Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Wednesday, May 16, 2012

ஓஷோ என்ற மெய்ஞானியை பற்றி தவறான புரிதலுடன் கட்டுரை வெளியிடும் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு...


எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்ட "ஓஷோ கடிதங்கள்" http://www.jeyamohan.in/?p=27343 என்ற பதிவுக்கு என்னாலான விளக்கம்.



கடிதங்கள் முற்றுபெற்றுருக்கும் என்று நினைத்திருந்தேன் ஆனால் தேடி பிடித்து வெளியிடுகின்றீர்கள். இதனிலே தெரிகிறது உங்கள் மன சலனம் எப்படி கலவரபட்டுள்ளது என்று...என்ன பிரச்சனை  உங்களுக்கும் ஓஷோவுக்கும் தனிப்பட்ட விரோதம் ஏதாவது உண்டா.? புத்தக வியாபர  போட்டிதான் என்ன செய்வது...எதார்த்தம்தான் என்றும் வெற்றிகொள்கிறது.    

// முப்பதாண்டுகளுக்கு முன்னால் ஓஷோவின் ஓர் ஆன்மீக விவாதத்தில் பெண்குறி பற்றிய ஆபாச நகைச்சுவையை வாசிக்க நேர்ந்தபோது அடைந்த அதிர்ச்சியை நினைவுறுகிறேன்//  ஓஷோவை பற்றி நீங்கள் எழுதியது. அப்படி என்ன ஆபாசமாக பேசிவிட்டார் அதை குறிப்பிடவில்லையே படித்ததை சொன்னால்தானே புரிதலான விளக்கம் கொடுக்க முடியும். இப்படி அர்த்தமற்ற குற்றசாட்டுக்கள்தான் முன்வைக்கிறீர்கள்...

முதலில் ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் இதை புரிந்துகொள்ள நான் ஒரு ஜென் கதை சொல்கிறேன் கேளுங்கள்.  ஒரு ஜென் துறவியிடம் அவ்வுரில் வாழும் மக்கள் குறிப்பிட்ட ஒருவனை சுட்டிகாட்டி அவன் ரொம்ப மோசமானவன் ரொம்ப அயோக்கியம் அவன் சகவாசமே சரியில்லை அவன் திருடன்"  என்று சொன்னார்கள் அதற்க்கு அந்த ஜென் துறவி, "ஆனால் அவன் மிக நல்லா புல்லாங்குழல் வாசிப்பான்"  என்றார். சில நாட்கள் போன பின் சில பேர் அவ்வுர்மக்கள் சொன்ன திருடன் புல்லாகுழல் வாசிப்பதை கேட்டிருந்தனர் இதை பற்றி ஜென் துறவியிடம் பேசும் போது அச்சிலபேர் அவனை புகழ்ந்து "அவன் ரொம்ப நல்லா புல்லாங்குழல் வாசிகின்றான் மிக பிரமாதமாக கலையுணர்வு உடையவனாக இருக்கின்றான்"  என்றார்கள் அதற்க்கு ஜென் துறவி, "அவன் ஒரு திருடன்" என்றார்.

இக்கதையில் இருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது. ஒருவரை பற்றிய மதீப்பீடு மனங்களுக்குத்தான் மனங்களை தாண்டிய உயிர்தன்மைக்கு கிடையாது ஞானியின் பார்வையில் திருடனும் ஒன்றுதான் நல்லவனும் ஒன்றுதான்.....

 //ஓஷோ என்ற போதே எனக்கு ஒரு முகச் சுளிப்பு, கல்லூரிப் பருவம் முதல் நாளெல்லாம் இவரின் கையாலாகாத வாசகர்களை , தன்னை ஆன்ம சாதகன் என விளம்பிக் கொள்ளும் துணுக்கு ஞானிகளை நிறைய சந்தித்து அவர்கள் மேலுள்ள வெறுப்பு நாளடைவில் எப்படியோ ஓஷோ மீது படிந்து விட்டது. அவரின் ஒன்றிரண்டு நூல்களையே படித்துள்ளேன், ஏற்காத மனச் சாய்விலேயே படித்ததால் எளிதில் புறக்கணித்து விட்டேன்.//

உங்கள் கடித வாசகனின் வரிகள் மிக நகைப்புக்குரியது.  ஓஷோ என்ற போதே எனக்கு ஒரு முக சுளிப்பு என்று சொல்கிறார் அப்போது புத்தகம் படிக்கும் முன்னையே  வெறுப்பை உமிழிந்துதான் இருக்கிறார் அந்த வெறுப்புடன் படிப்பவருக்கு ஒன்றிரண்டு புத்தகம் படித்தாலும்100 புத்தகம் படித்தாலும்  எந்த பயனும் இல்லை...எந்த புள்ளைகாவது தன அப்பன்ன பிடிக்கும்மா...எலியும் பூனைதான் இருப்பாங்க.. ஏதோ 100 இல் பத்துதான் புரிதலுடன் நடக்கிறது.

ஒருசில புத்தகம் படித்தே அவரை பற்றி நல்லா புரிந்துகொண்டார் என்று சொல்லும்போதே உங்கள் வாசகரை பற்றி நான் நல்லாவே புரிந்துகொண்டேன். "ஏற்காத மன சாய்விலே"  என்பதை சொல்கிறார் மனமற்ற நிலைதானே ஓஷோவின் நிலை அதில் மன சாவுடன் என்றால் ஏற்காமல்தான் போகும். மனம் சார்ந்தவன்தான் மனிதனாக இருக்கின்றான்  அவன் ஞானியின் உள்தன்மையை எப்படி புரிந்துகொள்ள முடியும் .

ஒரு ஜென் துறவியிடம் ஞானம் பற்றி சொல்லுங்கள் என்கிறார்கள் அவர் சொல்கிறார் "ஞானம் சொல்லில் அடங்காதது அப்படி சொன்னால் அது ஞானம் இல்லாதது"  என்கிறார்.  உங்கள் வாசகர் கிருஷ்ணன் ஓஷோவை பற்றிய ஒப்பாரி கூட்டத்தில் உங்களுடன் சேர்ந்து நன்றாகவே ஒப்பாரி வைப்பார் அவரை விட்டுவிடாதீர்கள்.

அடுத்த வாசகர் லட்சின் என்கிற லக்ஷ்மி நரசிம்ஹன்...

எதிர்ப்பு இல்லாதவரை எல்லோரும் நண்பர்கள். ஒருவருடைய விருப்பு, வெறுப்பு மாறும்போதுதான் தாக்குதல் ஆரம்பமாகிறது. புலி குட்டி, நாயிடம் பால் குடிக்கலாம். அது புலியாகும்வரை...! இப்படிதான் மாறியிருக்கிறது லட்சின் தவறிய எண்ணம்...

கிருஷ்ணமூர்த்தி  புத்தருக்கு ஈடானவர் ஆனால் புத்தர் அல்ல...அவர் ஒரு குறிப்பிட்ட நிலையிலையே இருந்துவிட்டார்.  புத்தத்தின் உச்சநிலைக்கு அவர் போகவில்லை அவர் அறிவார்ந்த உச்சநிலையில்தான் இருந்தார். அண்ணிபெசன்ட் அம்மையார் அவரை புத்தராக காண விரும்பி அவரை பல்லாயிரகணக்கான மக்கள் முன்  நிறுத்தி கிருஷ்ணாவை  துறந்து புத்தரை வரவைக்க முயற்சி செய்தார்கள் ஆனால் அந்த முயற்சி அவரால் நிறைவேற்ற முடியவில்லை கிருஷ்ணா மறுத்துவிட்டார். அவர் புத்த நிலைக்கு உள்செல்ல விரும்பவில்லை. அவர் ஒரு சிறந்த தத்துவவாதி அதனால்தான் பெர்னாட்ஷா அவர் வாழ்நாளில் யாரையும் பாராட்டாமல் கிருஷ்ணமுர்த்தியை "அவர் ஒரு அழகான இளைஞன்" என்று பாராட்டினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை உள்ளது. அவரை நான் சந்தித்து பேசவேண்டும் என்று மிக ஆவலாக இருந்தேன் அதற்கான சந்தர்பம் அமையவில்லை." என்று ஓஷோ சொல்லிருக்கிறார் நான் படித்திருக்கிறேன்

பல வேலைகளின் அவரின் சொற்பொழிவில் கிருஷ்ணமூர்த்தியை பற்றி மிக உயர்வாக சொல்லிருக்கிறார். ரமண மகரிஷியை பற்றி ஓஷோ சொல்லும்போது ரமணர் அற்புதமான மெய்ஞானி ஆனால் அவரிடம் ஸ்ரீஅரவிந்தர் போல உச்சநிலை அறிவார்ந்தவராக இல்லை...அவரிடம் நீங்கள் அறிவார்ந்த நிலை பற்றி கேட்டால் அவர் மௌனத்தில் இருப்பார். ஆனால் அரவிந்தர் அதற்க்கு உரிய விளக்கம் அளிப்பார் ஆனால் அறிவிந்தரிடம் ரமண மகரிஷி போன்ற முதிர்பெற்ற சலனமற்ற மெய்ஞானம் இல்லை...அவர் அறிவின் ஊடாக ஞானத்தை கண்டார். ரமண மகரிஷி போன்றவர் போலத்தான் ராமகிருஷ்ண பரம்சரும் அவரிடம் அறிவார்த்தமான கேள்வி கேட்டால் அவர் உடனே எழுந்து ஆட ஆரம்பித்துவிடுவார் ஏனென்றால் அவரின் பதில் அதுவாகத்தான் இருக்கும்"

இவை போன்ற விமர்சனங்களைத்தான் கிருஷ்ணமூர்த்தி மீதும் ரமணர் மீதும் அரவிந்தர் மீதும் ராமகிருஷ்ண பரம்சர்  மீதும் வைத்திருந்தார் மற்றபடி அவர்களை ஒருபோது புரந்தள்ளியதில்லை...புரந்தல்லிருந்தால் நான் எப்போதே ஓஷோவை விட்டு வெளிவந்திருப்பேன். புரிதல்தான் ஒரு ஞானிக்கும் சீடனுக்கு உள்ளது. அதுதான் சீடனின் ஞானதேடலுக்கு மிக பெரிய பாலம்.

ஓஷோவை நான் பதினைந்து வருடங்களாக அவரின் ஒளியின் வெளிச்சத்தை பார்கிறேன். மெய்ஞானி ஆனேனோ இல்லையோ புரிதல் ஞானி ஆனேன் என் மனதை உணர்ந்தேன் என் எண்ணங்களை  உணர்ந்தேன். நன்றாகத்தான் ஒரு சராசரி மனிதனாகவே வாழ்கிறேன். என் குடும்பத்திற்கான தேவை என்னால் உள்ளத்தால் ஞானிக்கான தேடுதல் புரிதலுடன் செல்கிறது. மௌனமாக நாம்  எங்கிருந்தால் என்ன மௌனம்  மௌனம்தானே...

என்னால் முடிந்த உங்கள் கட்டுரைக்கான விளக்கத்தை கொடுத்தேன் இன்னும் அதிகம் தேவைபடுவாயின்  நீங்கள் ஓஷோவின் தலைமையிடமே கேட்டு தெரிந்துகொள்ளலாம்....யாரும் ஈகோ பார்க்கமாட்டார்கள். நீங்கள் கேட்பதற்கு ஈகோ பார்க்காமல் இருந்தால் நல்லது.

இன்னும் உங்களிடம் இருந்து ஓஷோவின் விமர்சனங்களை வரவேற்கின்றேன்...வாழ்த்துகள்    



என்றும் நட்புடன்:

6 comments:

kumaresan said...

அடிப்படையான சமுதாய மாற்றமே உண்மை மெய்ஞானம். அதற்காக மக்களைத் தூண்டாத எவரும் என்னைப் பொறுத்தவரையில் மெய்ஞானி இல்லை. மக்களின் சில பிரச்சனைப் பேசுவது போலப் பேசி, தனித்திருக்ககச் செய்து, ஒன்றுபட்ட போராட்டத்திலிருந்து விலக்கி வைக்கிற கைங்கர்யத்தையே இந்த மெய்ஞானிகள் செய்கிறார்கள்.

ஜெயமோகனும் அதே காரியத்தை வேறு வழியில் செய்கிறவர்தான்.
-அ.குமரேசன்

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing

Best Regarding.

Anonymous said...

Osho talked about all subjects under the sun including sex,love,meditation,witnessing,J.k ect.practise his meditations& osho offers self realisation as a gift.Don't be a spectator.Be a meditator& experience the inner joy felt by Buddha,Krishna & Christ

Anonymous said...

Thanks very nice blog!

My web page; hcg diet
Also see my page: hcg diet injections

ilankumaran said...

very good response to Sri.Jayamohan who basically is a Hindu fanatic and adamantly denying OSHO with his pride and prejudice.
OSHO is the sun ever shining in the sky.Never mind about little creatures shoutng at HIM.
/P.Ilankumaran

ilankumaran said...

very good response to Sri.Jayamohan who basically is a Hindu fanatic and adamantly denying OSHO with his pride and prejudice.
OSHO is the sun ever shining in the sky.Never mind about little creatures shoutng at HIM.
/P.Ilankumaran