Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Thursday, January 27, 2011

நீ நினைப்பதைத்தான் நானும் நினைக்கின்றேன்.


கட்டளை இடுபவன் தலைவனாகிறான். செயல்படுத்துபவன்தான் செயலாலாளர் ஆகிறான் ஆனால் தலையை விட வால்கலே நாட்டில் ரொம்ப ஆடுகிறது. தலைவனே ஒரு அடிமை. இந்த அடிமைக்கு ஒரு அடிமை  கிடைத்துவிட்டால் சும்மா இருந்துவிடுவானா.? தான் எப்படி எல்லாம்   அடிமைபட்டோம் என்று தன் அடிமைத்தனத்தை அந்த அடிமைமேல் சுமத்தி அடிமையாக்க என்றும்  நினைப்பான். இதுதான் இப்போது இருக்கும் அதிகார ஆளும்  அடிமைகளின் குணம். இந்த அடிமைகள் இப்பொழுது வாழும் நாட்டில் மத அடிமைகளாகவும் , ஜாதி அடிமைகளாகவும், அதிகார அடிமைகளாகவும் புற்றிசல்போல் பரவி இருக்கிறது. இவ்வடிமைகளின் குணம் ஆணவம் கொள்ளும் மனதை கொண்டதுதான் அது அன்பை விரும்பாது வெறுப்பைத்தான் விரும்பும் அடிமைதனத்தைதான் என்றும் ஏற்கும்.

நம்மில் பலபேர்  நண்பர்களைவிட எதிரியைத்தான் அதிகமாக தேடுகிறோம். பல எதிரிபோல் இருக்கும் திருடன்கள் திருடாத நம்மிடம்  கூட்டு வைத்தால்  மற்றவருக்கும் நாமும் திருடியவனாகத்தான்  தெரிவோம். இதில் நேர்மை என்ற கண்ணிருந்தும் அவன் குருடன்தான். உணர்விருந்தும் அவன் ஜடம்தான். நம் நியமான கருத்துக்கு எதிர்ப்பு இருக்கும்வரை அக்கருத்துள்ள எதிர்பாளர்களும் இருப்பார்கள் இருக்கத்தான் செய்வார்கள். தன் உணர்வே சிறந்தது தம் கருத்தே நியாயமானது என்று நினைப்பது ஏற்புடையதாக இருக்காது. காலத்தால் பல கருத்துகளும் கறுத்துதான் போகிறது. உண்மையான கருத்தே கருத்துகளை தாங்கி நிற்கிறது. ஆத்திக கருத்துடையோர் இருக்கும் வரை நாத்திக கருத்தும் இருக்கும்.

ஒருவருக்கு பொழப்பு வேண்டும் என்றால் எதிர்க்கும் இன்னொன்றும் இருந்தாகவேண்டி இருக்கிறது. நம்மில் யாருக்கும் நோயே இல்லையென்றால் டாக்டர் பொழப்பு எப்படி நடக்கும். யாருமே சாகவில்லையென்றால் அதை நம்பி இருப்பவர்களுக்கு எங்கே பொழப்பு...ஒன்றின் விழ்ச்சிதான் இன்னொன்றின் தொடக்கமாக இருக்கிறது. தமிழ் இலக்கியத்திற்கு  வேண்டும் என்றால் தொடக்கம்  சொல்லாடல் தேவைபடலாம் ஆனால் வறுமையின் பசியோடு இருப்பவனை இலக்கன சொல்லாடல் கவராது. வறுமையில் உள்ளவனை  சுரண்டும் கூட்டம் என்றும்  சொல்லும் "என்ன மயிருக்குடா நீங்களெல்லாம்  வாழுரிங்க" என்று. இங்கே மயிறு எப்படி அதிகார அழுத்தமாக பயன்படுகிறது பார்த்திர்களா...இதில் வார்த்தையின் பொருளை விட அடக்கும் அதிகாரம்தான் மேலோங்குகிறது. ஒரே வார்த்தையை அன்பாகவும் பயன்படுத்தலாம், அதிகாரமாகவும் பயன்படுத்தலாம் இவை எல்லாம் அவர் அவர் குணங்களை பொறுத்து அமைகிறது. நமக்கு அன்புதான் வேண்டுமே தவிர அதிகாரம்மில்லை அதுவும் சுரண்டி தின்னும் ஆளும் அதிகாரம்மில்லை.

ரோஜா மென்மையுடன் மேன்மையானாலும் அது முட்கள் பாதுகாப்புடன்தான் பூக்கின்றது..எல்லோரிடமும் சுயமரியாதை ஒன்று உள்ளது. முட்டாளும் இதை விரும்புவான்.    'திமீர்தனம்' ஒன்று உள்ளது. இது நியாய, அநியாய அடிபடையில் தன் தவறுகளை திருத்தி கொள்ளும். ஆனால் அடங்கா திமிர்தனம் என்று உள்ளது. அது ஆணுக்கும் உள்ளது. பெண்ணுக்கும் உள்ளது. இந்த திமிர்தனம் மெத்த தெரிந்த ஒட்டுமொத்த ஆணவத்தின் வெளிபாடு. இதனின் ஆரம்பம்  நல்லதாக  இருக்கும் ஆனால் முடிவு இதற்கு பெரும்சோகதான். ஆணவம் முதலில் பிறரை அழிக்கும் பின்    ஆணவம் கொண்டவரையே அழிக்கும்.  நாட்டில் மூன்று வகை பிரிவு மக்கள் இருக்கிறார்கள்.  1.அநியாயங்களை எதிர்த்து போராடுபவர்கள் (பொதுநலவாதிகள்) 2.அநியாயம் நடந்தாலும் எதிர்ப்பு காட்டாமல் ஒதுங்கி செல்பவர்கள் (பல குடும்ப தலைவர்கள்) 3.எப்பவுமே அநியாயம் செய்பவர்கள். (ஆளும் அதிகாரம் படைத்தவர்கள்) இவர்களின் தேவை பொறுத்தே மக்களின் வாழ்வு நகர்கிறது. நியாயங்களை, உண்மைகளை  மக்கள் ஓரளவுக்கு ஏற்றுகொண்டாலும் அது பொய்யாக்கும் வேலைத்தான் அதிகம் நடக்கிறது. மக்களுக்கு கொள்கைகளை முன்னிறுத்தி செல்வதில் அதை  சொல்வதில் கூட ஒரு வித சுயநலம் உள்ளது. கொள்கைகள் எல்லாம் எப்படி உருவாகிறது இன்று நாம் பார்த்தோமானால். கொள்கை வகுப்பவர் பார்த்தது, கேட்டது, அனுபவித்தது எல்லாம் கலந்துதான் ஒரு கொள்கை வடிவம் அவர் பெறுகிறார். இப்படி பார்க்கும் போது அவர் நலன் சார்ந்து பாதிக்கப்பட்ட  ஒரு சுயநலம் உள்ளது என்ன அச்சுயநலம் உருவமில்லாமல் பொதுநலமாய் மாறுவதுதான் என்றும் நடக்கும் அதிசயம். நம் கொள்கைகள் எல்லாமே ஒரு நலனுக்கு உட்பட்டதுதான். அம்மா குழந்தையை அன்புடன் வளர்கிறாள் பாசம் காட்டுகிறாள் பரிவுடன் இருக்கிறாள் என்றால் அது பார்பவருக்கு அக்குழந்தையின் பொதுநலன்தான் ஆனால் அக்குழந்தையின் பாதுகாப்பு பிற்காலத்தில் தனக்கும் கிடைக்கவேண்டும் என்ற சுயநலமும் அதில் அடங்கிருக்கு.  இதனால்தான் பல வீட்டில் மாமியார், மருமகள் பிரச்சனையே வருகிறது. மருமகளால் தன் சுயபாதுகாப்புக்கு ஆபத்து வருமோ என்று பல தாய்கள் பயபடுவதுண்டு. இது ஒருவித சுயநல அடிப்படையில் சார்ந்ததுதான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட சுதந்திரம் உண்டு. அதில் தலையிட கூடாது. என்றால் அது எது மாதிரி சுதந்திரம் என்பதுதான் முதலில் கவனிக்கப்படவேண்டும். போலியில் உழன்று போலியாக ஒரு சுதந்திரம் இருக்க அதை ஏன்,? எதற்கு.? என்று கேட்க கூடாது...தாரலாமாய் கேட்கலாம். இந்த சுதந்திரத்தை கேட்பது தவறில்லை...பல பெண்களுக்கு சமையல்கட்டு, கணவன், குழந்தைகள் என்று அவள் இறுதி வாழ்வை முடித்து கொள்கிறார்கள். கேட்டால் அது அவளுக்கு சுதந்திரம்தான் என்பாள் வெளியுலகம் காணாதவரை அவளுக்கு அது சுதந்திரம்தான். இவை இத்சுதந்திரம் கவனிக்கபடுவது  தனி சுதந்திரம் பெரும்பாலும்  மூடநம்பிக்கை கொண்டே வருகிறது. அது சொந்த மதத்தில் நிலையில் மட்டும் பார்த்தால் அது  பகுத்தறிவாளர்களுக்கு ஏற்புடையதாக என்றும் இருப்பதில்லை எல்லோரும் மனிதர்கள் என்று நினைக்கும் போது மனிதன் சார்ந்த நிலைகளும் அதன் பகட்டு சுதந்திரம் தழுவிய மூடபழக்கங்களும் குறிப்பிடபடுபவைதான் அவை மதம், இனம், மொழி எவ்வகையதும் சார்ந்ததுதான். இதில் பாகுபாடு கிடையாது. உண்மை ஜனநாயக சுதந்திரம் எனபது சுதந்திர கருத்துடன் பேசுவது அப்பேசும் சுதந்திரத்திற்கு தடை விதிப்பதில்லை. அப்படி விதித்தால் அது ஜனநாயகமே இல்லை அது ஒரு சர்வாதிகாரத்தனம். சில நாட்டில் மதங்கள் சார்ந்த நிலையிலே அதன் சட்டங்களுக்கு இருக்கிறதால் அங்கு பேச்சு சுதந்திரத்திற்கு எழுத்து சுதந்திரத்திற்கு ஏது மரியாதை இருக்கிறது. அங்கு அடக்குமுறைதான் இருக்கும். ஆனால் காலம் மாறும் போது பல காட்சிகளும் உடைக்கபட்டுதான் ஆகவேண்டும்.

ஒருவரின் வயதை அவரின் அனுபவ முதிர்ச்சியாய் கொள்ளமுடியுமா.?  வயது முதிர்ச்சில் ஒருவர் அனுபவத்தை அனுபவமாக கொள்ள முடியாது. ஏனென்றால் இன்னும் பெரிய மனிதர் என்ற போர்வையில் டவுசர் போட்ட சின்ன பையன்களாகத்தான் இருக்கிறார்கள். ஒருவனின் முதிர்ச்சி எனபது அவன், பிறவி தாய், தந்தை குணம், வசிக்கும் இருப்பிட குணம், படிப்பில் தெளிந்த குணம், நடைமுறை வாழ்வில் அறிந்த குணம் இவையாவும் அவனுக்கும் அவனை சார்ந்த பிறருக்கும் பயன்படுபவதாக இருந்தால் அது அவனின் முதிர்ச்சி அனுபவமாக இருக்கும். இது இல்லாமல்  வெறும் வயது முதிர்ச்சியை மட்டும் வைத்து ஒருவர் அனுபவ முதிர்ச்சியை சமன் செய்யமுடியாது.

அழுதே காரியம் சாதிப்பவர்கள் இருக்கிறார்கள். அதிகாரம் செய்து காரியம் சாதிபவர்களும் இருக்கிறார்கள். நியாமான உரிமையை போராடி பெறுபவர்களுக்கும் இருக்கிறார்கள். இதில் நான் நியாயமான உணர்வின் வார்த்தைகளை எழுதி கருத்தை திணிக்காமல் உங்கள் பகுத்தாயும் அறிவில் உட்புகுத்தவே என்றும் இருக்கின்றேன். என்றும் உங்கள் ஆதரவுடன்....

  
என்றும் நட்புடன்:



4 comments:

சக்தி கல்வி மையம் said...

கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ...

அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.

நான் ஓட்டு போட்டுட்டேன்..
நீங்க போட்டீங்களா?

சசிகுமார் said...

என்ன நண்பா பதிவுகள் தொடர்ந்து வருவதில்லை வேலை அதிகமோ

Jana said...

நீ நினைப்பதைத்தான் நானும் நினைக்கின்றேன்!!!
பலவற்றை சம்பந்தப்படுத்தி யோசிக்கவைக்குதே!!

ரிஷபன் said...

நிறைய யோசிக்க வைத்த பதிவு.