாயக நெறிமுறை அமைப்பு சரியில்லை இதை மாற்றியாகனும்.


தோழமையுடன்:

0 comments: