Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Monday, August 15, 2016

கவிஞர்.முத்துகுமார் மர்ம மரணம்...!?



           கவிஞர் நா.முத்துகுமார் மரணம் மிக பெரிய இழப்பு. என்ன அருமையான பாடலாசிரியர் வார்த்தைகள் ஒவ்வொன்றும் செதுக்கிய சிற்பங்கள். எனக்கு அவர் எழுதிய பாடல்களில் பிடித்த பாடல் தங்கமீன்கள் படத்தில் வரும் "ஆனந்த யாழை மீட்டுகிறாள்.." என்ற பாடலே, பொண்ண பெத்த ஒவ்வொரு அப்பனுக்கும் மிகவும் பிடித்த பாடல் அதுவாகதான் இருக்கும். அவர், இனஉணர்வை தன் வார்த்தைகளால் வெளிபடுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான். 7 ஆம் அறிவு படத்தில் ஒரு பாடல் வரும். "இன்னும் என்ன தோழ எத்தைனையோ நாளாய்.." என்ற வரிகளின் நடுவில் சில வார்த்தைகள் அவை, "கழுத்தோடு ஒரு ஆயுதத்தை எங்கள் களங்களில் சுமக்கிறோம். எழுத்தோடு ஒரு ஆயுதத்தை எங்கள் மொழியில் சுமக்கிறோம்." என்று.  என்னம்மா எழுதிருப்பார் நம் ஈழஇனத்தையும், நம் தமிழ்மொழியும் இணைத்து எழுதிருப்பார். 

          எனக்கு அவரின் மறைவு மிக பெரிய சோகத்தை ஏற்படுத்திவிட்டது. முத்துகுமார் என் நண்பரின் ஆரம்பகால அறை தோழர் அவரின் சொந்த ஊர் காஞ்சிபுரம். முத்துகுமாருக்கு ஆரம்பத்தில் உதவியாக இருந்தது மற்றும் பாலுகேந்திராவிடம் அறிமுகம் செய்துவைத்தது பாடலாசிரியர் அறிவுமதி. பின் 4 நான்கு வருடம் பாலுமகேந்திர படைப்பு பட்டறையில் இருந்து சீமானின் முதல் படத்தில் முதல் பாடல் எழுதி திறை துறைக்கு அறிமுகமானார்.

          என் நண்பர் சொல்லுவார், "முத்துகுமார் அதிகமாக தண்ணி அடிப்பார்" என்று. அவர் மஞ்சள் காமாலையில்தானே இறந்திருக்கிறார். தண்ணி அதிகம் அடிப்பவர்களுக்கு அந்நோய் பிடிபட அதிகம் வாய்ப்புள்ளது, அது என்னன்னு தெரியல, போதைக்கும், கவிஞர்களுக்கு என்றும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. கவிஞர் கண்ணதாசன் மிக பெரிய போதை ஆசாமி, மது மாது இல்லாமல் அவரால் பாடலே எழுத முடியாது. அவரின் ஒரு பாடல் வரிகளே அதற்கு சாட்சி, "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு இசை பாடலலிலே என் உயிர் துடிப்பு. நான் பார்பதேல்லாம் அழகின் சிரிப்பு" என்று எழுதி, அவரே அந்த பாடல் காட்சிகளுக்கு வாயசைத்து நடித்திருப்பார். போதையில் இருக்கும்போது எல்லொருக்கும் பார்பதெல்லாம் அழகாகதான் இருக்கும் அதை பார்த்து சிரிப்பும் உண்டாகும். "போதையில் மது கோப்பை கூட காதலியின் உருவத்தை நினைவுபடுத்தும்" என்று ஒரு கவிஞர் எழுதுகிறார். மு.மேத்தா என்ற ஒரு பாடலாசிரியர் இருக்கிறார். அவர் இந்திய அரசின் சாகித்திய அகதெமி விருது வாங்கிய பாடலாசிரியர். அவர் என் கல்லூரி தமிழ் பேராசிரியரும் கூட... இந்த விசயம் எத்தனை பேருக்கு தெரியும்.? என்று தெரியாது. அவர் ஒரு பக்கா செயின் ஸ்மோக்கர், சிக்ரெட்டை தூதி தள்ளுவார். அதில் போதை கண்டே கவிதை எழுதுவார். வாயில் சிக்ரெட்டும் கையில் பேனாவும் இருப்பதை நானே அதிகம் முறை பார்த்திருக்கேன். இப்படி பல கவிஞர் போதையின் அங்கமாக இருந்துதான் பாடல்கள் படைகிறார்கள். நாம் கேட்கலாம், "ஏன் போதையில்லாமல் படைப்பு படைக்கமுடியாதா.?" என்று. ஏன் முடியாது தாரளமாக முடியும். என்னை கேட்டால் அதுதான் அருமையான படைப்பாக இருக்கும் என்பேன். ஆமாம் தியானத்திலே அப்படைப்பு சாத்தியம். சாதாரண கவிஞர்கள் ஒருவித மயக்கத்தில் அந்த உச்ச நிலையில் சில அரிய காட்சிகளிளை காண்கிறார்கள் அதை உணர்ந்து வார்த்தைகளாக எழுதுவார்கள். ஆனால் போதை தீர்ந்த பிறகு அவர்களுக்குள் மிக பெரிய வெறுமை, வெற்றிடம் ஏற்படுகிறது அவர்களை அது சூழ்ந்துகொள்கிறது. அந்த காட்சிகளை மீண்டும் வரவழிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் முடியாமல் போகிறது. மீண்டும் வரவழிக்கவே போதைக்கு உள்ளாகிறார்கள். அந்த வெற்றிடத்தை "சூன்னிய பிரசவம்" என்பார்கள்.

