ஒரு மனநல மருத்துவரிடம் ஒரு பெண்மணி தன் மகன் சிறு வயதில் இருந்தே இன்றுவரை படுக்கையிலே சீறுநீர் கழிக்கிறான் நீங்கள்தான் அவனின் பிரச்சனையாய் தீர்க்கவேண்டும் என்று சொல்கிறார். அவர் அப்பிரச்சனையை தீர்த்தாரா..என்று தெரியவில்லை ஆனால் அதை பற்றி ஆழ்ந்து சிந்திக்க தொடங்கிவிட்டார்.
இதை போன்றே ஒரு பிரச்சனையை ஓஷோ அவர்களிடம், ஒரு பெண்மணி " ஐயா, என் மகன் எப்போதும் விரல் சூப்புகிறான். இப்படி வளர்ந்து கல்யாணம் பண்ற நிலையில் இருக்கிறான் இன்னும் விரல் சுப்பிகிட்டே இருக்கான் .எனக்கு ரொம்ப கவலையா இருக்கு" என சொல்கிறார். அதற்கு ஓஷோ, "நீ ஏம்மா கவலை படுகிறாய் நீ சீக்கிரம் அவனுக்கு கல்யாணம் செய்துவை அப்புறம் ஏன் விரலை சப்ப போகிறான், இப்பொழுது இருக்கிற பழக்கம் அப்பொழுது மறைந்துவிடும் கவலைபடாதே" என்றார்.
வட்டத்தின் நடுவே அம்பை குறிபார்த்து ஏய்வதைவிட, அம்பை ஏய்துவிட்டு அதை சுற்றி வட்டம் போட்டுவிட வேண்டியதுதான்...வேலை எளிதாக முடிந்துவிடும் அம்பும் வட்டத்தின் நடுவிலே இருக்கும். நம் இலக்கும் சரியாக இருக்கும்.
சில பிரச்சனைகள் எளிய முறையில் தீர்க்கபடுவதை பெரும் பிரச்சனையாக மாற்றுவதுதான் என்றும் நம் கலையாக இருக்கிறது..எல்லா நம்மிடமே இருக்கிறது..ஒன்றை இழந்துதான் ஒன்றை பெறவேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை..
ஓஷோவின் விளக்கத்தையும், என் எண்ணத்தின் எழுத்தினையும் வரவேற்றதற்க்கும் நன்றிகள் பல...!
என்றும் நட்புடன்:
(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)