குடும்பத்தின் அதிகாரம்:
ஒரு குடும்பத்தின் அதிகாரம் குடும்ப தலைவரிடம் இருக்கிறது. அவ்வதிகாரம் தளர்வானால் அக்குடும்பத்தில் அதிகார பரவல்தான் ஏற்படும் அப்புறம் தடிஎடுத்தவரரேல்லாம் தண்டல்காரனாக இருப்பார்கள். அப்போது குடும்பம் குடும்பமாக இருக்காது. அதிகாரம் இல்லாத தலைவன் இறந்து போனால் அவரின் சொத்தின் உரிமையை மட்டும் எடுத்துகொண்டு அவரை புரகனிப்பார்கள் புரகனிக்கபட்ட குடும்ப தலைவர் இறந்தால்தான் அவருக்கு முழு மரியாதையே கிடைக்கும். பொதுவாக உறவுகள் வாழ்பவர்களை கவனிக்க மாட்டார்கள். செத்தவர்களைதான் விழுந்து விழுந்து கவனிப்பார்கள் ஏனென்றால் அவர் மீண்டும் வரமாட்டார் என்ற நம்பிக்கையில் அவர் நினைவுநாளில் படையல் போட்டு போலியான ஒரு துக்கத்துடன் கவனிப்பார்கள். செத்தவரே இறக்கும்போது கவனிக்க ஆள் இல்லாமல்தான் செத்துபோயிருப்பார். செத்த பிறகு அவரை நினைத்து கொள்கிறோம் என்று அவர்கள் உறவுக்குள் விளம்பரம் தேடிகொள்கிறார்கள்.
வாழ்வு ஒரு நீர்குமிழி:
என்னை கேட்டால் நான் சொல்லுவேன் "எதுவும் எதுவும்மில்லை அதுவும் அதுவுமில்லை" அது உடலும் இல்லை உள்ளமும் இல்லை எல்லாமே நீர்குமிழிதான். இந்த நீர்குமிழி போடும் வடிவம்தான் வாழ்கை. நம்மிடம் அடக்கப்பட்ட ஒன்றின் வெளிபாடுதான் வார்த்தைகளாக வரும். வார்த்தை தூய்மை எல்லாம் அவர் அவர் வெளிப்பாடு, என்னை பொறுத்தவரை விழிப்புணர்வு கொள். விழிப்புணர்வுடன் இரு...இதுதான் மிகவும் உன்னதமான வார்த்தை. ஒருவர் விழிப்புணர்வில் நிலைகொண்டால் எல்லாமே அடங்கிவிடும் எல்லாமே மறைந்துவிடும், அங்கு எதார்த்தம் ஒன்றே இருக்கும். முழு வாழ்வும் புரிதலான வாழ்வாய் இருக்கும். நான் சுட்டெரிக்கும் சூரியன்.....! என்று மனம் சொல்லும். உன்மையிலே நாம் சுட்டெரிக்கும் சூரியனா.? அப்படி இருந்தால் யாருக்காவது நாம் பயன்படுவோமா.? மனதுக்கு தன்னையும் அழித்து கொண்டு பிறரையும் அழிக்கும் வேலையைத்தான் நடத்தும். மனம் அதன் தனித்துவத்தை இழந்து தன்னை என்றும் ஒன்றோடு ஒன்று அடையாலபடுத்தியே வெளிப்படும். அதனால் மனத்தின் போக்கை அறிவதை விட வாழ்வின் எதார்த்த போக்கை அறியலாம்.
பரிணாம வளர்ச்சியில் சிதைபடும் உறுப்புகள்:
பயன்படுத்தாத உறுப்புக்குகள் பரிமாண வளர்ச்சியில் இல்லாமல் போகும். உணவை மென்று தின்னத்தான் பற்கள் ஆனால் ஏனோ தானோ என்றுதான் உண்ணுகின்றனர். இன்னும் சில நூற்றாண்டுகளில் மனிதனின் பல் சிறிதாக போய்விடுமாம் இது விஞ்ஞான தகவல். நொறுங்கி தின்றால் நூறு வயது வாழலாம் எனபது ஒரு பழமொழி அதனால் ஜீரண உறுப்புகளுக்கு அதிக வேலைகொடுக்காமல் உணவை நன்கு மென்று தின்போம் பரிணாம வளர்ச்சியில் சிதைபடாமல் நம் உடல் உறுப்புகளை பாதுகாப்போம்.
எதை தேர்ந்தெடுப்பது:
பிரச்சனைகளுக்கான காரணங்களை எளிதாக அலசிவிடுகிறோம் ஆனால் பிரச்சனையில் இருப்பது எவ்வளவு பெரிய வேதனையாக இருக்கிறது. எவ்வளவு சிரமபடவேண்டிருக்கு...ஒருவர் "ஆபாச படங்கள் இணையத்தில் அதிகம் இருக்கிறது. அதை எல்லாம் தடை செய்யவேண்டும்" என்கின்றார். எவ்வளவுதான் தடை செய்வார்கள். தடுத்து வைத்தால்தான் தடைகளை மீறும் மனம். காய்கறிகளில் நல்லது எது.? சொத்தை எது.? என்று தேர்ந்தெடுத்து வாங்குவதுபோல் நல்ல தகவல்களை தேர்ந்தெடுத்து படியுங்கள். நீங்கள் விழிப்புடன் இருக்கும் வரை உங்களை யாரும் முட்டாளாக்க முடியாது.
இணைத்தலின் சூத்திரம்:
பெரிதாக நினைத்தால் சிறிது தானாக அடங்கிவிடும். அதாவது பாடத்தில் பெரிய கணக்கு போட்டால் சிறிய கணக்கு விடை எளிதாக தெரிந்துவிடும். பெருந்தன்மையாக நடந்தால் சிறுபுத்தி மறைந்துவிடும். ஒன்றுபட்டு தமிழர் உணர்வுடன் ஒற்றுமையுடன் இருந்தால் ஜாதி தானாக மறைந்துவிடும். இணைத்தலின் சூத்திரம் இதுதான் ஆனா ஒன்றுபட்டு இருப்பதுதான் பல பேருக்கு கடினமாக இருக்கிறது. இருப்பது கடினம் என்றால் பெறுவதும் கடினமாகும். அதனால் போதியமட்டும் ஜாதி,மத பேதம் இல்லாமல் சமத்துவமாக இணைந்திருப்போம்.
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி, தமிழ்10-ல் மற்றும் உலவு-இல்
பதியவும் ...நன்றி.)
9 comments:
வடை துன்னுட்டு அப்புறமா வாரேன்...
தேவையான பதிவு நண்பரே
நல்ல பதிவு நண்பரே
//வாழ்வு ஒரு நீர்குமிழி//
கலைஞர் ஆட்சியில் நாம் சோப்பு நுரை தான்
good
எனக்கு பிடித்த வரிகள்...
நீர்குமிழி போடும் வடிவம்தான் வாழ்கை...
**********
மனதுக்கு தன்னையும் அழித்து கொண்டு பிறரையும் அழிக்கும் வேலையைத்தான் நடத்தும். மனம் அதன் தனித்துவத்தை இழந்து தன்னை என்றும் ஒன்றோடு ஒன்று அடையாலபடுத்தியே வெளிப்படும். அதனால் மனத்தின் போக்கை அறிவதை விட வாழ்வின் எதார்த்த போக்கை அறியலாம்.
*********
தடைகளை மீறும் மனம். காய்கறிகளில் நல்லது எது.? சொத்தை எது.? என்று தேர்ந்தெடுத்து வாங்குவதுபோல் நல்ல தகவல்களை தேர்ந்தெடுத்து படியுங்கள். நீங்கள் விழிப்புடன் இருக்கும் வரை உங்களை யாரும் முட்டாளாக்க முடியாது.
*************
பெரிதாக நினைத்தால் சிறிது தானாக அடங்கிவிடும்..........
"தேவை ஏற்படும்போதே தேடுதலும் தொடங்கிவிடுகிறது..."
பதிவு அருமை நண்பா... ஒவ்வொரு வரியிலும் அதிக முதிர்ச்சி...சூப்பர்.... உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்த்திருக்கிறேன் தோழா
எனக்கு பிடித்த வரிகள்
"பெரிதாக நினைத்தால் சிறிது தானாக அடங்கிவிடும். அதாவது பாடத்தில் பெரிய கணக்கு போட்டால் சிறிய கணக்கு விடை எளிதாக தெரிந்துவிடும். பெருந்தன்மையாக நடந்தால் சிறுபுத்தி மறைந்துவிடு"
நல்ல பதிவு சகோ....
ஒப்புக் கொள்ளக் கூடிய கருத்துகள்.
ஜாதி மத பேதம் இல்லாமல் எல்லோரும் பழகும் நாளே நன்னாள்.
Post a Comment