          கவிஞர்களும், எழுத்தாளர்களும் மற்றும் பல துறை படைப்பாளிகளுக்கு அந்த வெறுமை என்றும் இருக்கும். அப்போது எவ்வளவு முயன்றாலும் வார்த்தைகள் புலப்படாது. இது ஒரு பெண் பிரசவித்த பின் அவளின் சக்தி முழுவது தீர்ந்துவிட்டது. அவளுக்கு இப்போது தேவை நிம்மதியான ஒய்வு மட்டுமே ஆனால் அவளை மீண்டும் பிரசவிக்க தயாராக்குபடி நிர்பந்தித்தால் முடிவு அவளின் மரணத்தில் போய் முடியும். இதுபோலதான் படைப்பின் ஜீவிதத்தை போதையில் இழுத்துபிடிக்க கவிஞர்கள், எழுதாளர்கள் எத்தனிகிறார்கள் அந்த இயற்கைதன்மையை நிர்பந்திருகிறார்கள். ஆனால் அது முடியாமல் போக, வற்றிப்போக அது வராமல் போகிறது. அதை நினைத்து ஏங்குபவன் மரணித்துபோகிறான். இது முழுவது மனதின் ஆசையில்தான் நடக்கிறது. பின் அது நேரடியாக உடலை பாதிக்கிறது மரணமே அவர்களுக்கு பரிசாக வந்து சேர்கிறது. நா.முத்துகுமார் இறப்பும் இதன் அடிபடையில்தான் நடந்தேரியது. அவருக்கு கவிதையில் மிகபெரிய தேடுதல் இருந்தது. அவர் சினிமா பாடலாசிரியர் பிரிவில் பி.எச்டி பட்டம் பெற்றவர். இரண்டு தேசிய விருது வாங்கியவர். 1500 பாடல்களை எழுதியவர். இப்படி ஒரு சாதனை நிலைபாடுடையவருக்கு பாடலின் தாக்கம் இயற்கையாகவே மேலும் அதிகரிக்கவே செய்யும். அது குடியின் போதையிலே அவரை அழைத்து சென்றது. முடிவு அவரின் இறப்பு. அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து எட்டு மாதம்தான் ஆகிறது. அந்த குழந்தை பெரியவளாகி தன் அப்பா எழுதிய அந்த "ஆனந்த யாழை.." பாடலை கேட்கும்போதேல்லாம் அந்த குழந்தை என்ன நினைத்து ஏங்கும், "ஐய்யோ, நம் அப்பா இப்போ நம்முடன் இல்லையே..." என்று எப்படியேல்லாம் ஏங்கி தவிக்கும். அதை நினைத்தால் நமக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. 

