Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Thursday, October 7, 2010

நம் ஆணவத்தின் மதிப்பீடு...


பிறர் நம்மை பற்றிய மதிப்பீடு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருவிதமாக இருக்கிறது. அவை முட்டாளாய், உதவகரையாய் புத்திசாலியாய், எதிரியாய், நண்பனாய், மோசகாரராய், பாசகாரராய், வேசகாரராய், ஏமாளியாய், கோமாளியாய், சிந்தனைவாதியாய் என்று பல மாதிரி தெரிவோம். ஆனால் அவர்களிடம் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை பொறுத்தே நம்மை அவர்கள் மதிபீடுகிறார்கள்....அவர்கள் சொல்வதர்கெல்லாம் 'ஆமாம்' என  சொல்ல ஆரம்பித்துவிட்டால் நாம் அவர்கள் கண்ணுக்கு  நல்லவராய் காட்சி அளிப்போம்....அதுவே அவங்க கருத்துக்கு  எதிர் கருத்து சொல்ல ஆரம்பித்தால் அவர்கள் முகம் கொஞ்சம் கோணல் ஆகும்..."இவன நல்லவன் என்று தெரியாதனமா நினட்சிட்டமோ..." என்று நினைக்க ஆரம்பிப்பாங்க...அதுவே இன்னும் கொஞ்சம் கோவம் கலந்து சொல்லும்போது நம்மை எதிரியாகவே நினைக்க ஆரம்பிச்சுடுவாங்க...அப்புறம் உங்க பெயர் நினைத்தாலே அவங்களுக்கு நீங்க எதிரிதான்..."பிறரிடம் எதிர்ப்பு இல்லாதவரை எல்லோருக்கும் நாம் நண்பர்கள்தான்"...இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை....

எதிர்ப்பை உண்டக்குவதேல்லாம் நம் மனம் செய்யும்  வேலைதான். அதற்கு  எப்போதும் சாய்ந்து கொள்ள ஒரு ஆதரவு வேண்டும். மனம் சொல்வதை கேட்டு 'ஆமாம் சாமி'நீ சொல்வது சரிதான்' என்று சொல்ல பல மனங்கள் வேண்டும். இவைகள் இல்லையென்றால் ஆணவம் என்ற சுவற்றின் மீது ஏறி மனம் இல்லாத ஆட்டம் போடும்...இதில் நாம் செய்யவேண்டியது ஆணவம் எனும்  சுவரை உடைத்து தள்ளவேண்டும் அப்போதே மனத்தின் ஆட்டம் அடங்கும் பின்பு என்ன.? மனம் நம்மை விட்டு ஓட்டம்தான்...

நம் மனம் இல்லாத நிலையில் நம்மிடம் முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படும் அது புத்தருக்கு ஏற்பட்ட விழிப்புணர்வு அவ்விழிப்புணர்வு வந்துவிட்டால் ஒருவரை பற்றிய மதிப்பீடு நம்மிடமிருந்து தானாய் மறையும்...பின்பு அன்புள்ள  நெஞ்சத்திலே எதையும் அன்புடன் அரவனைக்க கைகள் காத்திருக்கும்...அங்கு எதிர்ப்பு இல்லை, வெறுப்பு இல்லை வேதனை இல்லை. பார்க்கும் பொருளெல்லாம் நாமாகி போகும் போது பின்பு நாம் எங்கு போவது...எல்லாமே நம்முள் அடக்கம்...!


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்: 



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

16 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா முத வடை எனக்கா? இருங்க படிச்சுட்டு வந்துடறேன்

சி.பி.செந்தில்குமார் said...

பி எஸ் சி சைக்காலஜி படிச்சீங்களா?ஒரே கலக்கலான் கருத்தா இருக்கே,வாழ்த்துக்கள்

Unknown said...

//ஆணவம் என்ற சுவற்றின் மீது ஏறி மனம் இல்லாத ஆட்டம் போடும்.//

பொதுவாகவே எல்லோருக்கும் இதுதான் நிகழ்கிறது ...

தனி காட்டு ராஜா said...

//நம் மனம் இல்லாத நிலையில் நம்மிடம் முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படும் அது புத்தருக்கு ஏற்பட்ட விழிப்புணர்வு அவ்விழிப்புணர்வு வந்துவிட்டால் ஒருவரை பற்றிய மதிப்பீடு நம்மிடமிருந்து தானாய் மறையும்...பின்பு அன்புள்ள நெஞ்சத்திலே எதையும் அன்புடன் அரவனைக்க கைகள் காத்திருக்கும்...அங்கு எதிர்ப்பு இல்லை, வெறுப்பு இல்லை வேதனை இல்லை. பார்க்கும் பொருளெல்லாம் நாமாகி போகும் போது பின்பு நாம் எங்கு போவது...எல்லாமே நம்முள் அடக்கம்...!//

உண்மை தான் தல ...ஆனால் இந்த நிலையை உணர்வது அவ்வளவு சுலபம் அல்லவே ....நேற்று நான் எழுதிய கவிதை கூட இதே பொருளில் தான் எழுதினேன் ......

எஸ்.கே said...

உளவியல்ரீதியான கட்டுரை எனக்கு மிகவும் பிடித்துள்ளது, நன்றி!

சசிகுமார் said...

vaalthukkal

Unknown said...

//வட போச்சே... இது CPSக்கு
முதல் கமெண்ட்ஸ் போட விண்டோ ஓபன் பண்ணி வச்சிருந்தேன் CPS.... அதற்குள்..ரெண்டு கஸ்டமர் எதிர்ல, நகரவேயில்லை...//
இது குரு அண்ணனுக்கு,
நல்ல கருத்து !
எதிரியையும் மனம் திருந்த ஒரு வாழ்த்து இருக்கு...
மகரிஷியின் வரிகளில் அதுக்கு நான் ஒரு ப்ளாக் போடறேன் குரு சார்...

Thenammai Lakshmanan said...

அருமையா சொன்னீங்க குரு

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃமனம் சொல்வதை கேட்டு 'ஆமாம் சாமி'நீ சொல்வது சரிதான்' என்று சொல்ல பல மனங்கள் வேண்டும். இவைகள் இல்லையென்றால் ஆணவம் என்ற சுவற்றின் மீது ஏறி மனம் இல்லாத ஆட்டம் போடும்..ஃஃஃஃஃ
அருமை நல்லதொரு சிந்தனைக்கட்டுரை...

எம் அப்துல் காதர் said...

இப்ப இத எழுதிட்டீங்கல்ல உங்க மேல யார் யார் பொறாமை படப் போறாங்களோ ?? வாழ்த்துகள்.

Anonymous said...

நல்ல சிந்தனை...அருமை நண்பரே.

விஷாலி said...

நல்ல கருத்துக்கள் உக்காந்து யோசிப்பிங்களோ

அம்பிகா said...

//ஆணவம் என்ற சுவற்றின் மீது ஏறி மனம் இல்லாத ஆட்டம் போடும்.//
உண்மைதான்.

Riyas said...

நல்லா சொல்றிங்க குரு.. நல்லாயிருக்கு..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//அவர்கள் சொல்வதர்கெல்லாம் 'ஆமாம்' என சொல்ல ஆரம்பித்துவிட்டால் நாம் அவர்கள் கண்ணுக்கு நல்லவராய் காட்சி அளிப்போம்....அதுவே அவங்க கருத்துக்கு எதிர் கருத்து சொல்ல ஆரம்பித்தால் அவர்கள் முகம் கொஞ்சம் கோணல் ஆகும்..."///

ரொம்ப சரியான கருத்து.. எல்லாருக்கும் எல்லா நேரத்துலயும் நாம நல்லவங்களா இருக்க முடியறது இல்லை.. :-))

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்