(ஓஷோ பற்றிய சரிவர புரிதல் இல்லாமல் அவர் எழுதி பல பதிவுகளின் ஒரு பதிவுக்கு...என் பதில் பதிவு கிழே . அவர் தளத்தின் முகவரி http://www.jeyamohan.in/ )
ஜெயமோகன் எழுதிய கட்டுரை அதன் முற்காலபட்ட நிகழ்வுகள் எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் இதை ஓஷோவுடன் ஏன் இணைக்கிறார் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். எம் எஸ் உதயமூர்த்தி தமிழின் சுயமுனேற்ற நூல்களை அதிகம் விற்பனை செய்வதற்கும் பல பதிப்பாளருக்கு ஏணியாய் இருந்தவர்.
ஒரு நேரத்தில் சுயமுன்னேற்ற நூல்களும் சக்கை போடு போட்டது. அதில் பலன் அடைந்தவர்கள் முக்கியமாக அப்புத்தகத்தை படித்தவர்களும் விற்றவர்களும்தான் ஆனால் இதில் இடையில் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒருசில பேர்கள் இருக்கிறார்கள் அவர்கள் யார்.? என்று எளிதாக நாம் யூகித்துவிடலாம் அவர்கள் இலக்கிய, புதுமை, புரட்சி என்று சொல்லிகொள்ளும் எழுத்தாளர்கள் அவர்களின் வரிசையில் மேல் வரிசையில் இருந்தவர்தான் ஜெயமோகன்.
ஜெயமோகனின் வியாபாரமே எழுத்துதான் வாழ்கையில் எழுதிதான் பிழைக்கவேண்டும். ஜெயமோகன் எழுதி கொண்டே இருந்தால் ஒருவேளை அவரின் படைப்புகள் எப்படி விற்பனை ஆவது. இதில் விற்பதற்கும் ஒரு சந்தை வேண்டும் அல்லவா..அது பதிப்புலக சந்தை ஆனால் அதுபோல பதிப்புலக சந்தையில் சுயமுன்னேற்ற நூல்களும், ஆன்மிக நூல்களும் , ஓஷோ நூல்களும் அல்லவா தற்போது முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறது அவைகள் பதிப்பாளருக்கு லாபத்தை அல்லவா அள்ளிகொடுக்கிறது.
பதிப்பாளர்கள் வரிசையில் முன்னணி இருக்கும் கண்ணதாசன் பதிப்பகத்தை அனுகினால் அவர்களிடம் கேட்டாலே தெரியும் "உங்கள் பதிப்பகத்தில் யாருடைய நூல்கள் அதிகம் விற்பனை யாகிறது" என்றால் "ஓஷோதான்" முதல் என்று சொல்வார்கள். ஜெயமோகன் ஒருவேளை கடைசியாக வேண்டும் என்றால் வரலாம்.
முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனை பார்த்தால் எப்போதும் கடைசி மதிப்பெண் எடுக்கும் மாணவன் கொஞ்சம் ஓரவஞ்சன பார்வையுடந்தான் பார்பான் அவ்வொரவஞ்சன பார்வை ஒருசில நேரம் வன்முறை பார்வையாக கூட மாறலாம். அவ்வன்முறை பார்வைதான் ஜெயமோகனுக்கு வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
காற்றின் திசையை மாற்றினாலும் காற்று எங்கும் அடித்துக்கொண்டுதான் இருக்கும் இது நாம் என்றும் புரிந்துகொள்ளும் இயற்க்கை.. ஓஷோ அதிகம் பேசுவது நாம் அறிந்தும் அறியாமல் இருக்கும் புத்தரை பற்றிதான். புத்தரை பேசும் ஒருவரை புறந்தள்ள வேண்டும் என்று நினைத்தால் அது நம் அறியாமையின் முட்டாள்தனம்தான். அது புத்தரையே தள்ளிவைத்து பார்ப்பது போலாகும். அப்படியும் மீறி பார்த்தால் அது தற்காலிகமானதுதான் இருக்கும். நிரந்தரம் என்றும் நம்மைவிட்டு போவதில்லை. அது என்றும் நம்முடனே இருக்கிறது. அதுவுடந்தான் நாம் பேசுகிறோம் அதன் மையத்தில்தான் இருக்கின்றோம். இது என் அனுபவத்தில் சொல்கின்றேன். உண்மை போதிக்கபடவேண்டியது இல்லை அது உணரபடவேண்டியது.
ஆட்ட கடித்து மாட்ட கடித்து இப்போது புத்தரையே கடிக்க வந்துவிட்டது. இந்த பிற்போக்கு எழுத்தாளன்.
1 comments:
அன்பு குரு நீங்கள் அவசர பட்டு எழுதி உள்ளீர்
ஜெயமோகன் எழுத்துக்கள் சாதரமானவை அல்ல
நீங் கள் விஷ்ணுபுரம் படியுங்கள் ........................
அவர் கோணத்தையும் ஆராய்ந்து பாருங்கள்
முரண்பட்ட சிந்தனை தவறா ?
ஓஷோ என்பவரை உடைத்து நாம் நம்மை உணர்வது தவறா ?
ஓஷோ ஒரு போதை என்பது செல நேரம் உண்மை என தெரிகிறது ,,,,,,
சுய நலம் என்கிற ஒன்றை அதிகப்படுத்துகிறது
மார்க்ஸ் இங்கெல்ஸ் எழுத்துகளையும் படியுங்கள்
ஓஷோ என்பதன் அர்த்தம் சகலத்திலும் கரைவது ......................
நீர் கரைந்து போக வீரும்புவீரா ?
Post a Comment