Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Saturday, July 31, 2010

நம்மை நாமே தேடிகொள்வோம்....

மனித மனதுக்கு எதாவது பற்றிகொள்ளவேண்டும் என்ற ஆவா எப்போதும் உண்டு.. அது ஆன்மிகம் என்று வரும் போது யோசிப்பதே இல்லை காந்தம்போல் சட்டனே பற்றிகொள்கிறது பற்றியும் எரிகிறது செலவில்லாமல் விளம்பரமாக புகழ் தேடிகொள்கிறது. மக்கள் தன்னை தானே அறியாதவரை போலி சாமிகளிடம் ஏமாறத்தான் செய்வார்கள். இதில் மக்களுக்கு  ஒட்டுமொத்தமாக சுயநலம்தான்..பொருள் தேடுதல் இருக்கின்றது ஆனால் தன்னைதானே தேடும் சுய தேடுதல் இல்லை...கண்ணை மூடினால் காட்சி தெரியும் ஆனால் கண்களை மூடத்தான் யாரும் தயாரில்லை...கண்ணை மூடினால் மாலையை போட்டு படுக்க போட்டுடறான்..எப்போதும் விழிப்பா இருக்குனும் போல விழுமீன், எழுமீன், கருமீன்.....!


மனம் எனபது எண்ணங்களின் தொகுப்பு அது கடகின்றது,கடந்தது, கடப்பது இவற்றின் மொத்த தொகுப்பு இவையெல்லாம் மூளையில் நினைவாய் பதியபடுகிறது தேவையானபோது மனம் எடுத்து அலசுகிறது..இதில் தனியாக உணர்வு, அறிவு சார்ந்து பிரிவு உண்டாகிறது...உணர்வு இதயம் சார்ந்தது, அறிவு மூளை சார்ந்தது இதில் மனத்திற்கு, அறிவை விட உணர்ச்சிக்கே அடிபணியுது எண்ணமான அறிவையே இன்னும் பகுத்து ஆராயும்போது அது பகுத்தறிவாய் மாறுது.. நம் மனம் சார்ந்த எண்ணகளுக்கு இவ்வளவு வேலை..நம் எண்ணங்களுக்கு வாழ்வு நீடித்து கொண்டே இருக்கும் ஆனால் உடல் மரணத்தை நோக்கிதான் செல்கிறது வாழ்வின் கடைசி தருணம் மரணம் பயமாக காட்சிதரும் அது வாழும் போதும் பல பேருக்கு ஒரு அச்சஉணர்வையே கொண்டதாகவே இருக்கும் வாழ்வு முழுவதும் இருந்துகொண்டே இருக்கும்  வாழ்வு முடியும் தருவாயில் அச்சம் அதிகமாகவே இருக்கும் அம்மரண நினைத்து பயப்பட தேவையில்லை அது எத்தகையதாக இருக்கும் என்றால் உங்க சுண்டு விரல் வெட்டுபட்டால் வெட்டுபட்ட இடத்தில்தான் வலிக்கும். துண்டான விரலுக்கு அப்போது வலி இல்லை. உங்கள் கண்முன்னே துண்டான விரலை தீயிட்டு கொளுத்தலாம் உங்களுக்கு வலி இல்லை நீங்கள் அதை வேடிக்கை மட்டுமே பார்பீர்கள் இதேபோல்தான் நம் மரணத்திற்கு பின் இந்த உடலை நம் எண்ணங்கள் பார்க்கும். அதை நீங்க மனசாக கூட வைத்துக்கொள்ளாம். மனமே உடலை ஆள்கிறது. உருவம் இல்லாத மனம்தான் வலிக்குது என்போம். இது வேடிக்கைதான்...



வாழ்கையை பற்றி எத்தனை, எத்தனை பேரு சிந்திகிறாங்க அதை பற்றி பல்வேறு தத்துவங்கள் வேற சொல்றாங்க புத்தகம் எல்லாம் போடுறாங்க....ஆனா யாரும் முழுமையாக வாழ்ந்ததாக தெரியவில்லை...பல பேருக்கு பழையதை தூக்கி போடா மனம் இருக்காது பழைய செருப்பனாலும் சரி...அதை கொஞ்சம் நாள் வச்சுருந்து அப்புறம் போடுவாங்க ஏன் என்று கேட்டால் பழச மறக்ககுடாதாம்...ஆனா பிறர் செய்யும் உதவி மட்டும் எப்படி மறந்து போகிறது இது பழசில்லையா....நமக்கு பிறர் செய்யும் உதவியை தவிர மற்ற எல்லா பழசையும் தூக்கி போடுவோம். உங்க சிந்தனை, செயல் எல்லாம் புதுமையாய் இருக்கவேண்டும்....என்றும் பழமையை பேசிக்கொண்டு பழமை வாதியாய் இருக்கவேண்டாம்...



நம்முன்னே பிறர் பேசிகொண்டிருக்கும் போது அவங்க கால்மேல் கால் போட்டால். நம் ஆணவம் சிலிர்த்து ஏழும். அவங்க கால் மேல் கால் போட்டு இருக்க நமக்கு எப்படி மரியாதை குறைச்சல் வருகிறது. ஆனால் வரும். நம் ஆணவம் கேட்காது. நீயும் கால்மேல் கால் போடு" என்று கூறும்....கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தால் நம் ஆணவத்திற்கு ஒரு கம்பீரம் உண்டாகும். பிறரை பார்க்கும் பார்வை வேறுபடும்...பேசும் தோரணை மாறும்...அப்போது உங்கள் ஆணவத்தை நீங்கள் நன்கு உணரலாம்...அதை பார்க்கலாம் அப்போது அதை பாருங்கள் அதுதான் உங்கள் ஆணவம் அது இவ்வளவு நாள் உங்களுக்கு தெரிந்தும் தெரிமல்தான் இருந்தது. அவ்வாணவத்தை அடையாளம் காணுங்கள் ஒருநாள் அது இல்லாமலே போய்விடும். ஆணவம் நம்முள்ளே எப்போதும் ஒரு பெரும் சுவராக காட்சியளிக்கும் அதை தாண்டிவர நம்மை எப்போதும் அது அனுமதிப்பதே இல்லை....அது ஏதாவது ஒரு எதிர் கேள்வியை கேட்கவைத்து கொண்டே இருக்கும்...பிறர் சொல்வது உண்மை இருந்தாலும் பொய்யென்றே வாதிடும்......உண்மையாய் ஏற்றுகொண்டால் ஆணவம் செத்துவிடும்..ஆனால் சாவாமல் உயிர் வாழ்வே ஆணவம் ஆசைபடுகிறது....



ஒருவர் நம்மிடம் கேள்வி கேட்கும்போதுதான் நம் சிந்தனை தூண்டபடுகிறது. ஆனால் கேள்விகள் இல்லாமல் பலபேருக்கு எப்படி சிந்தனை தூண்டபடுகிறது. அது சமுதாயத்தை  பார்க்கும்  பார்வையால் இருக்கலாம்,  கேள்வியாக இருக்கலாம், கேட்கும் ஒலியில் வரலாம், நுகரும் வாசனையில் உண்டாகலாம். ஒருவரின் சிந்தனை என்பது இன்னொன்றின் தழுவல்தான். நியூட்டனுக்கும் ஒரு ஆப்பில் விழுந்தவுடன்தான் அவரின் சிந்தனை தூண்டபட்டது அவரின் சிந்தனையும் ஒரு பழத்தின் தழுவல்தான். ஏதேச்சையாக சிந்திக்கும் சிந்தனைதான் பெரிய மாற்றங்களை உண்டாக்கிருக்கிறது.



என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:



(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழிஷ், உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.)

Monday, July 26, 2010

என்னுள் இன்னும் பல கேள்விகளும் அதற்கான பதில்களும் வந்துகொண்டே இருக்கின்றன...முடிவில்லாமல்....!



பலபேர் மரணத்தையும், வாழ்கையின் ஏற்படும் சலிப்பு பற்றியே நினைக்கிறார்களே..ஏன்.?

வேதனை  ஏன் உங்களுக்கு எல்லோருக்கும் எப்போதும் மரணத்தை பற்றியே சிந்தனை...என்ன வாழ்வு வாழ்ந்தீர்கள். வாழ்கை எனபது மழலையின் சிரிப்பு போன்றது கள்ளம் கபடம் அற்றது...வாழ்ந்தவர்களுக்கே அதன் அழகு புரியுமே....ஒரு முறை வாழ்ந்து பாருங்கள்...! மறிப்போம் என்ற எண்ணம் வராது...வந்தாலும் அது மரித்தல் ஆகாது...தூங்கி எழுவது போன்றது மரணம்..! 


பிட்சைகாரர்களிடமே பிச்சை கேட்பவர்கள் யார்...?

சென்னையில் மின்சார ரயிலிலே கண்ணு தெரியாத பிச்சைகாரர்கள் பிச்சை எடுக்க பாடுகிறார்கள். "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே நான் ஒரே ஒரு புன்னைகையை கண்டேனே..."என்று சோகம் ததும்பிய முகத்துடன் பாடுகிறார்கள். இன்னொரு முஸ்லிம் பிச்சைகாரர் பாடுகிறார். இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டு பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை.."என்று மூடர்கள் முன்னே இல்லாத இறைவனை நினைத்து பாடுகிறார்கள். வறுமை உள்ள நாட்டில் தான் வள்ளல்கள் பிறப்பார்கள். அவர்கள்தான் அனாதைகளுக்கு விருதளிக்க மற்ற நாட்களை விடுத்து பிறந்தநாளில் செல்வார்கள் புண்ணியம் தேட..! மற்றும் நான் ஒரு வள்ளல் என்று விளம்பர புகழ் தேட..! இந்தியாவில் பிட்சைகாரர்களும், தொழுநோய்காரர்களும் அனாதைகளும் இல்லாமல் இருந்துதிருந்தால் அன்னை தெரசா போன்றவர்கள் புனிதர்கள் ஆகாமலே போயிருப்பார்கள். சில பேர் போற்றி புகழ்வதற்கு பலபேர் ஏழ்மை காரணமாய் இருக்கிறது.  


எது முக்கியம்...?

பசித்தவனுக்கு முதலில் உணவுதான் முக்கியம்...உபதேசமோ, கடவுள் பிரார்த்தனையோ முக்கியமில்லை....


நீ நேசிக்கும் உயிர்..?

பார்க்கும் உயிர்கள் எல்லாம் நம் உயிர்போல் நேசி..!


நம் சுதந்திரம் எப்படி கிடைத்தது...?

இந்நாட்டின் சுதந்திரமும் அடி வாங்கிதானே கிடைத்தது. இன்னும் வெள்ளக்காரன் நினைப்பில் நம் அரசியல்வாதியிடம் அடிமைகலாகத்தானே நாம் உள்ளோம். நினைப்பு அப்படியேதான் உள்ளது அதனால் தான் மேன்னாட்டு நாகரிகத்தை மேன்மைபடுத்தி பேசுகிறோம்...நம்மிடம் என்று தனியுமோ இந்த அடிமையின் மோகம்..!


நம் நாட்டிற்கு ஆபத்து யாரால்..? 

இந்தியாவுக்கு கண்கெட்ட பின்பே சூரிய வணக்கம்....இந்தியாவில் சீனாவின் ஒட்டுமொத்த  தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இருக்கு...இதுக்கு முத்துமாலை என்று பெயர் வேற...போர் வந்தால் பாதிப்பு அரசியல்வாதிகளுக்கா... இவனுங்கள்ல நம்பி ஓட்டு போட்ட அப்பாவி மக்களுக்குதான்..நண்பர் ஒருவர் கூறினார் "இலங்கை விசயத்தில் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை மருமகள் தாலி அறுக்க மகனை கொன்றதுபோல்." உலக நாட்டு அரசியல்வாதிகளுக்கு பைத்தியம் பிடித்தால் உலகம் அழிந்துவிடும்..அறிவு சார்ந்த உலக அறிஞசர்கள் இதை உணரவேண்டும்


ஆணவம் எவற்றால் அடக்கபடுகிறது..?

பெர்ணட்ஷாவிடம் ஒரு பெண் நிருபர் "நீங்கள் ரொம்ப அறிவாளியை இருக்கிறீர்கள். நான் ரொம்ப அழகாக இருக்கிறேன் நாம் கல்யாணம் செய்துகொண்டால் உங்களை மாதிரி அறிவாகவும் என்னை மாதிரி அழகாகவும் ஒரு குழந்தை பிறந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்றாளாம். அதற்கு பெர்ணட்ஷா நல்லாதான் இருக்கும் ஆனால் என்னை  போன்ற அழகும் உங்களை போன்ற அறிவாக குழந்தை பிறந்தால் என்ன ஆவது என்றாராம். அறிவின் முன்னே பிறர்கொள்ளும் ஆணவம் அடக்கப்படும்...!


ஐன்ஸ்டன் சொல்கிறார்..?
   
குவாண்டம் தியரி பற்றி ஒரு பையனுக்கு ஐன்ஸ்டன் விளக்குகிறார். "நீ உன் காதலியுடன் இருந்தால் ஒரு யுகமும் ஒரு நொடிபோல் அதே உனக்கு பிடிக்காத கணக்கு வகுப்பில் நீ இருந்தால் ஒரு நொடியும் உனக்கு மரண யுகம் போல் இருக்கும்" என்றாராம்.

இதே போலதான் காதலும், கல்யாணமும்..இருக்கிறது போல (இது ஒரு அப்பாவியின் புலம்பல்) 


காதலா, கல்யாணமா...?

கல்யாணம் செய்வதை விட காதலிட்சுகிட்டே இருக்கலாம் போல கல்யாணம் எனபது சுதந்திரமா திரிந்த பறவையை இறக்கை வெட்டி கூண்டில் அடைத்தது போலத்தான் காதல் ஒரு உயிர் துடிப்பானது கல்யாணம் அந்த துடிப்பை மறைமுகமாக அடக்கிறது. காதல் ஒரு சுகமானதுதான் அதை உணர்ந்தவர்களுக்கே  அதன் ஆழம் தெரியும். கல்யாணம் பண்ணாம காதலிக்கலாம் என்று நினைக்கிறேன்....கல்யாணம் என்ற நிலை தேவை இல்லை என்பதே என் நிலை...காதல் எப்போதும் ஒரு சார்ந்திருத்தலை ஏற்படுத்தாது அது ஒரு சுதந்திர உணர்வை தரும். அதனால் வயதனாலும் காதலிக்கலாம்...காதல் அவர்களின்  வயதை இன்னும் அதிகரிக்கும்..


பெண்களின் ஆளுமை எங்கே இருக்கிறது..?

பெண்களை நேரடியாக துன்புறுத்தாத மறைமுகமாக சைட் அடிச்சு ஜொள்ளு விடறவன் ஜொள்ளு விட்டு போறான். இதில் பெண்கள் கோவப்பட தேவை இல்லை என்றே நினைக்கிறேன்...இதில் மறைமுகமாக பெண்களும் அதைத்தானே விரும்புறாங்க...என்று நினைக்கிறேன். ஆண்கள், பெண்களை ஏறடுத்து பார்க்கவில்லை என்றால் அவள் ஆளுமையே ஆட்டம் கண்டுவிடும்...இது பொய் என்று நினைத்தாலும் இதுதான் உண்மை...



பிள்ளைகள் விசயத்தில் பெற்றோர்கள்...?

பெற்றோர்கள் திரைபடம் பார்க்கும் போது படத்தில் நடிக்கும் காதலர்கள் சேரவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவங்க பொண்ணோ, பையனோ காதலித்தால் எதிரியாகி விடுகிறார்களே ஏன்..? இது ஒரே ஓரவஞ்சனை இல்லையா..பெற்றோர்கள் பிள்ளைகள் மனசை என்றும் புரிந்துகொள்ளாவேண்டும்.


மனித இயல்பு மாறுவது எப்படி..?

ஒரு சிலபேர் செய்யும் தவறால் ஒரு இனத்து மக்கள் மேல கோவம் கொள்ள செய்யும் இது மனித இயல்பு...தமிழர்களை கொன்றவன் ராஜபக்ஷே ஆனால் சிங்கள மக்கள் மேல் நமக்கு இன்னும் கோவம் உண்டல்லவா...


மனிதனை முட்டாளாக்குவது  எது..?

உலகில் உள்ள எல்லா மதங்களுமே மனிதர்களை முட்டளாக்கவே முற்படுகின்றன. இயற்கையை மீறிய கட்டுபடுத்துதல்தான் எல்லாமதங்களிலும் நடக்கின்றது.


உற்சாகம் எப்படி..வரும்.?

"இந்த நொடியில் உற்சாகமாய் இருங்கள் அடுத்தநொடி உற்சாகம் தானாய் வரும்."                              

இது என் எண்ணத்தில் தோன்றிய வாசகம். என்னுடைய  எல்லா செயலும் இதன் அடிப்படையில்தான் இயங்குகிறது. இது என் அனுபவம் கூட...இது உங்களுக்கு சரி என்றால் ஏற்றுகொள்ளுங்கள். இல்லையென்றால் உங்கள் சிந்தனையில் இருந்து அகற்றிவிடுங்கள். ஏனென்றால் உங்கள் சிந்தையில் இருக்கும் பல குப்பையில் இதுவும் ஒரு குப்பையாய் சேர்ந்துவிடும்.  


எது கடந்து போகும்..?

இதுவும் கடந்து போகும் என்பார்கள். எதுவும் இல்லையென்றால் எது கடந்து போகும்...மகிழ்ச்சியை கடக்க மனம் அனுமதிப்பதில்லை துக்கத்தைதான் கடக்க மனம் துடிக்கிறது...மகிழ்ச்சியும், துக்கமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் இதை நாம் புரிந்தால் எதையும் கடக்கவேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் எழாது....அது வருவதும் தெரியாது, போவதும் தெரியாது...வந்தது போலவே சென்றுவிடும்.


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழிஷ், உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.)

Wednesday, July 14, 2010

என்னுள் தோன்றிய பல கேள்விக்கு நானே பதிலை ஆராய்ந்தேன். இவை சரியா.? தவறா.? எனபது உங்கள் பார்வைக்கே:

 
ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்பு எது..?

ஆணுக்கும்,  பெண்ணுக்கும்  உள்ள  நட்பு நட்பல்ல...அது  ஒரு  வித  நட்பு முலாம்  பூசப்பட்ட  காமம்  கலந்த  காதல்தான். அது  முதலில் கவர்ச்சியில்தான்  ஆரம்பிக்கிறது. கவர்ச்சி  மெல்ல  மெல்ல  விழுங்கி காதலாய்  வெளிப்படும்.  நம்  மனதுக்கு  எல்லாமே  ஒரு ஈர்ப்பு.  அவ்விர்ப்பு தாயிடம்  அன்பாய்  வெளிபடுகிறது.  மகளிடம்  பாசமாய்  இருக்கிறது. சகோதரியிடம்  அன்பு  கலந்த  ஆதரவாய்  இருக்கிறது.  ஆனால் மனைவியிடமும்,  நமக்கு  பிடித்த  நட்புதான்  நம்புங்கோ...! என்று  சொல்ற பெண்களிடமும்  மட்டும்  அன்பு,  பாசம், நேசம்,  கருணை  இவையாவும் ஒட்டுமொத்தமாய்  வெளிப்பட்டு  காமமாய்  வருகிறது.  இது  உண்மைதான். எல்லோருடைய  ஆணின்  மனதுக்கும்  பெண்ணின்  நட்பு  பொய்  என்றே தெரியும்.  அது  பொய்தான்  என்று  உண்மையாக  ஒப்புகொள்ளமாட்டர்கள்.


தியானத்தை வார்த்தைகளால் சொல்லமுடியுமா..?

தியானத்தை பற்றி விஞ்ஞானமும் அறிந்தவன் பக்கம் பக்கமாக எழுதலாம், சொல்லலாம் ஆனால் உணரமுடியாது. மெயஞானமும் கண்டவன் தியானத்தை உணரமுடியும் ஆனால் சொல்ல தெரியாது. சொன்னால் அது தியானமாகாது. இதில் வார்த்தைகள் அற்ற நிலையே தியானம். உள்ளுணர்விலே ஏற்படும் அனுபவம் அவ்வளவுதான். இதன் தொடக்க ஆரம்பம் இவ்வளவுதான் ஆனால் அதன் எல்லை அதை உணர்ந்தவனுக்கே தெரியும்.


மனங்களுக்கு பிராத்தனை அவசியமா..?

மனங்களை புரிந்தால் மதம் தேவையில்லை. பிராத்தனை செய்வதான மனத்துக்கு ஒத்தடம் கொடுக்கவும் அவசியமில்லை. ஆனால் மனங்களை புரிந்துகொள்ளத்தான் மனம் இடம்கொடுக்க மறுக்கிறது...ஏனென்றால் மனத்தின் உயிரே ஆசைதான்....
   

ஒரு இனத்தின்  மொழி எப்படி புரிந்துகொள்ளவேண்டும்...? 


மொழி  எனபது  ஒரு இனத்திற்கு  அடையாளம்தான். அந்த அடையாளமே வாழும் வாழ்வாகாது நாகரிகம் இல்லாமல் காட்டில் நாடோடியாய் திரிந்த மக்களுக்கு சைகை மூலமே மொழி பரிமாறப்பட்டது. பயம், அன்பு, அதிர்ச்சி, கோவம் போன்ற நிலைகளிலே மனிதனின் வார்த்தைகளாக வரத் தொடங்கின அது ஒரு பொருளுக்கும், உயிர் உள்ளத்துக்கு வார்த்தை பெயர்களாய் ஆனது. ஆது நாளடைவில் செம்மைபடுத்துவரால் செம்மைபடுத்தப்பட்டது. நாம் மொழிகளை மேலோட்டமாய் பார்த்தால் மொழி உணர்வு அதிகமாய் வெறித்தனம்தான் உண்டாகும். உங்க அம்மாவை நீங்க அம்மான்னு சொல்றதால நான் எங்க அம்மாவை அம்மான்னு சொல்றதில்லை அது இயற்கையா நாவில் வரும் முதல் வார்த்தை அந்த குழந்தைக்கு சொல்லவில்லையென்றாலும் அது அம்மா என்றுதான் சொல்லும். இக்குழந்தைக்கு 'அம்மா' என்ற வார்த்தை தெரியவருவது எப்படி...? அது உணர்வு சம்பந்தப்பட்டது. அதற்காக அக்குழந்தை எந்தவித போராட்டமும் செய்யவில்லை நாவில் வரும் வார்த்தையை அனுமதிக்கிறது அவ்வளவுதான்...நம்  மொழிகளின் ஆழத்தை புரிந்துகொள்வோம் அதுனுடன் மல்லுகட்டவேண்டும் என்று நினைக்கவேண்டாம்...


