Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Friday, May 6, 2016

உங்க கால்களை தொட்டு கேட்டுகொள்கிறேன்.





நீங்க நினைப்பதுபோல் ஆன்மிகம் என்பது சாதாரண விசயம் அல்ல.. ஏதோ பூஜை, மந்திரம், வழிபாடு செய்தோம் கேட்டதை பெற்றோம் என்று சொல்லி போவதல்ல.. இவையேல்லாம் மனதை தற்காலிக அமைதிபடுத்தும் வழிமுறை. அந்த அமைதிபடுத்துதல் அதிகமாக ஆசைக்கான அமைதிபடுத்துவதகாதான் இருந்திருக்கும். எங்கே நீங்க உண்மையாக சொல்லுங்கள் பார்கலாம், "நான் பூஜிப்பது, கோவிலில் வழிபாடு செய்வது எல்லாம் என்னை உணர்ந்துகொள்ளதான் மற்றும் மன சாந்தியடையதான் செய்கிறேன்." என்று.

 நான் நிச்சயம் சொல்வேன், ஒருபோதும் உங்க பிரார்த்தனை இப்படி இருக்காது. பிரார்த்தனை ஒருவரின் முழுக்க முழுக்க அவரின் சுயதேவை சார்ந்தே இருக்கிறது. உடம்பின் நோய் சரியாகனும், பொண்ணு, புள்ளைக்கு நல்ல வேலை கிடைக்கனும், அவங்களூக்கு நல்ல இடத்தில் வரன் அமையனும், வீடு வாசலுடன் சவுக்கியமாக இருக்கனும்." இதுதான் ஒருவரின் அதிகபடியான பிரார்த்தனை கோரிக்கையாக இருக்கும்.

இதெல்லாம் ஆன்மிகமே இல்லை. இது ஒரு பக்கா வியாபாரம். "நான் கேட்டதை நீ கொடுத்தால், நான் உனக்கு மொட்டை போடுவேன், உண்டியில் காசுபோடுவேன், காது குத்துவேன், நெருப்பு மேல் நடப்பேன், நடந்தே பாத யாத்திரை வருவேன்" என்று இப்படியேல்லாம் சிலை முன் சொல்லி கோரிக்கையை நிறைவேற்றி கொள்வது.

இது எதற்கு சாமி, கோவில், குளம் எல்லாம்.? உங்களுக்கு மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் தெரிந்தால் போது நீங்க கேட்டதைவிட அதிகமாகவே கேட்டு பெறலாம் இதற்கு எந்த சிலையின் முன் விழுந்து அழவ வேண்டியதில்லை. உள்மன ஆற்றலின் சக்தி அவ்வளவு பிரமாண்டமானது எதையும் கேட்டு பெறலாம். தெரியுங்களா, நீங்க சிலையின் முன் பிரார்த்தனை கோரிக்கை விடும்போது உங்க மனத்தின் ஆற்றலில்தான் அவையாவும் நிறைவேறுகிறது. மற்றபடி நீங்க வழிபடும் சிலைக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. உங்க  மனதின் நம்பிக்கைக்கு ஒரு உருவம் வேண்டும். அதனால்தான் சிலை தேவைபடுகிறது. இதை நான் நிச்சயமாக சொல்வேன். இதை நீங்க கோவில் போய்தான் நிறைவேற்றனும் என்றில்லை. இதை எங்கிருந்தும் கேட்டு பெறலாம். இது முழுக்க முழுக்க மனத்தின் நம்பிக்கை சார்ந்த விசயமாகும்.

ஒரு செயலை நீங்க முழுமையாக நம்பிவிட்டால் அது  நல்லதோ, கெட்டதோ  நம் ஆழ்மனம் எந்தவித கேள்வியும் கேட்காமல் செய்து முடிக்கும் ஆற்றல் உடையது. உங்களுடைய கோரிக்கை எல்லாம் உங்க ஆழ்மனதிடமே கேட்டுபெறலாம் ஆனால் இதனால் ஆத்ம அருள் கிடைக்காது. மனத்தின் ஆற்றலை வேண்டுமானல் புரிந்துகொள்ளலாம். அது இன்னும் உங்களுக்கு வாழ்வின் ஆசை அதிகமாக்கும் தவிர ஆத்ம அருள் கிடைக்க வழி செய்யாது. ஆத்ம அருளுக்கு உங்க ஆசையின் வீரியத்தை குறைக்கவேண்டும். தியானம் செய்யவேண்டும்.

ஆழ்மனது என்பது நாம் போகும் வழியில் கலைப்பு நீங்க மோர், இளநீர், தண்ணீர் அருந்துவது போலதான் ஆனால் ஜீவித ஒளியை காணமுடியாது. அதற்கு கடும் பிரம்ம பிரார்த்தனம் செய்யனும். தியானத்தின் மூலம் ஒட்டுமொத்த உங்க சக்தியை பயன்படுத்தனும். நான் மறுபடியும் சொல்கிறேன். ஆன்மிகம் என்பது சாதாரண விசயம் இல்லை உங்கள் சக்தி முழுவது அதற்கு செலுத்தியாகனும்.

இதை இன்னொரு விதத்தில் சொல்லனும் என்றால் ஆன்மிகம் என்பது மிக சாதாரணம். எந்தவித முயற்சியும் வேண்டாம் நீங்கள் தயாராக இருந்தால் போது ஜீவித ஒளி உங்கள் மேல் பொழிய காத்திருக்கிறது.

நான் சொல்வேன், "எல்லாம் முயற்சியும் வீண்தான் ஆனால் எல்லா முயற்சியும் வீண் என்று சொல்வதற்கு நாம் எல்லா முயற்சியும் செய்தாகனும்" இதுதான் இதன் முரண்பாடே.... ஆமாம், தண்ணீரில் மிதப்பது மிக எளிமையான விசயம்தான் ஆனால் நீச்சல் தெரியாதவர்கள் நீரில் மிதக்கிறேன் என்று இறங்கினால் முழுக வேண்டியதுதான். நீரில் மிதப்பதற்கு நாம் கடுமையாக பயிற்சி செய்யனும். அதன்பின்னே எந்தவித முயற்சி இல்லாமல் நீரில் மிதக்கமுடியும்.

இது நம் எல்லாருக்கும் தெரியும் என்று நினைகிறேன் செத்த பிணம் நீரில் மிதக்கும். பிணம்  நீரிடம் எந்தவித முயற்சியும் செய்வதற்கு அதனிடம் "நான்" என்ற ஆணவம் இல்லை அதனால் அது மிதக்கும். எப்போது நமக்கு "நான்" என்ற ஆணவம் இல்லாமல் போகிறதோ அப்போது எந்தவித முயற்சியும் வேண்டாம். உயிர்தன்மையுடன் நீரில் மிதக்கலாம். நீர் உங்களை மிதக்கவிடும். ஆத்ம அருள் தானாய் வந்து சேரும். ஆன்மிகதிற்கு எந்தவித முயற்சி தேவை இல்லை என்பதை நாம் அப்போது புரிந்துகொள்வோம். அதுவரை நாம் எல்லாவித முயற்சியும் செய்துதான் ஆகனும்.

முயற்சியில் எளிமையான முயற்சி தியானம் மட்டுமே. ஆம், தியானம் மட்டும்தான். அதுதான் ஜீவிதத்தின் மிகபெரிய திறவுகோல்.  நீங்களும் உருவமற்ற கடவுளின் சொரூபம். நாம் அனைவரும் கடவுளே அதனால்தான் உபநிஷத்தில் "அஹம் பிரம்மாஸ்மி" (நான் கடவுள்) என்கின்றார்கள். ஒருவர் தன்னை உணரும்போது அப்போது அவர் கடவுளாக உணர்கிறார். தன்னை உணர்வதற்கு தியானமே சிறந்த ஒன்று. தியானம் அழகிய பூச்செறிந்த நற்பாதை. அதனால் தியானம் செய்யுங்கள். உங்கள் பாதங்களை தொட்டு கேட்டுகொள்கிறேன். தியானம் செய்யுங்கள். வாழ்க்கையின் எதையும் இழக்கலாம் ஆனால் தியானத்தை இழக்காதீர்கள். அது மிக பெரிய பொக்கிஷம். நான் உணர்ந்தால் சொல்கிறேன். தியானத்தை விடாதீர்கள்.

இரண்டு வகையில் தியானம் செய்யலாம் ஒன்று கண்ணை மூடிகொண்டு உங்க மனதில் தோன்றும் எண்ணங்களை எந்தவித மதிப்பீடும் கொடுக்காமல் எந்தவித குறுக்கீடும் இல்லாமல் வெறுமனே கவனித்துகொண்டு இருக்கலாம். இது ஆரம்பம் கொஞ்சம் கடினமாகதான் இருக்கும். குப்பை நிறைந்த அறையை சுத்தம் செய்யும் போது தூசி தும்பு படு வேகத்தில் கிளம்பத்தான் செய்யும் பொறுமையுடன் சுத்தம் செய்தால் அறை சுத்தமாகும். இது பல பிறவிகளாக சேர்ந்த குப்பை ஆரம்பம் அப்படிதான் இருக்கும். தொடர்ந்து எண்ணங்களை கவனித்துகொண்டு இருங்கள். தெளிவு பிறக்கும். இன்னொரு வகை  நீங்க விடும் மூக்சு காற்றை அது உள்ளே போகும் போதும் வெளியே வரும்போது எந்தவித தடங்களும் செய்யாமல் அது எப்படி போகிறதோ அப்படியே அதை வெறுமனே கவனித்து கொண்டு இருப்பது. இந்த இரண்டில் எது சவுகரியமோ அதை செய்யுங்கள். நிமிர்ந்து உட்கார்ந்து செய்தால் நல்லது. எதையும் கட்டாயத்தில் செய்யாதிங்க... எப்போது ஒய்வு கிடைக்குமோ அப்போதெல்லாம் செய்யுங்க... வெறும் கண்ணை மூடி எண்ணங்களையோ அல்லது மூச்சு காற்றையோ கவனித்தால் போதும். பாருங்க எவ்வளவு எளிமையானது என்று. ஆனால் இந்த எளிமையானதில்தான் மிக பிரமாண்டமான பொக்கிஷம் இருக்கிறது. மிக பெரிய விருட்சத்தின் விதை தியானத்திலே உள்ளது. முதன் முதலில் நீங்கள் யார் என்பதை அங்கு உணர்வீர்கள்.

அதுவே உங்கள் உண்மை சொரூபம் அதுவே பிரமாண்ட ஜீவிதத்தின் சொரூபமாகும். அண்டத்தில் உள்ளது பிண்டம், பிண்டத்தில் உள்ளது அண்டம் என்ற திருமூலர் சித்தர் வாக்கு மெய்படும்.

பொறுமையாக படித்தமைக்கு நன்றி...!

          நட்புடன்:              
  

0 comments: