சில பெண்ணியவாதிகளுக்கு ஆண்களை கண்டால் பாவக்காய் போல கசப்பாதான் பார்பார்கள். அவர்கள் சொல்லுவார்கள் "நீ என்னடா என்னை கற்பழிக்கிறது நான் உன்னை கற்பழிக்கிறேன் பார்" என்று. "ஆணாகிய நீ இறுக்கமான ஆடை போட்டால் நானும் அப்படியே போடுவேன் அது எனக்கு சரியா இருக்கா.? இல்லையா.? என்றேல்லாம் எனக்கு கவலை இல்லை,"நீ தம்பு(சிகெரேட்) பிடித்தால் நானும் பிடிப்பேன். நீ நின்றுகொண்டே சீறுநீர் கழித்தால் நானும் நின்று கொண்டே கழிப்பேன் பார் (என்று ஒரு வேலை கூறினால்) ஆணுக்கு நிகர் பெண் என்ற அடிப்படை வாதமே தவறாகி போய்விடுமே...
ஆணின் தைரியத்திற்க்கும், துணிவுக்கும் தோழமையுடன் போட்டி போடலமே அன்றி எதிர்ப்பு நிலை உண்டாக்கி "அவனை போல் நானும் செய்து காட்டுகிறேன் பார்" என்றால் சமுகத்திற்க்குதான் சீரழிவு. பெண்ணியவாதிகள், ஒரு விதத்தில் தாங்கள் ஆணை வென்று விட்டோம் என்று கூறிகொள்ளலாம். ஆனால் இவர்கள் பெண்களை அழிவு நிலைக்குதான் அழைத்துக்கொண்டு செல்கிறார்கள். பெண்ணின் சுயசிந்தனையான, முற்போக்கு எண்ணங்கள் ஆணை எதிர்த்தோ அவனை காப்பி அடித்தோ இருக்க கூடாது. ஒரு அழிவு இன்னொரு அழிவுக்குதான் இட்டுசெல்லலும். ஆணும் பெண்ணும் சமக்கால தோழர்களாக இருக்கவேண்டும். ஏனென்றால் ஆணும் பெண்ணும் ஒன்றோடு ஒன்று இணைந்த உறவு, தோழமை..இவை இல்லாமல் தனித்து எதிர்ப்பு நிலையில் செயல்பட்டால் அது ஒரு கசப்பான பிரிவைத்தான் உண்டாகும். இதனால் நாளைய தலைமுறை பல இன்னல்களை எதிர்கொள்ளவேண்டிவரும். இப்போதே இதன் தாக்கம் அதிகரித்து விட்டது. அது மேலும் அதிகரித்து கேள்விகுறியில் நிற்கவேண்டாம்.
நாகரிகம் வளர்ந்த மேற்குலகில் கணவனும், மனைவியும் ஏதோ அற்ப காரணங்களுக்காக பிரிந்து செல்வதால் இதில் ஒன்றும் அறியாத குழந்தைகள்தான் பாதிக்கபடுகிறார்கள். அக்குழந்தைகள் பாதிக்கபடுவதால் பின்னாளில் அதுவும் பெற்றோர்கள் எடுத்த நிலையே எடுக்கும். இதில் மாற்றம் எதுவும் இருக்காது. அதனால் ஆணும், பெண்ணும் தோழமையுடன் இணைந்த சமுதாயம்தான் ஆரோக்கியமான சமுதாயமாக இருக்கும். ஆண் செய்த இழிவையே பெண்ணும் செய்ய நினைத்தால் எதிர் விளைவுகள்தான் ஏற்படும். இது எப்படி என்றால் கொழுந்து விட்டு எறிந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக அணையும் தருவாயில் அவை அணையாமல் இன்னும் கொஞ்சம் எண்ணெயை ஊற்றுவதற்க்கு ஈடானது. இந்த எண்ணெய் எதுபோல என்றால் "நீ என்னடா என்னை கற்பழிக்கிறது நான் உன்னை கற்பழிக்கிறேன் பார்" என்று சொல்வதை போல...
என் எண்ணத்தின் எழுத்தை படித்த உங்களுக்கு என் நன்றிகள்...
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, மற்றும் நம் குரல் பதியவும்.....நன்றி.)
11 comments:
ஆணாதிக்கத்தை எதிர்ப்பது சரியென்கிறீர்களா?
@Sindhan R
ஆணாதிக்கைதை எதிர்காலம்...ஆனால் எதிர்த்து அவன் செய்வதையே செய்தால் எதிர்ப்புக்கு எதிர்ப்பு எப்படி ஈடாகும்.
நல்ல கட்டுரை ... தேர்ந்த பார்வையுடன் நடுநிலைமையோடு சொல்லியிருக்கிறீர்கள் ...
பார்வை கோளாறு ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் தான்.. காமத்தை தாண்டி பிற பெண்களை ஆண்களால் பார்க்கமுடியாது என்ற பார்வையை இந்த சமுதாயம் அவர்களுக்குள் ஊட்டிவிட்டது, அதை அவர்கள் அப்படியே ஏற்றுகொண்டார்கள் அதனால் ஆண்கள் தங்களை காமத்தை தாண்டி பார்கமாடார்கள் என்ற முடிவை பெரும்பாலான பெண்கள் எடுத்து விட்டார்கள்...
Nanbare..thangal karuthukal arumai..i accept this. Its true only.
வந்தேன் ஐயா...
கணவனும், மனைவியும் ஏதோ அற்ப காரணங்களுக்காக பிரிந்து செல்வதால் இதில் ஒன்றும் அறியாத குழந்தைகள்தான் பாதிக்கபடுகிறார்கள். அக்குழந்தைகள் பாதிக்கபடுவதால் பின்னாளில் அதுவும் பெற்றோர்கள் எடுத்த நிலையே எடுக்கும...........உண்மை, உண்மை
நல்ல பகிர்வு சார் நன்றி
Aan, Pen natpe penmel anuku irukkum kama paarvayai neekkum. Samuthayam aan pen natpai thavaraga parkum kannotathai kaividavendum.
GURU Pinniteenga.
நல்ல இடுகை. வாழ்த்துக்கள்.
நல்ல கட்டுரை....
Post a Comment