தமிழ் மொழி பேசும் மக்களின் பேச்சு கலப்படம் எப்படி...?

நாம் எல்லோர் எழுதும் கையெழுத்து ஒரே மாதிரியில்லை வேற வேற மாதிரி இருக்கின்றன அப்படியிருக்கும்போது நடைமுறை வாழ்கையில் வாழும் மக்களின் பேச்சுகள் திரிந்து பல மொழி கலப்படம் ஏற்பட்டு ஒரு புதுவடிவாமாக இருக்கிறது. அதுவே அவர்கள் பழக்கமாக இருக்கிறது. இதை வெளியில் இருந்து பார்பவர்களுக்குதான் குறையாக தெரியும் அவங்களுக்கு தெரியாது. எல்லோரும் தமிழை படிந்திருந்தாலே தமிழ் பற்று இருக்கவேண்டும் என்றில்லை படிக்காத பாமரனும் தமிழ் மேல் ஆர்வம் கொண்டவராகத்தான் இருப்பான். படிக்க தெரியவில்லை என்பதற்காக அவர்களை தமிழன் இல்லை என்று சொல்லமுடியாது. தமிழ் மொழியை திரித்து பேசுகிறார்கள் அது அவங்க வட்டார மொழியாய் இருக்கிறது. அது அவங்க நடைமுறை பழக்கமும்கூட...ஒரு மொழியின் பழகத்திற்க்கும், அம்மொழியின் மரபுக்கும் வித்யாசம் இருக்கிறது. ஒரு பேச்சுமொழி இப்படி பேசுறாங்க என்பதால் அதன் மரபு பாதிக்கபடாது. அதுவே எழுத்தில் எழுத்தும்போது மரபோடுசார்ந்துதான் படிக்கும் முறையில் எழுதவேண்டும். நாம் உண்ணும் உணவில் கூட உங்களுக்கு பிடித்த உணவு எனக்கு பிடிக்காது. எனக்கு பிடித்த உணவு உங்களுக்கு பிடிக்காது. இதில் பிடிக்காது போவது ஒருவரின் குறையல்ல...அதனால் ஒருவர் இப்படி பேசுறார் அப்படி பேசுறார் என்பதைவிட அவர் என்ன பேசுறார் என்பதையே பொருள் கொள்ளவேண்டும்.

 

மொழி காக்கவேண்டுமா.? இனம் காக்கவேண்டுமா.?

ஒரு இனத்தை அழித்து மொழியை காப்பதில் என்ன பயன். அம்மொழிக்கு எதற்கு செம்மொழி என்று பெயர்....ஆனால் இதை கட்சிதமாக செய்தார். நம் தமிழின தானைத்தலைவர்: "கருணை இல்லா நீதி"


மற்றவங்க அறிவுரையை நாம் ஏற்றுகொள்ளவில்லை என்றால் "நாய் வாலை நிமிர்த்த முடியாது" என்று சொல்றாங்க ஏன் சொல்றாங்க..?  

நாய் வாலை நாம் ஏன் நிமிர்த்தனும் நமக்கு என்ன பைத்தியமா....ஆனால் நிமிர்த்திதான் ஆகணும்ன்னு சிலபேரு இருக்காங்க அவங்களை என்ன பண்ண்றது......நாய் வால் அப்படியே இருந்தாதான் நாய்க்கு அழகு.....நாம் நாமாகவே இருந்தாதான் நமக்கழகு நாம் இன்னொருத்தர் மாதிரி மாறணும்னு நினச்ச அது எப்படி நல்லா இருக்கும்......நாம் எந்த வடிவத்திலும் மாறாமல்...நம்முடைய மாற்றம் நம் சிந்தனை, செயல் மற்றும் எண்ணங்களை பொறுத்தே இருக்கவேண்டும் அமையவேண்டும்....இது நல்லா இருந்தா ஏத்துக்குங்கோ இல்லனா தூக்கி தூர எரிங்க...இதுவும் உங்க சிந்தனை பொறுத்தே இருக்கவேண்டும்.


 ‎"முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை படலாமா"...?

என் கேள்வி "ஏன் ஆசை படக்கூடாது..."


"நதியை கேட்டா நீர் கொள்கிறீர்கள்". -என்று சில பேரிடம் இப்படி ஒரு கேள்வி..?

நீரை நீராய் பார்த்தால் நதியென் கேட்கவேண்டும். நீர் வற்றினால் நதி எங்கே...? இது என் பதில்.


மற்றவங்க வாதம்தான் சரியென்று சொல்றாங்களே இது எதனால்...?

நம் மனதுக்கு யார்மேலாவது சாய்ந்துகொள்ளவேண்டும் என்ற ஒரு ஆவால் எப்போதும் இருக்கும். அது மற்றவருடைய கருத்தாககுட இருக்கலாம். அவங்க, அவங்க கருத்தின் நியாத்தை தெரிபடுத்தலாம். இதில் மற்றவங்க வாதம் சரியோ, தவறோ அது அவங்க நிலைப்பாடு....சரியென்றால் மேற்கோள்காட்டி பேசலாம் அது தவறில்லை.......ஆனால் நான் பிடிச்ச முசலுக்கு மூணு கால் என்றால் ஒன்னும் பண்ணமுடியாது...


பத்தினிக்கும், மழைக்கும் என்ன சம்பந்தம்..?

‎"பெய்யென்றால் பெய்யும் மழை" என்று பத்தினி சொன்னால் மழை பெய்யுமாம். பத்தினியாய் இருக்குறதுக்கும் மழை பெய்யரதுக்கும் என்ன சம்பந்தம். அது பெய்யும் போது பெய்யபோகிறது. அமாவாசைக்கும், அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம்....இப்படிதான் அதிகம் பேரு சம்பந்தம் இல்லாம முடிட்சுபோடுறாங்க....


நம் செயல்  எதன் அடிப்படையில் தீர்மானிக்க படுகிறது..?


நாம எந்த வேகத்தில் பந்தை சுவற்றில் அடிக்கிறோமோ அதே வேகத்தில்தான் பந்து நம்மை நோக்கி வரும்....நாம் செய்யும் செயலும் இதன் அடிப்படையில்தான் இருக்கும்.....அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி..


எது நிஜம்..?

நாளை எனபது அதுவாக வரபோகிறது. இன்று இப்போதே என்பதே நிஜம். நிஜத்தை விழிப்புடன் வாழ்தால் நாளை என்பதும் இனிதே...!


இந்துமதத்தில் சாமிகள் எத்தனை எத்தனை...?

நம் நாட்டில் தான் படிப்பு ஒரு சாமி காசுக்கு ஒரு சாமி, சண்டைக்கு ஒரு சாமி, செக்ஸ்க்கு ஒரு சாமி இன்னும் பல துறைகளுக்கு ஒவ்வொரு சாமி இச்சாமிகளுடன் சேர்ந்த ஆசாமிகளும் அதிகம் உண்டு. இவ்வளவு சாமி இருந்தும்  மக்கள் பிச்சை எடுக்கும் நிலையில்தான்  இருக்காங்க.....


ஜெர்மனியின் ஆட்டத்தை ஒரு ஆக்டோபஸ்  தீர்மானித்ததா...?

