உலகில் போராட்டம், புரட்சி எனபது ஆண்களை மையபடுத்தியே வருகிறது அதன் வரலாறும் ஆண்களின் துடுப்பாக இருக்கிறது.அவனுக்கு தேவையானததை அவன் பெற்றுகொள்கிறான் ஆனால் பெண்கள் உரிமையை பெறுவதில் விரல் விட்டு எண்ணகுடிய நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் உரிமை பெறுவதில் சிலது வேடிக்கையும் இருக்கிறது. கொடுமை என்னவென்றால் ஆணுக்கு நிகராக பெண்களும் ஆண்களை கற்பழித்தார்கள் என்று கேள்விப்படும்போது சிரிப்புடன் சேர்ந்து எரிச்சல்தான் வருகிறது. அதெப்படி பெண் ஆணை கற்பழிக்கமுடியும். ஒரு பெண் சம்மதம் இல்லாமல் ஆண் கற்பழிக்கலாம் ஆனால் ஒரு ஆண் ஈடுபடாமல் பெண்கள் கற்பழித்தார்கள் என்று சொல்வது ஏற்புடையதாக இருப்பதில்லை. எனென்றால் ஆணின் உறுப்பு வெளிப்புறத்தே இருக்கிறது. பெண்ணின் உறுப்பு உடலுடன் இணைந்தே இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஆண்களுக்கு விறைப்பு ஏற்படாத நிலையில் பெண்கள் கற்பழிக்க முடியாது. ஆணின் விறைப்பு மனத்தால் மூளையில் உண்டாகும் கட்டளையால் உண்டாவது. அதில்லாமல் பெண்கள் கற்பழித்தார்கள் என்று சொல்வது பொய்தான் கற்பழித்தார்கள் என்று இருந்தால் அது கற்பழிப்பு நிலையில் இருந்திருக்காது பெண்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஆணை பலவந்தபடுத்திருக்கவேண்டும் அவன் இணைய மறுத்ததால் கொலை செய்திருக்கலாம். இந்த ஆராய்ச்சி தேவையா என்று நீங்கள் கேட்கலாம்.? செய்தி தெரிந்ததால் உங்களுடன் சொல்கிறேன்.
நித்தமும் எல்லார் மனதிலும் வக்கிரங்கள் நிறைந்திருக்கிறது. அதில் சிலது அறிவை மிஞ்சி செயல் வடிவம் பெறும்போதுதான் சீரழிவு ஏற்படுகிறது பலது சட்டம் என்ற பயத்தால் தடுக்கபடுகிறது. சிலது அறிவால் தடுக்கபடுகிறது. ஆனால் சட்டத்தின் பயம் ஆசைக்கு முன் ஒதுங்கிவிடுகிறது. அறிவும் வேலை செய்வதில்லை. இதில் சாவதற்க்கும் துணிந்து தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். அதன் விளைவு அவர்களை மட்டும் பாதிப்பதில்லை அவர்களை சார்ந்திருந்த குடும்ப நபர்களையும் பாதிக்கிறது. தனி நபர் குற்றம் தனி நபருடன் போவதில்லை அது சமுக சூழலுடன் சேர்ந்தே வருகிறது.
இந்த குற்றபிரச்சனையில் உண்டாகும் காமத்தை கவனித்தோம் என்றால் அவை உடல்சார்ந்த கூறுதான் அதை ஒதுக்கிவைத்து வாழ்வை அணுக முடியாது. வயிற்றுக்கு பசி எடுத்தால் சாப்பிடுகிறோம், தாகம் எடுத்தால் நீர் அருந்துகிறோம் ஆனால் உடலில் ஹார்மோன் முலம் உண்டாகும் காமம் மட்டும் ஏன் வேறுவிதமாக பார்க்கபடுகிறது. அடக்கபடுகிறது. அடக்காமல் பாதுகாப்பான, பிறரை துன்புறுத்தாத காமம் சிறந்ததுதான். இது இல்லாமல் தவம் செய்யலாம், காமத்தை கட்டுபடுத்தலாம் என்று நாம் நினைத்தால் மேலே சொன்னதுபோலத்தான் நடக்கும் ஆண், பெண்ணை கற்பழிப்பான். பெண் ஆணை கற்பழித்தேன் என்று பொய்யும் சொல்லுவாள். காமத்தை கட்டுபடுத்தும் சமுகம்தான் நோய்வாய்பட்ட சமுகம் அங்கே குற்றங்கள் குறைவில்லாமல் நடக்கும். காமத்தை கட்டுபடுத்துதல் நடந்தால் இயற்கையின் படைக்கப்பட்டதிற்கான பொருள் விளங்காமலே போய்விடும்.
நம் தாய், தந்தை காமத்தை அசிங்கம் என்று நினைத்தால் நாம் இப்போது காமத்திற்கு விளக்கம் கொடுத்திருக்க முடியாது. ஒவ்வொரு புனிதத்திலும் ஒரு அசிங்கம் உள்ளது. ஒவ்வொரு அசிங்கத்திலும் ஒரு புனிதம் உள்ளது. மலம் வயிற்றில் உள்ளவரை அது அசிங்கமாக இல்லை அதுவே உடலை விட்டு வெளியேறிய பின்தான் மனது அதை அசிங்கமாக நினைக்கிறது. புரிதல் இருந்தால் மனது எதையும் ஏற்புடையதாகத்தான் மாற்றும் காமம் உட்பட....! மறுபடியும் சொல்கிறேன். பிறரை துன்புறுத்தாத காமம் சிறந்ததுதான்.
என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)
10 comments:
மிக நன்றாக விவரித்துள்ளீர்கள்!
//// மறுபடியும் சொல்கிறேன். பிறரை துன்புறுத்தாத காமம் சிறந்ததுதான்.////உண்மையாக, இருமன்ம் இணைந்து வரும் காமமே பிறரை துன்புறுத்தாது...நான் இதை வழிமொழிகிறேன்...
I'd recommend SEX TO SUPERCONCIOUSNESS by Osho. Wonderful book written for us to understand SEX. Without sex there is nothing in this life. Guruprasad
மிக அருமையான விளக்கம் குரு அண்ணா.
விளக்கம் நன்று..
படம்தான் .....!!
அவரவர் கண்ணோட்டம்.. குரு..
காமம்
நல்ல விளக்கம்.. பாராட்டுக்கள் குரு...
நம் தாய், தந்தை காமத்தை அசிங்கம் என்று நினைத்தால் நாம் இப்போது காமத்திற்கு விளக்கம் கொடுத்திருக்க முடியாது. ஒவ்வொரு புனிதத்திலும் ஒரு அசிங்கம் உள்ளது. ஒவ்வொரு அசிங்கத்திலும் ஒரு புனிதம் உள்ளது. மலம் வயிற்றில் உள்ளவரை அது அசிங்கமாக இல்லை அதுவே உடலை விட்டு வெளியேறிய பின்தான் மனது அதை அசிங்கமாக நினைக்கிறது. புரிதல் இருந்தால் மனது எதையும் ஏற்புடையதாகத்தான் மாற்றும் காமம் உட்பட....! மறுபடியும் சொல்கிறேன். பிறரை துன்புறுத்தாத காமம் parattugal polurdhayanithi
பிறரை துன்புறுத்தாத காமம் சிறந்ததுதான்.....
Wonderful anna,
Post a Comment