          ஒருவரின் இழப்பு, காலம் கடந்து மனித உறவுகளை எப்படியேல்லாம் பாதிகிறது. கவிஞர் நா.முத்துகுமார் எனக்கு எந்த உறவும் இல்லை என் நண்பரின் நண்பர் அவ்வளவுதான் ஆனால் எனக்கும் அவரின் இழப்பு மிக பெரிய துக்கத்தை அல்லவா கொடுக்கிறது.  நான் அவர் எழுதிய பாடலை அடிக்கடி பாடிகொண்டிருப்பேன். அதன் தாக்கம்தான் என்னமோ என்னையும் பாதிகிறது. சமீபத்தில் கூட நான் அந்த பாடலை பாடி வாட்ஸ் அப்பில் என் நண்பர்களுக்கு எல்லாம் பகிர்ந்தேன். அப்படி ஒரு ஈர்ப்பு, தாக்கத்தை என்னுள் உண்டாக்கியது அந்த பாடல் வரிகள்.

          கவிஞர் வைரமுத்து காதலன் படத்தில் ஒரு பாடல் வரிகள் எழுதிருப்பார். பாடல் பல்லவியில் "என்னவளே அடி என்னவளே... என்று தொடங்கி சரணத்தில் "வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி.." என்று எழுதிருப்பார். அந்த தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை அதுதான் அதேதான் அந்த படைப்பின் ஜீவிதம். வைரமுத்து ஒரளவுக்கு உணர்ந்திருக்கிறது. அவருக்கு உணர்வு சிந்தனை அதிகம். எத்தனை பேருக்கு தெரியும். அங்குதான் கவிஞர் மற்றும் பல படைப்பாளிகளுக்கு வார்த்தைகளாக அங்கு வந்து அமர்கிறது. அதை போதையில் கூட சில கணங்கள் அமரவைக்கலாம்தான். நான் ஏதோ விளையாட்டாக இதை சொல்லவில்லை நான் சொல்வது முழுவதும் நிஜம். மிக பெரிய கவிஞர்கள், மிக பெரிய படைப்பாளிகள் எல்லாம், "நாம் என்ன படைக்கனும்.." என்று நினைத்துவிட்டு வெறுமனே காத்திருப்பார்கள். இது பல பேருக்கு தெரியாமல் நடக்கிறது. இப்படிதான் நடக்கிறது என்று பல படைப்பாளிகளுக்கு தெரியாது. ஆனால் அப்படிதான் நடக்கிறது. வெறுமனனே காத்திருக்கும் போதே படைப்பு தொண்டையில் வந்து விழும். "ஆஹா...! அது மகா அற்புதம். அதை நான் அனுபவித்திருக்கிறேன். தியான படைப்பின் விசுக்தி சக்கரம் அது. தேவர்களும், அசுரர்களும் பார்கடலில் கடைந்தெடுத்த அமிர்தம் அது. அமிர்தம் வருவதற்கு முன் நஞ்சு வந்தது. அதை சிவன் குடித்து தன் தொண்டையில் நிறுத்தினான். அதன் பின் கடையும் போது அமிர்தம் வந்தது. அதுதான் படைப்பின் அமிர்தம். அது சுவையோ சுவை. அந்த அமிர்தம்தான் ஒவ்வொரு படைப்பாளிக்கும் வருகிறது. இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் உலகத்தில் அத்தனை படைப்பாளிகளுக்கும் வரும். அது படைப்பாளீகளிக்கு பல பேருக்கு இப்படிதான் நடக்கிறது என்று தெரியாது ஆனால் கவிஞர் வைரமுத்துக்கு தெரிந்திருக்கிறது அதான் பாடல் வரிகளில் அதை எழுதிவிட்டார். இதில் கொடுமை என்னவென்றால் அவர்களின் ஆணவம்தான் அதை சாதித்தது என்று தீமிராக நடந்துகொள்கிறது. சாதித்தது அவர்களின்  ஆனவமனம் அல்ல, சாதித்தது அந்த உயிர் ஜீவித மனம் ஆனால் இதைதான் ருசி கண்டவர்கள் கட்டாயபடுத்தி போதையில் வரவழிக் முயல்கிறார்கள்.

          நான் அதை தியானத்தில் அருமையாக வரவழிக்கலாம் என்கின்றேன். எனக்கு அதன் காலடிதடம் நன்குதெரியும். எப்போது வேண்டுமானலும் என்னால் அதை கொண்டுவர முடியும். அருமையான படைப்புகளை அச்ஜிவிதம் துணைகொண்டு என்னால் தரமுடியும். முத்துகுமார் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு இவ்வளவு பெரிய பதிவை என்னால் எழுத முடிகிறது என்றால் எப்படி.? அந்த ஜீவித விசுக்தி சக்கர துணைகொண்டே நான் எழுதுகிறேன். இதில் என் பங்கு எதுவும் இல்லை. வெறுமனே நான் தட்டச்சு செய்கிறேன். வார்த்தைகள் நினைவுகளில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக வருகிறது. இதற்கு எந்த முன்னேற்பாடும் குறிப்பும் என்னிடம் இல்லை. தானாகவே வருகிறது. கடைசியாக பிழை திருத்தம் மட்டும் நான் பார்ப்பேன். அதுதான் என் வேலை. மற்றபடி நான் எழுதுவதெல்லாம் அந்த படைப்பின் மூலமே... நான் கல்லூரி படிக்கும்போதே சிறு சிறு கவிதைகள் எழுதி வந்தேன் அதை எல்லாம் மொத்தமாக தொகுத்தே சமீபத்தில் ஒரு கவிதை புத்தகம் வெளியிட்டேன். அதன் பின் கவிதையில் எனக்கு பெரிய நாட்டம் இல்லை. எப்போதாவது கவிதை எழுதுவதுடன் சரி.. ஆனால் கவிதை தொடர்ந்து எழுத ஆரம்பித்தால் மிக பெரிய படைப்புகளை தரமுடியும். இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை என்னால் அந்த படைப்பின் அமிர்ததை எப்படி அருந்தவேண்டும் என்ற வழிமுறை தெரியும். தியானத்தால் என்னால் அதை அடையமுடியும். அற்புதமான படைப்புகளை அந்த ஜீவிதம் துணைகொண்டு என்னால் தரமுடியும். ஆனால் என்னுடைய நோக்கமே அந்த முடிவற்ற எல்லை நோக்கியே உள்ளது. படைப்பை கடந்து பிரம்மத்தில் லயித்து உள்ளது.

          ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். இது நான் அனுபவித்த உதாரணம். இதன் மூலம் நான் சொல்லவந்ததை முழுவதும் உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்று நினைகிறேன். "சின்னஞ்சிறு மீன்கள் அதிகம் உள்ள குளத்தின் படியில் நீங்கள் அமர்ந்துகொண்டு அரிசி பொறியை போட்டுகொண்டிருந்தால் மீன்கள் உங்களை சுற்றி அதிகம் வந்துசேரும் அதை சாப்பிட்டுகொண்டே உங்கள் கால்களை அது மெல்லியதாக கடித்துகொண்டு இருக்கும். அப்போது அது உங்களை ஒருவித சந்தோச பரவச நிலையை அழைத்து செல்லும். நீங்கள் அனுபத்திருக்கிங்களா.. என்று தெரியாது அருமையான அனுபவம் அது. அந்த அனுபவம் உங்களுக்கு வேண்டும் என்றால் திருப்போரூர் முருகன் கோயில் குளத்தில் நீங்கள் போய் அனுபவிக்கலாம். இப்போது நாம் அந்த மீன்களின் சுகதிற்கு ஆசைபட்டு நம் மனதில் சட்டென ஒரு எண்ணம் உதித்கிறது. கைகளால் மீன்களை பிடித்துவிடுகிறோம். சில மீன்களே கைகளில் அகப்பட்டுகொள்கிறது. பல மீன்கள் ஓடிவிடுகிறது. பிடித்த மீனை நாம் கண்ணாடி தொட்டியில் விட்டு அழகு பார்கிறோம் மற்றும் தொட்டியில் கால்களை விட்டு குளத்தில் கடித்த சுகத்தை அனுபவிக்க முற்படுகிறோம். ஆனால் அங்கு மீன் பயத்தில் கடிகிறது அது ஆனந்தமாக இல்லை... அந்த பரவசம் இப்போது கிடைக்கவில்லை. மீனுக்கும் உங்களுக்கு உள்ள இயற்கை தொடர்பு துண்டித்து விட்டது. நம் ஆசையினால் அதன் இயற்கைதன்மையை இழந்துவிட்டோம். நாம் அதை கட்டாயப்படுத்தி இழக்கடித்துவிட்டோம்.

          நான் சொன்ன இந்த மேற்குரிய உதாரணம் போல்தான் படைப்பாளிகள் போதையில் சில மீன்களை பிடித்துவிடுகிறார்கள். அவர்கள் பிடித்தது அந்த ஜீவிதத்தின் அற்புதமான விசுக்தியின் அமிர்த மீன்கள். இதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் அது சில மீன்களே.. அதைவைத்து நாம் சுகத்தை காண முற்படும்போதே அதன் இயற்கை போய் செயற்கை உண்டாகி முடிவு மரணத்தில் முடிகிறது. ஒவ்வொரு படைப்பாளியும் இப்படிதான் அதை வலிய பிடித்து அதை சாகடித்து பின் தானும் செத்து போகிறார்கள்.. கவிஞர் நா.முத்துகுமார் மரணமும் இதன் அடிபடையில் நிகழ்ந்ததுதான். இதை நேரடியாக நிருபிக்க முடியாது. ஆனால் அதன் உட்தாத்பரியம் நான் சொன்ன அடிபடையில்தான் நடைபெருகின்றது. இதில் எந்தவித மாற்று கருத்துமில்லை. இதில் படைப்பாளிகள் என் கருத்தை அமோதிப்பார்கள் ஏனென்றால் அவர்களுக்கு நான் சொன்ன விளக்கம் எளிதாக புரிந்திருக்கும்.

          படைப்பின் நிலை பற்றி நான் இன்னும் எவ்வளவோ எழுதலாம் ஆனால் இதனால் இழந்த ஒரு படைப்பாளியை மீட்டு வரமுடியாது. ஆனால் நான் எழுதியது எல்லா படைப்பாளிகளுக்கு ஓர் எச்சரிக்கை. படைபாளிகள் தங்கள் உடல் நலத்திலும் மிகுந்த அக்கரை கொள்ளவேண்டும். "சுவர் இருந்தால் அழகிய சித்திரம் வரைய முடியும்" என்பதை நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.

          கவிஞர்.முத்துகுமார், மனைவிக்கும், குழந்தைகளூக்கும் நாம் என்ன ஆறுதலை இங்கு சொல்லமுடியும்.? வெறும் வார்த்தைகளால் அதை நம்மால் நிரப்ப முடியாது அவர்களுக்கு மிக பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது. காலம்தான் அதற்கான மருந்தாங்க இருக்கமுடியும். காலமே அனைத்தையும் மாற்றும் சக்தி படைத்தது. காலமாற்றமே அவர்களுக்கான நிவாரணமாக இருக்கமுடியும். இங்கு காலமே அக்குடும்பத்தை காக்கட்டும். அவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வர காலம், சக்தியை அளிக்கட்டும்.

இதில் நாம் அனைவரும் ஒரு நிமிடம் பிரார்திப்போம் நா.முத்துகுமார் "ஆத்மா சாந்தி அடையட்டும்..." என்று.


நட்புடன்:
Rk.Guru

0 comments: