ஒரு காரியம் நினைக்கும்போதும், அதை செய்யும் போதும் தீடிர் என்று நம்மிடம் பயம் வந்துசேரும். பயம்வரும்போதே சந்தேகமும் கூடவே வரும். இப்படி வருவதற்கு மூல காரணம் என்னவென்று நாம் யோசித்தால், அது அனேகமாக நம் எதிர்பார்காகதான் இருக்கும். அந்த எதிர்பார்ப்புதான் சந்தேக நிழலை பயத்துடன் படியவிடுகிறது. சந்தேகம்,பயம் இருந்தால் பின்னாலே மனதில் குழப்பம் வந்துவிடும். குழப்பம் மனதின் இறுக்கத்தை அதிகரிக்கும். பின் முடிவு தெளிவில்லாமல் போகும். இதனால் அச்செயல் அனேகமாக தோல்வியில்தான் முடியும். எதிர்பார்ப்பு+சந்தேகம்+பயம்+குழப்பம் = மன இறுக்கம். இதை ஒரு எதிர்மறை சிந்தனைக்கு உட்படுத்தலாம். எதிர்மறை சிந்தனை உள்ளவங்களின் செயல்நிலை போதியமட்டும் இப்படியாகதான் இருக்கும், இயங்கும்.
இப்போ நேர்மறை சிந்தனை உள்ளவங்க எப்படி இயங்குவாங்க என்று பார்ப்போம். அவங்களிடமும் எதிர்பார்ப்பு இருக்கும் ஆனால் அவங்க எதிர்பார்ப்பு, முயற்சி, தன்னம்பிக்கை என்பவனவற்றில் இயங்கும். ஒருவிதத்தில் அவங்களுக்கும் சந்தேகம், பயம், குழப்பம் போன்றவை இருக்கும் ஆனால் அவர்கள் முயற்சி,தன்னம்பிக்கை என்ற வார்த்தைகளால் அழுத்திகொண்டு, அதன் மேலே நின்றுகொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் காலுக்கு கீழே சந்தேகம், பயம், குழப்பம் எப்போதும் அங்கையே இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் அதை அவர்கள் உணர மறுப்பார்கள்.
அதை உணருவதற்கே ஒருவித பயம்கொள்வார்கள். ஆனால் வெளியே அந்த பயத்தை காட்டிகொள்ளமாட்டார்கள். "எதற்கு சந்தேகபடுனும், எதற்கு பயபடனும், தன்னம்பிக்கை இருந்தால் எதையும் நாம் சாதிக்கலாம்" என்று சொல்வார்கள். ஆனால் உள்ளுர பயம் அவர்களுக்கு இருந்துகொண்டே இருக்கும் அவங்க அதை தற்காலிகமாக மறைத்துவைப்பார்கள். ஆனால் இது எதிர்மறை சிந்தனை உள்ளவர்களிடம் நேரடியாக தெரியும். இதற்கும், அதற்கும் இவ்வளவுதான் வித்தியாசம்.
இந்த எதிர்மரை சிந்தனைக்கும், நேர்மறை சிந்தனைக்கும் மூலம் எது தெரியுங்களா..? "ஆசை" ஆமாம், ஆசைமட்டும்தான். ஒன்று எதிர்பார்கிறோம் என்றால் ஆசையால்தான் எதிர்பார்கிறோம். இந்த எதிர்பார்பை தொடர்ந்துதான் நேர்மறையும், எதிர்மறையும் மனதில் பிறக்கிறது. இதை மனது பிரிக்கிறது என்றும் சொல்லலாம். இப்படி இருப்பதால், அதற்காக ஆசையே இல்லாமல் நாம் வாழனும் என்று நான் சொல்லவரவில்லை. இந்த மூலத்தை நாம் புரிந்துகொண்டால் நாம் இரண்டு நிலை ஆற்றலிலும் பயணம் செயலாம்.
அந்த இரண்டையும் நாம் லாவகமாக திருப்பிவிடலாம். அதன் செயல்வேகத்தை கவனிக்கலாம் இதில் ஒரு பெரிய பலன் என்னவென்றால் நமக்கு மனம் இறுக்கம் அடையாது. ஆமாம், புரிந்துகொண்ட இடத்தில் மனம் இறுக்கம் அடைய வாய்ப்பே இல்லை. பலபேருக்கு பைத்தியம் அதிகம் பிடிப்பது, எதிர்மறை சிந்தனை உள்ளவர்களுக்குதான். அழுத்தம் அதிகமாகி உடலுருப்புகள் பாதிக்கபடும். இதே நேர்மறை சிந்தனை உள்ளவங்களுக்கு இதயம் சம்பந்தபட்ட பிரச்சனை நேரடியாகவே இருக்கும். ஏனென்றால் உடலை அவங்க ஒரு வாகனமாக பயன்படுத்துவாங்க.. உடலுக்கு ஒய்வு கொடுக்கமாட்டாங்க... என்னை கேட்டால் இரத்த கொதிப்பு அதிகம் வருவது நேர்மறை சிந்தனை உள்ளவங்களுக்குதான்.
நாம இரண்டு ஆற்றலையும் பயன்படுத்த கற்றுகனும். அப்படி கற்றுகொண்டால் நமக்கு உடலிலும், மனதிலும் எந்த பிரச்சனையும் வராது பிரச்சனையை சாதரணமாக கையாளலாம். எனக்கு இரண்டு ஆற்றலின் உட்தன்மை நல்லாவே தெரியும்.
மனதுக்கும் நாம் விடும் மூச்சு காற்றுக்கும் மிக நெருக்கமான சம்பந்தம் உண்டு. மூச்சுகாற்றை சில நிமிடம் நிறுத்தினால் மனதில் எண்ணங்கள் தோன்றாது. மனதின் எண்ணங்களை தோற்றுவிப்பது மூச்சு காற்றே, அதுதான் "பிராணன்" என்ற உயிர் காற்றை உள்ளே அனுப்புகிறது. அந்த பிராணின் சக்திகொண்டே மனம் சிந்திக்கிறது, நேராற்றலாக, எதிராற்றலாக செயல்படுகிறது. இந்த உட்சூழ்சமத்தை நீங்கள் உடலால் உணர்ந்தால், மனம் உங்கள் கட்டுபாட்டில் வந்துவிடும். அப்புறம் வாழ்வின் சாதனை, வெற்றி எல்லாம் ஒன்றுமே இல்லை. இதுவே மிக பெரிய சாதனைதான்.. இச்சாதனைக்கு முன் எந்த சாதனையும் பெரிதல்ல.. நீங்க விடும் சுவாசத்தை கவனித்தாலே போதும். நீங்க தற்போது எந்த ஆற்றலில் இயங்குகிறிங்க என்று தெரிந்துவிடும்.
வலது மூளை செயல்படும்போது இடது பக்கம் மூச்சு, உள்ளும், புறமும் சென்று வந்தால், நீங்கள் எதிர்மறை (பெண்ணாற்றல்-சிவ ஆற்றல்) ஆற்றலில் இயங்குறிங்க என்று அர்த்தம். இதே இடது மூளை செயல்படும்போது வலது பக்கம், மூச்சு, உள்ளும் புறமும் வந்து சென்றால் நீங்கள் நேராற்றலில் (சக்தி ஆண்ஆற்றலில்) இயங்குறிங்க என்று அர்த்தம். இரண்டு பக்கமும் சீரான மூச்சு காற்று வரும்போதுதான் நீங்களே சிவசக்தியாக இருக்கிறீர்கள்.
தியானத்திலும் இருக்கும்போதும் மற்றும் அன்பாக இருக்கும்போது நீங்க இருபக்க ஆற்றலில் ஒருங்கிணைந்து இருப்பிங்க.. இதனால்தான் சொல்வார்கள், "அன்பே சிவம்; அன்பே கடவுள்" என்று. அன்பில் ஜீவ ஆதாரத்தை உணரலாம். இதனால்தான் அன்பை எல்லா மதங்களும் மிகவும் வலியுருத்துகின்றன. அன்பே என்றும் சாசுவமானது. அன்பு இருக்கும் இடத்தில் நேர், எதிர் கலந்தே இருக்கும். அங்கு சிவனும், சக்தியும் (ஆணும், பென்ணும்) சங்கமிக்கும் அதுவே அழகிய காதல், அதுவே காமத்தின் உச்சம். அவ்வுச்சத்திலே புத்தர் பிறப்பார்.
நீங்களேதான் அந்த புத்தர் என்று உங்களால் உணர முடியும். முதன்முறையாக உங்கள் உயிர்ஜீவனின் முகத்தை உங்கள் அகக்கண்ணாடியில் பார்பீர்கள். அதுவே பரமானந்தம். அவ்வானந்தம் முன் எந்த ஆனந்தமும் அருகில் கூட வரமுடியாது. அதுவே உண்மையான ஆனந்தம். அதுவே சத்+சித்+ஆனந்தம்=சச்சிதானந்தம். (சிவன்+சக்தி=புத்தன்) அன்பும், தியானமும் இருமுகம் கொண்ட ஓர் முகம். புத்தரின் அதுவே உங்கள் முகம். முதலில் நம் மனதை புரிந்துகொள்ளுங்கள். மூச்சின் ஆற்றலை புரிந்துகொள்ளுங்கள். இதனில் ஒரு தெளிவு நமக்கு இருந்தால் ஆன்மிகம் மிக எளிதான பயணமாகும். நாம் வாழும் வாழ்வும் மிக அருமையாக இருக்கும். நன்றி..!
நட்புடன்:
:
0 comments:
Post a Comment