ஒரு பொருளை நாம் பாதுகாக்கவும் வேண்டும், அதே வேலை அதை பராமரிக்வேண்டும். பாதுகாப்பும், பராமரிக்கும் மிக முக்கியம். இது பொருளுக்கு மட்டும் என்பது கிடையாது, உடலுக்கும் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
நல்லா நவீன ஆடை போட்டு கொண்டு இருப்பார்கள் ஆனால் உடல் பயிற்சி, உணவு பழக்கத்தில் எந்த விதமான திட்டமும் இருக்காது. வயிறு முட்ட குடிப்பது, வயிறு முட்டத் தின்பது, குப்புறப்படுத்து தூங்குவது ஆனால் வெளியே செல்லும் பொழுது மட்டும் டிப்-டாப்பாக செல்வது.
இது உடலை பராமரிப்பதாக இருக்கும் ஆனால் உடல் பாதுகாப்பில் பெரிய ஓட்டை விழுந்து விடும் அதனால் பராமரிப்பு இருக்கும் போது பாதுகாப்பும் மிக முக்கியம்.
எதையும் மிக சிறிய (Micro) அளவில் அணுக வேண்டும் ஆனால் நாம் பெரிய (Macro) அளவில் சிந்திக்கிறோம், திட்டங்கள் போடுகிறோம். அது பெரிதாக கனவாக இருந்தாலும் ஈடறாது.
ஒரே பாட்டில் பணக்காரன் ஆவது பற்றி படத்தில் பார்த்து நாம் ரசிக்கலாம் ஆனால் நடைமுறையில் அது சின்ன சின்ன விஷயங்களை கவனித்துக் கொண்டு சரிபடுத்திக் கொண்டு நகரும் போதுதான் வெற்றியை சாத்தியமாக்க முடியும்.
இங்க திட்டம் போடும் தலைவர்களைவிட செயலாற்றும் செயலாளர்கள்தான் தேவை.
அதனால் பாதுகாப்பு, பராமரிப்பு மைக்ரோ லெவலில் வேலை செய்வதுதான் வெற்றியை மிக எளிதாக்கி கொடுக்கும்.
வாழ்க வளமுடன்..!
:-Rk. Guru

0 comments:
Post a Comment