ஆக்டோபாஸ், ஒரு ஆட்டத்தை தீர்மானிக்கிறது எனபது எவ்வளவு ஒரு கேவலமான நிகழ்வு இதெல்லாம் எல்லார் மனங்களுக்கு மயில் இறகால் வருடிவிடுற போலதான்....... முட்டாள் இருக்கும் வரை முட்டாளின் செயலும் தொடரும்...தோர்பபோமோ என்று நினைத்தால் வெற்றியடைய வழியை ஆராய்யவேண்டியதுதான்.... விளையாட்டில் முழுமை இருக்கும் போது வெற்றி, தோல்வி என்ற எண்ணமே தேவையில்லை...தேவையில்லை என்று நினைக்கும்போதே வெற்றி தானாய்வரும்....இதுதான் வெற்றியின் சூத்திரம். "தேடுதலை நிறுத்து தேவையானது கிடைக்கும்."


நம் மனதின் முகம் எப்படி..?

நம்  எதிர்பார்ப்புக்கு ஒன்று நடக்கவேணும் எனபது நம்முடைய மனதுக்கு ஒரு வேலையையாய் எப்போதும் இருக்கிறது. அவை நடக்கவில்லை என்றால் அதன் மேல் கோவம்தான். அது பொய்யாக இருக்குமோ என்ற பயம்வேற ...முதலில் அது உண்மை பொய் என்று எதற்கு நம்பவேண்டும். உன் செயலை நீ சிறப்புடன் செய்தால் வெற்றி என்ற சொல்லபடுவது தானாய் வரபோகிறது....
.


பல பேருடைய அறிவுரைகள் நமக்கு பொருந்துமா..?

நம் நண்பர்கள் பல அறிஞ்சர்களின் அறிவுரை, ஆலோசானைகள் எல்லாம் தாரளாமாக சொல்லுவாங்க ஆனால் அதை அவங்க பின்பற்றுனான்களா எனபது சந்தேகம்தான். ஆனா நாம் ரெண்டு காதையும் கொடுக்க தயராயுட்டோம். அறிவுரை சொல்ல அவங்க தயாராயுடுவாங்க...அறிவுரைகள், ஆலோசனைகள் எல்லாம் உங்கள் வாழ்கைக்கு பொருந்துமா என்று பாருங்க இல்லனா தூக்கி தூர எரிங்க பல அறிஞ்சர்களின் அறிவுரைகள் இப்பொழுது இருக்கிற நடைமுறை வாழ்கைக்கு பொருத்தம் இல்லாமல்தான் இருக்கிறது. உங்க அனுபவங்கள் மூலமே வாழ்கை அமையவேண்டும் யாருடைய அறிவுறுத்தல் பேரிலும் இருக்ககூடாது. அது பெத்த அப்பனா கூட இருந்தாலும் சரி....


என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:

 

(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழிஷ், உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.)

Wednesday, July 7, 2010

தள்ளாடும்.................. 'முதுமை'




சமுகம் சார்ந்த முதுமை:

தள்ளாடும் வயதிலே தவிக்கும் முதுமைகள் ஆதரவற்று அனாதைகளாகப்படுகின்றன. இந்த முதுமை அனாதைகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவோர் சமூகத்தில் அதிகம் பேர் இருந்தாலும் முதுமைகளின் அவலம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன. இதற்கு யார் காரணம்.? எவை காரணம்.? என்று நம் உள்ளம் ஒரு நாளேனும் ஆராய்ந்ததுண்டா... காரணம் கேட்டால் சமூகம் என்று கூறி அதன் மேல் பழிபோட்டு தப்பித்துகொள்கிறோம். நாம்தான் இந்த சமுகம். இதற்கு நாம் யாவரும் பொறுப்பாளிகள். முதுமையை எள்ளி நகையாடும் இந்த இளம் உறவுகளுக்கு தெரியாது நாமும் ஒரு நாள் முதுமை அடைவோம். ஒரு நாள் வீழ்வோம் என்று அறியாமல் இருக்கும். "இளம் விழுது காய்ந்த விழுதை பார்த்து சிரித்ததாம்" இதை பழமொழியாய் சொல்வார்கள். ஆனால் முதுமையை, உற்றஉறவுகளால் துரத்தியடிக்கும்போது இதை காண்பவர் நெஞ்சம் பதறும் "ஐயோ படுபாவி பெத்த அப்பன்னுகுட பார்காம பொண்டாடிகுட சேர்ந்து இப்படி திட்டறானே இவனுன்ங்களா உருபடுவான்களா" என்று அழாத குறையாய் வருத்தபடுவாங்க..அப்படி அவர்கள் வருத்தபடுவது வெளியில் உள்ள முதியவர்களுக்கு மட்டும்தான். தன் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு இது பொருந்தாது என்றே நினைப்பார்கள். இது எப்படி இருக்கும் என்றால்  மெகா சீரியல்கள் பார்க்கும் பல வீட்டு மாமியார்கள் தன் மருமகள் மேல் காரணம் இல்லாமல் ஒரு வித காழ்புணர்வு கொண்டிருப்பாள். அம்மருமகள் நல்லவளாக இருந்தாலும் ஒரு மாதிரி வெறுப்பது போலதான் இருக்கும். (மாமியார், மருமகள் உறவில் உள்ள உரசல், விரிசல் ஏற்படுவது எல்லாம் இப்படிதான். இது உண்மையும் கூட) அதே அந்த மாமியார் சிரியல்ல வர மாமியார், மருமகளை கொடுமைபடுத்துவதை பார்த்து ரொம்ப வருத்தபடுவார். இது போல மாமியார்களுக்கு சிரியல்லதான் வருத்தம் இருக்கும். நிஜ வாழ்கையில் இருக்காது. இந்த சமுக அவலங்களும் இப்படிதான் இருக்கின்றன. ஒரு கொடுமை நம்ம பக்கத்தில் நடந்தால் அது பெரிதாக தெரியாது. அதுவே பத்திரிகையில் வரும்போது ரொம்ப பதற்றம் அடைவோம். ஏனென்றால் நம்மில் பலபேருக்கு சுயநலமாய் இருந்தோம், வாழ்ந்தோம், செத்தோம் என்ற கணக்கில்தான் வாழ்க்கை ஓடிகொண்டு இருக்கிறது.


முதியோரை பாதுகாக்கும் நடைமுறைகள்:

தமிழகத்தில் முதியோரை பாதுகாக்கும் சட்டம் 2007 ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் மூலம் முதன்முதலில் சென்னையை சேர்ந்த ஒருவன் தன் தந்தையை கவனிக்காமல், புறக்கனித்ததால் கைது செய்யப்பட்டான். 2007 ஆண்டு வந்த சட்டம் 2010 -ம் ஆண்டுதான் தண்டனை சட்டமாக ஆனது. அதுவரைக்கும் யாருக்கும் அரசின் தெரியாத சட்டமாகத்தான் இருந்தது. பிள்ளைகளால் ஆதரவற்ற பல முதியவர்களுக்கு இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்று தெரிந்தும் பயனில்லை ஏனென்றால் பிள்ளை பாசம் உள்ள தகப்பன்கள் இங்கு அதிகம் அவர்கள் முதியோர் இல்லங்களை தான் நாடிசெல்கின்றனர். இதே தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சுற்றி உள்ள வட்டாரத்தில் நோய்வாய்ப்பட்ட, கவனிக்க முடியாத முதியவர்களை விஷஊசி போட்டு சாகடிக்கின்றனர். இவை இப்போதுதான் செய்தி ஊடகம் (Media) மூலம் வெளிவந்திருக்கின்றது. இதே போன்று இராமநாதபுரம் மாவட்டத்திலும் முதியவர்களை வேறுவிதமாக கொள்கிறார்கள். மிகவும் வயதானவர்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விட்டு இளநீர் தருகிறார்களாம் அப்படி கொடுத்தால் ஜன்னி வந்து இயற்கை மரணமாய் இருக்குமாம். இதை அங்கு "தலைக்ஊற்றுதல்"  என்று  சொல்வார்களாம். இப்படி தெரிந்தே முதியவர்கள் சாகடிக்கபடுகிறார்கள். தெரியாமல் இன்னும் எவ்வளவு கொடுமை நடக்கிறதோ...இவை எல்லாம் கேட்கும்போது, படிக்கும்போதும் சராசரி மனிதனின் மனம் கொலைவெறி பிடித்ததாகத்தான் இருக்கின்றது. கடுமையான சட்டங்கள் மூலம் இவைகளை களையவேண்டும். முதியோர் பாதுகாப்பு சட்டம் தீவரமாக நடைமுறைபடுத்தபட வேண்டும்.


பெற்றோர்களுக்கு, பிள்ளைகளால் உண்டாகும் கவனிப்பு:

முதியோர்களை கவனித்துகொள்வது பிள்ளைகளின் கடமை மற்றும்  பொறுப்பும்கூட ஆனால் இதில் பல பிள்ளைகளின் பொருளாதாரம் பெற்றோர்களை கவனிக்கபடாத சூழ்நிலையில்தான் இருக்கின்றது. மேலும் அவர்களுக்கு 40 வயதுமேல்தான் பெற்றோர்களை பாதுகாக்கும் நிலை உண்டாகுகிறது. அப்போது பிள்ளைகளுக்கே ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதி என்று பல வியாதிகளை கொண்டுள்ளனர். இதில் பெற்றோர்களை கவனிக்கும் பட்சத்தில் பொறுப்புகள் அதிகமாகிறது. இதில் பலபேர் நன்கு படித்துவிட்டு வெளிநாட்டில் வசிக்கிறார்கள். தங்களுடைய பெற்றோரை கவனிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். அந்த காலத்தில் மக்கள் அதிக குழந்தைகளை பெற்றார்கள் ஒரு பிள்ளை பார்கவில்லை என்றால் இன்னொரு பிள்ளை வீட்டில் பெற்றோர்கள் இருக்கலாம். ஆனால் 30 - 40 வருடங்களில் 80% மக்களுக்கு 2 குழந்தைகளே போதும் என்ற நிலை வந்துவிட்டது இது வரவேர்ககுடியதுதான் அதேவேளையில் முதியோர்களையும் ஒதுக்கமுடியாது, இதில் அவர்கள் நலன் முக்கியமாக இருக்கின்றது.  இதுபோன்ற பிரச்சனைகளை மக்களால் விவாதத்திற்கு  எடுத்துகொள்ளபடவேண்டும். அப்போது இதில் பல தீர்வுகள் உண்டாகும் என்றே நினைக்கிறேன்.


முதுமையின் மறுபக்கம்:


முதுமையும், சாவும் வாழ்வின் ஒரு பகுதியாகவே இணைந்து வருகிறது. மனிதனுக்கு 60 வயது மேல் முதுமை தொடர்வதாக நினைக்கவைக்கபடுகிறது.  அது அவர்களுக்கு உண்டாகும் மரண பயம், ஆதரவற்ற நிலை, மறதியின்மையை ஏற்படுத்துகிறது. இதில் தானாகவே சிறுநீர் போகுதல், மலம் கழித்தல் பெண்களுக்கு கருப்பை கிழ்யிருங்குதல், எலும்பு தேய்மானம், புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் ரத்த அழுத்தம், மற்றும் உணவு உட்கொள்ளாமை இப்பிரச்சனைகள் யாவும் முதுமையில் பல பேருக்கு தொடர்வதாக இருக்கின்றன. இப்போது எல்லோருக்கும் வாழ்நாள் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மனிதர்கள் எல்லோரும் 125 வயதுமேல் வாழ்ந்ததாக இல்லை. உலகத்தில் உள்ள மக்கள் தொகை 1999 வருடம் வரை 6 பில்லியனாக இருந்தது. இப்போது அதை தாண்டி செல்கிறது. இவை 2020 ஆண்டு 7.6 பில்லியன் தாண்டும் என்று மக்கள்தொகை புள்ளியல் ஆய்வு கணித்திருக்கின்றது. இவற்றில் கால்பாகம் (23%) 60 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களாக இருப்பார்கள். அப்போது முதியவர்கள் வாழ்வு இன்னும் கேள்விகுறியாக்கபடும்.    
       

பிரபலமான ஆதரவற்ற முதியவர்கள்:

இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையாளராக இருந்த டி.என்.சேஷன் அவர்கள் பெற்ற பிள்ளைகள் எதுவும் இல்லாமல் தன் உறவின் பாதுகாப்பில் நம்பிக்கை இல்லாமல் தன் மனைவியுடன் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளார். மற்றொருவர் 1973 ஆண்டு சாகித்ய ஆகாடமி விருது பெற்ற பெண்மணி ராஜம் கிருஷ்ணன். இவர் தமிழகத்தின் மிகசிறந்த எழுத்தாளர் இடதுசாரி சிந்தனை உள்ளவர். 1950 ஆண்டு நியுயார்க் ஹெரால்ட் டிரிபியுன் சர்வதேச விருது பெற்ற தமிழக எழுத்தாளர் இவராகத்தான் இருக்கும்.  உப்பு தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து  இவர் எழுதிய "வேருக்கு நீர்தான்" என்ற புத்தகத்திற்காக சாகித்ய ஆகாடமி விருது கிடைத்தது. அவ்வாறு பலவிருதுகள் பெற்ற பெண்மணி உறவுகளால் ஏமாற்றபட்டு அனாதை விடுதியில் அடைக்கலமானார்.


முதியோர் புனர்வாழ்வு:

வளர்ந்த நாடுகளில் முதியவர்கள் பொறுப்பான வேளைகளில் இருப்பார்கள். ஆலோசனை, அறிவுரை சொல்பவர்களாக இருப்பார்கள். ஆனால் இங்கு 60 வயது கடந்தால் சமுகத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒதுக்கப்படும்  நிலையில்தான் இருக்கிறார்கள். இவை மக்களால் விவாதம் பண்ணவேண்டிய பிரச்சனைகளையும் உள்ளடக்கப்பட்டு இருக்கிறது. முதியவர்களுக்கு சுகாதாரம், மருத்துவ வசதி, பாதுகாப்பு இருப்பிடம் இது போன்ற தேவைகளை ஆளும் அரசுதான் கவனத்தில் கொள்ளவேண்டும், நிறைவேற்றியும் தரவேண்டும். பின் மக்களுக்கும்  உறவுகளின் முதுமை எனபது என்றும்  பாரமாக இல்லாமல் இருக்கவேண்டும். இதை நல்ல உள்ளங்களும்  ஏற்பார்கள்...என்றே நினைக்கிறேன்.
  
  

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்:

(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை  தமிழிஷ், உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல்  குத்தவும்.)

Monday, July 5, 2010

உடலை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வோம்...

                           
உடலும், மனமும்:
  
நம்மில் பலபேர் உடற்பயிற்சி செய்யாமல் உடல் நல்லா இருக்கும்னு நினைக்கிறோம். இதில் பல பேருக்கு உடலை பற்றிய நினைப்பே இருப்பதில்லை. அவ்வுடலுக்கு நோயவாய்ப்படும் போதுதான் நமக்கும் ஒரு உடம்பு  இருக்கிறது என்ற நினைப்புவரும் அதுவரைக்கும் மனத்தின் கட்டுபாட்டில்தான் முழு உடலும் இயங்கும். மனது, நில் என்றால் நிற்க்கும் உட்காரு என்றால் உட்காரும். நம் உடல் நோயவாய்ப்படும் போது மட்டும் மனம் சொல்வதை கேட்பதில்லை அப்போது மனமும், உடலுடன் கூடசேர்ந்தே அழும். ஏனென்றால் மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தது. உடல் கெட்டால் மனமும் கெடும் ஆனால் இதில் அதிக நேரம் மனம்தான் கெட்டு உடலையும் கெடுக்கிறது. இவற்றில்  மனம் ஆரோக்கியமாக இருந்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மனமும், உடலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் செய்யும் செயலும் சிறப்பாக இருக்கும். ஆதலால் முழு ஆரோக்கியத்திற்க்கு முதலில் மனத்தையும், உடலையும் புரிந்துகொள்ளவேண்டும்        

உடலைபற்றிய சிந்தனை: 

உடலை பற்றி நினைப்பு இல்லாதவர்கள் ஒருமுறை அரசு பொது மருத்துவமனைக்கு சென்றுவந்தால் தெரியும். நோயாளிகள் எப்படி இருக்கிறார்கள் அவர்கள் நோய் எப்படி இருக்கிறது என்று கண்ணாலே பார்த்துவிட்டு முடிந்தால் அவர்களிடம் பேசிவிட்டும் வரலாம் அது அவர்களுக்கு ஒரு ஆறுதலாகவும் இருக்கும்.  பின் மருத்துவமனையைவிட்டு வெளி வரும்போது பிணவறை பக்கமும் கொஞ்சம் போயிட்டுவரலாம் ஏனென்றால் நமக்கு வாழ்வின் இன்னொரு மறுபக்கம் நிச்சயம் தெரியவரும்..! அப்புறம் என்ன  நாம் ஆரோக்கியம் வேண்டாம் என்றாலும் நம் மனசு பயத்துடன் ஆரோக்கியத்தைதான் நாடும்.

உடலை பாதுகாக்கும் வழிமுறைகள்:

நாம் தினமும் பயன்படுத்தும் ஆறாவது விரலான கைப்பேசிக்கு(Mobile Phone) முழு இயங்கு நிலையில்(Charge) இயங்கவைக்கிறோம் ஆனால் நூறு வருடம் வரை வாழக்கூடிய  நம் உடலை ஏன் பாதுகாக்க மறக்கிறோம். நம் உடலை பாதுகாக்க தினமும் கொஞ்சம் நேரம் உடற்பயற்சி செய்ய ஒதுக்கலாமே...! ஏன் பணம், பணம் என்று அதன் பின்னாலே ஓடுகிறோம். நம் வாழ்விற்க்கு பணம் தேவைதான் அதைவிட அந்தவாழ்வு வாழ இந்த உடல் தேவை இல்லையா...! இதை ஏன் நாம் மறந்துவிடுகிறோம். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். நமக்கு உடலை காக்கவேண்டும் என்று நினைத்தால்  உடற்பயிற்சி  கூடத்திற்கு(Gym) செல்லலாம், நடைபயற்சி(Walking) போகலாம், இவைகள் முடியவில்லை என்றால் வீட்டின் மொட்டை மாடியில் போயும் நமக்கு தெரிந்த உடற்பயற்சியை செய்யலாம். நீ ஏன் இப்படி தப்பா செய்றா.? என்று யாரும் கேட்க மாட்டார்கள். நமக்கு தெரிந்தை செய்யலாம். ஆனால் முதலில் செய்ய ஆரம்பிக்க வேண்டும். இதில் மொட்டை மாடி இல்லாதவர்கள் வாடகை வீட்டில் உள்ளவர்கள். உடற்பயிற்சிக்காக காலையில் நேரம் ஒதுக்க முடியாத நிலையில் உள்ளவர்கள். தாங்கள் குடியிருக்கும் வீட்டிலே செய்யலாம். வெறும் தரையில் தண்டால் அடிக்கலாம், உட்கார்ந்து எழும் பயற்சி செய்யலாம். குதிக்கலாம், கைய கால முறுக்கலாம், தலைய திருப்பலாம் பரனை(lapt) என்று சொல்ற அதில் கையைவைத்து தொங்கலாம் ஏதோ ஒன்று செய்யலாம். அப்படியெல்லாம் செய்தால் கைபேசிக்கு முழு மின்இயக்கம்(charge) கொடுத்து போல உடம்பு முழு இயங்கு நிலையில்  இருக்கும். அப்புறம் என்ன நம்ம சாலமன் பாப்பையா சொன்னதுபோல் 'இந்த நாள் இனிய நாள்தான்'.      

உடலுக்கு தேவையானவை:

இந்த உடல்  பல கோடிகணக்கான செல்கள் மூலம் கட்டமைக்கப்பட்டு உள்ளது. அதில் தினம் புதிய புதிய  செல்கள் உருவாவதும், வீ ழ்வதுமாக உள்ளது. அந்த செல்கள் உறுதியினை பொறுத்தே உடல் இயங்குகிறது. அவ்வாறு செயல்படும் உடல் நல்ல நிலையிலே இருக்கவேண்டும். அதற்கு எட்டு மணிநேர தூக்கம் இரவில் மட்டும் இருக்கவேண்டும்.  பகல் தூக்கம் 10 மணிநேரம் தூங்கினாலும் உடல் வெப்பநிலை குறையாது ஏனென்றால் பகல் வெப்பமானது உடலுக்கு வெப்பமாகத்தான் இருக்கும். இரவில் சந்திரனின் குளுமையானது உடல் வெப்பநிலையை குறைக்கும் நல்ல தூக்கத்தையும்  தரும்,   நன்கு  காய்ச்சி ஆறவைத்த சுடுதண்ணீர் தினமும் 4 லிட்டர் மேல் அருந்தவேண்டும். பின் உடலுக்கு தேவையான உடற்பயற்சி, சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடுவது.  இவைகளை தினமும் நீங்கள் செயல்படுத்தினால் வாழ்க்கையில் உங்களுக்கு மனக்கவலை இருந்தாலும் நோயுடன் சேர்ந்து ஓடிவிடும்.  இதனால் உடற்பயிற்சியை கட்டாயமாக்குங்கள். உங்கள் உடலுக்கு ஏற்ற ஊட்ட சக்துள்ள உணவுகள் வாங்கி சாப்பிடுங்கள். ஆரோக்கியமான உடலை காணுங்கள். ஏனென்றால் இந்த உடல் பிரபஞ்ச சக்தி (இறைவன்) உறைவிடம். அண்டத்தில் உள்ளதே பிண்டம் இந்த பிண்டத்தை பாதுகாப்பது நம் கடமை.


சுத்தமான உணவு உயிரை காக்கும்:

உண்ணும் உணவில் புரதச்சத்து, கொழுப்புசத்து, உயிர்சத்து, உப்புசத்து ஆகியவை இருந்தால்தான் உடல் வளர்ச்சி முழுமையாக இருக்கும்.

புரதச்சத்து: உடலை வளர்க்குடியது. இது பால், பருப்பு, மீன், முட்டை, மாமிசம், பாலாடைக்கட்டி , எண்ணெய் வித்துகள், தானியங்கள், சோயா பீன்ஸ் போன்றவற்றில் உள்ளது.

மாவுசத்து மற்றும் கொழுப்பு சத்து: நம் உடலுக்கு ஆற்றலை கொடுக்ககுடியது இவை தானிய வகைகள், நெய், எண்ணெய், சர்க்கரை, வெண்ணை, முட்டையின் மஞ்சள் கரு, மீன், இறால், எண்ணெய் வித்துகள், உணவு தானியங்கள், கிழங்கு வகைகள், வெள்ளம்  போன்றவற்றில்  உள்ளது.

உயிர்சத்துகள்: இச்சத்து நம் உடலை பாதுகாக்ககுடியது இவை பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றில் உள்ளது.
இச்சத்துகள் உடன் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, அயோடின் சத்து வைட்டமின்A, B, C ...., வகைகளான சத்துகளும் வேண்டும். இந்த சத்துகள் எல்லாமே மேலே சொன்ன உணவிலும் உள்ளது.

இதில் எனக்கு தெரிந்த ஆரோக்கிய உணவு குறிப்புகளை சொல்கிறேன்.  இவைகளை முடிந்தவரைக்கும் உண்டு நோய இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வது உங்கள் எண்ணத்தை  பொறுத்தே இருக்கிறது.  ஏனென்றால் "எண்ணம்போல் வாழ்வு" என்று விவேகானந்தரே சொல்லிருக்கிறார். இதில் எண்ணம் சார்ந்த மனத்திற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. வாழ்க வளமுடன்...!    

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!



 என்றும் நட்புடன்:       


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை  தமிழிஷ், உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல்  குத்தவும்.)

Friday, July 2, 2010

போகத்தில் யோகத்தை காணலாம் என்றார்கள். இதை எவ்வாறு சாத்திய படுத்துவது.....இவற்றில் காமம் எனபது மக்களால் தவறாகவே பொருள் கொள்ளபடுகிறது இது எதனால்....


ஆதிகாலம் முதல் இன்றுவரை ஆண்களுக்கும், பெண்களுக்கும் காமம் ஒரு புரிதல் இல்லாமலே நடைபெறுகிறது திருவள்ளுவர் தனது 1330 குறளாக காமத்து குறளாக சொல்லி முடிக்கின்றார். "ஊடத்தல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முழங்க பேரின்" - ஊடல் நடப்பதற்கு முன் தழுவல் இருக்கவேண்டும் அதுவே இருவரையும் உச்சநிலை வரைக்கும் கொண்டுசெல்லும் என்கிறார்.

ஆண்கள் முன்று நிமிடத்திற்கு ஒரு முறை காமத்தைபற்றி சிந்திக்கிறார்கள். ஆனால் பெண்கள்  ஒரு நாளைக்கு ஏழு முறை காமத்தை பற்றி சிந்திப்பதைவிட இதர பொருட்கள் வாங்க (Shopping) போவதைத்தான் அதிகமாக சிந்திக்கிறார்கள் எனபது ஒரு ஆய்வில் கூறப்பட்டுளது. ஆண்களுக்கு காமம் இச்சை ஊட்டும் படங்களை பார்த்தாலே கிளர்ச்சி அடைவான் ஆனால் பெண்கள் காம பேச்சுகள் கேட்டாலே அதன் மூலம் கிளர்ட்ச்சி அடைவார்கள் என்று அந்த ஆய்வு தெறிவிக்கின்றது. இவையே ஆணும் பெண்ணும் உடலுறவு நடைபெறும்போது ஏற்படும் உள்ளுனர்வு நிலையில் உச்ச நிலை அடையும் போது எண்ணம் மறைந்துபோய்விடுகிறது மனம் வெறுமையாகிறது சில வினாடிகள் காலம் நின்றுபோகிறது விருப்பு, வெறுப்பு அற்ற நிலை ஏற்படுகிறது. சில விநாடிகள் காலம் நிற்கிறது இதை அனுபவம் கண்டவர்கள் உணர்வார்கள். ஒருமுறை இயேசுவிடம் குடியானவன் ஒருவன் கேட்கிறான். "உங்கள் இராட்சியத்தில் என்ன கிடைக்கும்" என்று. இயேசு கூறுகிறார். "என் ராச்சியத்தில் காலங்கள மறைந்துவிடும்" என்கிறார். அவர் சொன்ன இராட்சியம் இன்று கிறிஸ்துவர்களால் வேறுமாதிரி திரித்து கொண்டு செல்லபடுகிறது. காலங்களை மறக்கடிக்க செய்யும் இந்த காமம், எவ்வளவு பெரிய தத்துவாதி, அறிஞன், பேராற்றல் உடையவர்களையும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நான் படித்த அரிஸ்டாடிலின் காமம் பற்றிய குட்டி கதை:

அலெக்சேந்தர் அரிஸ்டாடிலின் மாணவன் என்பது தெரிந்திருக்கும். அலெக்சேந்தர் பிலிஸ் எனும் நாட்டியக்காரியுடன் நெருக்கமாக இருந்த பொழுது, காமத்தின் தீமையை அரிஸ்டாடில் தன் மாணவனுக்கு விளக்கிச் சொல்லி பிலிஸை விட்டு விலகச் சொன்னாராம். அலெக்சேந்தரும் "காமம் என் குறிக்கோள்களை அடைய முடியாமல் செய்து விடும்; இனி நெருக்கமாக இருக்க முடியாது" என்று பிலிஸிடம் சொல்லி விலகினானாம். தன் ஆசிரியரான அரிஸ்டாடிலே சொல்லியிருப்பதால் இனி நெருக்கமாக இருக்க முடியாது என்றானாம். மனமுடைந்த பிலிஸ் பழி வாங்கத் தீர்மானித்தாளாம். அரிஸ்டாடில் தனிமையில் இருக்கும் பொழுதுகளில் தினமும் அவர் முன் சென்று நிர்வாணமாகவும் அரை குறை ஆடையுடனும் பல் வேறு நிலைகளில் ஆடியும் பாடியும் அவரைக் கவர முயற்சித்தாளாம். முதலில் பிலிஸைப் பொருட்டாக எண்ணாத அரிஸ்டாடில் நாளடைவில் தளர்ந்து போய், பிலிஸை நாடினாராம். தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு உடைகளைக் களைந்து பிலிஸின் முன்னே சென்று மன்றாடினாராம். அரிஸ்டாடிலின் உடலழகைக் கண்ட பிலிஸும் அவரை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி, ஒரு நிபந்தனை விதித்தாளாம். இருவருமே நிர்வாணமாக இருக்கையில், அரிஸ்டாடில் பிலிஸை தன் முதுகில் ஏற்றிக்கொண்டு அலெக்சேந்தரின் தோட்டத்தை வலம் வர வேண்டும் என்பதே நிபந்தனை. அரிஸ்டாடில் தயங்காமல் உடனே அவளுடைய உடைகளைக் களையச் சொல்லி, பிலிஸை முதுகில் ஏற்றிச் சுமந்து தோட்டத்தை வலம் வந்தாராம். பிலிஸ் கேட்டுக் கொண்டிருந்தபடி அலெக்சேந்தர் அங்கே வந்து நின்றதை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆடை துறந்தது மட்டுமில்லாமல், தன்னைத் துறக்கச் சொன்ன அதே பெண்ணை உடையில்லாது உப்பு மூட்டைத் தூக்கி வந்த ஆசிரியரைக் கண்டானாம்! அரிஸ்டாடிலுக்கு வெட்கமாகி விட்டதாம். ஒரு கணம் யோசித்த அலெக்சேந்தர், "நீங்கள் சொன்னது சரிதான் குருவே. காமம் படுத்தும் பாட்டை இப்போது நன்றாகப் புரிந்து கொண்டேன்" என்று பெருந்தன்மையுடன் அரிஸ்டாடிலிடம் சொன்னாலும் அன்றிலிருந்து அவரின் மாணவனாகப் பழகுவதை நிறுத்திக் கொண்டானாம்.

சொல்லுதல் யாருக்கும் எளிவனாம் ஆனால் சொல்லிவண்ணம் செயல் எனபது வெறும் தண்ணீரில் எழுதப்பட்ட வாக்கியம்தான். காமத்தை அடக்கு பிரமட்சர்யம் என்ற காம கோட்பாடுகள் எல்லாம் மதங்கள் சார்ந்தே வந்துள்ளன இதில் எல்லா மதங்களும் உட்பட்டே உள்ளது. காமத்திற்கு எதிரான நிலைதான் இன்றுவரை தொடர்கிறது.....

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!



என்றும் நட்புடன்: