இன்று(ஏப்ரல் 23) உலக புத்தக தினம். நம் வாழ்வின் அடிபடை பிரச்சனைகளை கூட தீர்க முடியாமல் இருப்பதற்கு
காரணம் போதிய விஷய ஞானம் இல்லாமையே ஏதோ தெரிந்ததை, தெரியாததை அறிந்து, முட்டி மோதி தம் அனுபவ வாயிலாக
வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கிக் கொண்டு வாழ்கிறோம். இப்படி கடுமையான சூழல் ஏற்படுவதற்கு காரணம் நமக்கு போதிய புத்த வாசிபில்லமைதான். பள்ளி, கல்லூரி படிப்பின் அறிவு பணம் சம்பாதிக்க மட்டுமே தேவையாக இருக்கிறது
என்று படிக்கிறோம். அங்கு பாடத்தை பற்றிய புரிந்துகொண்ட அறிவு சிறிதுதான். ஆனால் அதை தாண்டி யாருக்கும் இன்று பொதுவான விசயங்களை கற்கும் ஆர்வம் இல்லை. 40 வருடன் ஒருவர் தாம் வாழ்ந்த, உணர்ந்த அனுபவத்தை புத்தகம்
வாயிலாக விளக்கி எழுதுகிறார் என்றால் நாம் அதை வெறும் நான்கு மணி நேரதிற்குள் படித்து
தெரிந்துகொள்ளலாம். அவரின் 40 வருட அனுபவம் நம்மிடம்
அப்படியே வந்து சேரும். இவையாவும் புத்தக வாசிப்பினாலே
சாத்தியம்.
முன்பின் பார்க்காத ஒரு இடத்திற்கு நீங்கள் போகிறீர்கள் என்றால்
குறைந்த பட்சம் அந்த இடத்தை பற்றிய தகவலை அந்த இடத்திற்கு போயிட்டு வந்தவர்களிடம் கேட்டு
தெரிந்து கொள்வது சிறப்பாகும். அதைவிட சிறப்பு அதை பற்றிய
விவரங்களை புத்தங்கள மூலம் அல்லது நவீன தொழிற்நுட்பத்தில் இருக்கும் "கூகுல் மேப்" போன்றவற்றை பார்த்துதெரிந்துகொள்வது அறிவார்ந்த செயலாகும். இது அவ்விடதிற்கு செல்லும் நேரமின்மையை, அலைச்சலின்மையை குறைக்கும். ஆக தகவல் என்பது நாம் ஏதோ ஒரு
ஊடகம் முலம் தெரிந்துகொள்கிறோம். இந்த தெரிந்துகொள்ளுதல் தேவைபடும்போது
மட்டும் தேடிபிடித்து நாம் தெரிந்துகொள்வதைவிட அதையே வாழ்வின் ஒரு தேவையாக அமைத்துகொண்டால்
எப்போதும் அது நல்லது.
குடிகாரனுக்கு ஒரு நாள் குடிக்கிலன்னா அவன் கை காலேல்லா ஆட ஆரம்பத்திடும்
அது அவனுக்கு போதை சார்ந்த விசயம். இதுபோல நாம் ஒரு நாள் புத்தக
வாசிக்கலன்னா நமக்கும் அறிவு ஆட ஆரம்பிக்கனும். குடிகாரனின் போதை ஆரோக்கியத்தை கெடுக்கும் என்றால் இந்த அறிவு போதை நமக்கு ஆரோக்கியத்தையே
கொடுக்கும்.
நான் ஒரு விசயத்தை இங்கு சொல்லியாகனும் நான் அடிப்படையில் "ஆட்டிசம் ஸ்பேக்ட்ரம் குறைபாடு" உடையவன். இந்த ஆட்டிசம் என்றால் என்ன என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்பது எனக்கு
தெரியாது இருந்தும் அதை சில வரிகளில் சொல்கிறேன். ஆட்டிசம் என்பது நோய் இல்லை. இது ஒரு தனிமை எந்த நபருடன்
சேராமல் தனித்திருந்தல். இது குழந்தை பருவத்தில் இருந்தே
தொடங்குகிறது. இக்குறைபாடு குழந்தைகளின் கற்றல் திறனை மந்தப்படுத்தும். அவர்களின் பிரச்சனை என்னவென்றே பிறர் கண்டுபிடிக்க முடியாமல் நிலையில் இருக்கும். உணர்ச்சிகள் கொந்தளிக்கும் ஆனால் அதை வெளிபடுத்த அவர்களுக்கு தெரியாது. பேச்சு தடுமாறும். இப்பிரச்சனை இந்தியாவில் 30 கோடி பேருக்கு இருக்கிறது. என்கிறது ஒரு ஆய்வு. இதனை பெற்றோர்கள் ஆதரவுடனும், ஆசிரியர்களின் ஆதரவுடன்தான்
தீர்க்கவேண்டும்.. பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஆட்டிசம் என்றால்
என்ன என்றும் அதை தீர்க்கும் வழி என்ன என்பதை கண்டிப்பாக தெரிந்துகொள்ளவேண்டும். இந்த விசயத்தில் போதிய விழிப்புணர்வு எல்லா தரப்பட்ட மக்களூக்கு ஏற்படவேண்டும்.
இந்த குறைபாடு உள்ள ஆட்டிச பிரச்சனையில்தான் என் இளமை வாழ்வு
சென்றுகொண்டிருந்தது. எனக்கு என்ன பிரச்சனை என்று யாரும் கேட்கவும் இல்லை, புரிந்துகொள்ளவும் இல்லை. என் நிலை எனக்கே பரிதாபமாகதான்
இருந்தது. இப்பிரச்சனையை நான் புகழ்பெற்ற மருத்துவமனையிலே தீர்த்துகொண்டேன். என் பிரச்சனையை தீர்த்த மூன்று புகழ் பெற்ற மருத்துவரகள் அங்கு இருந்தார்கள். அவர்களே என் பிரச்சனையை ஒன்றுமில்லாமல் போக்கிவிட்டார்கள். எனக்கு முழு சுதந்திரத்தை அளித்தார்கள்.. என்னை நானே பலவருடம் அடைத்து வைத்த சிறை கம்பிகளை தூள்தூளாக நொருங்கி போட்டார்கள். என்னை சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்தார்கள். நான் சுதந்திரமானேன்.
அம்மருத்துவமனை எதுவென்று நான் சொல்லியாகவேண்டும். ஆம்.! அம்மருத்துவமனை நான் தேடி சென்று படித்த நூலகம்தான். அந்த புகழ் பெற்ற மூன்று மருத்துவர்கள் தந்தைபெரியார், காரல் மார்க்ஸ், ஒஷொ இவர்களே என்னை சமூக சூழலுக்கு ஏற்றார்போல் மாற்றி அமைத்தார்கள். என்னை மீட்டேடுத்தார்கள் எதையும் சாமளிக்கக் கூடிய திறமையை எனக்கு அளித்தார்கள். இன்றும் நான் படிக்கும் 70% புத்தகம் இவர்களுடையதாகதான்
இருக்கும். நூல் வாசிப்புக்கு நானே ஒரு சிறந்த உதாரணம்.
இவ்வுலகம் பல அழகியலை கொண்டுயுள்ளது. அவையெல்லாம் நூல்கள் வழியே நாம் காணலாம். ஒரு கவிதை காதில் கேட்பதை விட எழுத்தில் படிக்கும்போது அது உயிர்ஓட்டம் பெறும். எவ்வவோ மனிதர்களின் வாழ்வியலை பல இலக்கிய நூல்கள் சுமந்திருக்கிறது. பல கட்டுரை உரை நடைகள், உலக அரசியல், சமூக சூழலை நம் கண் முன்னே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இவையேல்லாம் தவிர்த்து பிறர் மெச்சி கொள்ள வீடு வாசல், பணம், காரு போன்ற தேவைக்கு மிஞ்சியதை சேர்த்துகொண்டு வாழ்வது கடைசிவரை
ஒருவித சலிப்பையே தரும். வாழ்க்கைக்கு பணம் மற்ற வசதிகள்
தேவைதான் ஆனால் வாழ்வு பணம் மட்டும் சார்ந்தது இல்லை. அதை தாண்டிய பார்வை நமக்கு இருந்தால் உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் ரசிக்கலாம். அந்த ரசிப்பு திறனை நேரடியாக நமக்கு கொடுப்பது சிறந்த நூல்களே அந்த நூல்களை சுமந்திருக்கும்
நூலகங்களே.. என்னை கேட்டால் உங்களுக்கு நூல்களை மட்டும் நண்பர்களாக்கி கொள்ளுங்கள். அதைவிட சிறந்த நண்பன் எங்கையும் இருக்கமாட்டான். அவன் எப்போதும் உங்களை பகை கொள்ளாமல் நட்பு பாராட்டியே இருப்பான்.
இன்று உலக புத்தக தினத்தில் நீங்கள் ஒரு புத்தகமாவது வாசியுங்கள். ஒரு அடி எடுத்து வையுங்கள். அடுத்த அடிக்கான உந்துதல் முதல்
அடியில் இருந்தே கிடைக்கும். அப்புறம் உங்களால் எங்கும்
நிற்க முடியாது. அது ஒரு அழகியல் பயணம். நீங்கள் திரும்பி பார்த்தால் உங்கள் பின்னால் கம்பன், ஷேக்ஸ்பியர். காளிதாசன், ரவிவர்மா, ஐன்ஸ்டின், நியுட்டன், ஒஷொ, பெரியார், மார்க்ஸ், மேடம் க்யுரி, அன்னை தெரசா போன்ற உயிர்ஜீவிதம் புத்தகம் வாயிலாக உங்களுடன் வருவார்கள்.
அதனால் இன்று ஒரு நாள் மட்டும் வாசியுங்கள்.
நட்புடன்: