Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Saturday, June 18, 2011

அல்லோலபடும் சமச்சீர் கல்வி...


தமிழகத்தில் இப்போது நடக்கும் சமச்சீர் நாடகங்களை பார்த்தால் கேளிக்குரியதாகத்தான் இருக்கிறது அடிபடையில் தமிழக ஆட்சியில் இருக்கும் அம்மையார் எங்கே படித்தார் என்பதை நாம் எல்லோரும் மறந்துவிட்டோம் என்று நினைக்கிறோம். அம்மா ""சர்ச் பார்க் கான்வென்ட்" என்ற தனியார் பள்ளியில்தான் படித்தார். அப்பள்ளியில் படித்தவருக்கு தனியார் பள்ளி பாசம்தான் முழுவதும் இருக்கும். இதுவும் ஒருவித சாதி உணர்வுபோலத்தான். அதுவும் அம்மையாரின் சாதி எவ்வகை சாதி என்று உலகம் அறிந்தது அல்ல அப்படி இருக்கும் போது சமசீரை முடக்கும் வேலைதான் நடக்கும். இவர் கூட்டனி தோழர் விஜயராஜ் என்கிற விஜ்யகாந்த் சமசீர் கல்வியை பற்றி நல்ல தரமான கருத்தை உதித்தார். அது என்னவென்றால் "சமச்சீர் எனபது தனியார் பள்ளிகளில் என்ன என்ன வசதிகள் எல்லாம் கிடைக்கிறதோ அதுவெல்லாம் அரசு பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று கூவினார் அவர் கூவினது ஒருவிதத்தில் ஏற்றுகொண்டாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது. வசதி வாய்ப்பு எனபது அவரவர் பொருளாதார அடிப்படையில் நிர்ணயக்கபடுவது ஆனால் அறிவில் ஏற்ற தாழ்வு இருக்கும்போதுதான் ஒருவரிடம் உயர்வு தாழ்வு ஏற்படுகிறது. உதாரணமாக தனியார் பள்ளியில் படிக்கும் மாணவனும் அரசு பள்ளியில் படித்த மாணவனும் ஒரு நேர்முக தேர்வுக்கு போகிறார்கள் என்றால் அங்கு அறிவு அடிபடையில்தான் வேலை கிடைக்கிறது. அங்குதான் அரசு பள்ளி மாணவனின் தாழ்வு உணர்வு ஏற்படுகிறது. இது எனக்கும் ஏற்பட்ட உணர்வுதான்.

அறிவில் ஆரம்பத்தில் இருந்தே கிடைக்கிற அறிவு ஒன்று இருக்கிறது. தன் சுய முயற்சியினால் ஏற்படுகிற அறிவு ஒன்று இருக்கிறது. சுயமுயற்சி அறிவு இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் வருவது அப்தூல் கலாமுக்கு ஏற்பட்ட அறிவும் இப்படித்தான் ஆனால் அடிப்படை அறிவு எல்லா மாணவர்களுக்கு கட்டாயம் கிடைக்கவேண்டும் என்பதுதான் நம் எல்லோர் எண்ணம். வெள்ளையன் நம்மை ஆட்சி செய்ய வரும்போது வாணிப நோக்கத்துடன்தான் வந்தான் பின்பு மெல்ல மெல்ல உள்நாட்டு அரசியலில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினான் அதுபோலத்தான் உள்ளது இப்போது உள்ள தனியார் பள்ளிகளின் லட்சணங்களும் முதலில் இவர்கள் சொன்னது அரசால் தரமான கல்வியை கொடுக்க முடியவில்லை நாங்கள் அதை கொடுப்போம் என்றார்கள் பின்பு மெல்ல மெல்ல அதிகபடியான கட்டணத்தை நிர்ணயத்தார்கள் அதன் பின் சங்கம் ஏற்படுத்தினார்கள். அரசு கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க பேச்சுவார்த்தைக்கு நடத்தினால் அதை புறக்கணிக்கும் நிலைக்கு வந்தார்கள். வெள்ளையனின் அடிப்படை வாணிப கொள்கையும், தனியார் பள்ளிகளின் கொல்லைகாரர்களின் கொள்கைகளும் சுரண்டல் அடிப்படையில்தான் இருக்கிறது. ஆனால் இவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள் இவர்களின் சுரண்டல் முடிவு மக்களால் அடித்து துரத்தும் நிலையில்தான் இருக்கும்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தன் மகளை ஊராட்சி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்திருக்கிறார். இவரையே எல்லோரும் முன்மாதிரியாய் எடுத்து அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளிலே சேர்க்கவேண்டும். அப்போதுதான் தனியார் பள்ளிகளின் திமீர் தனம் அடக்கப்படும்.

அறிவில் உயர்வு தாழ்வு இல்லாமல் சமசீரான சமத்துவம் உண்டாகவேண்டும் என்பதுதான் நல்ல உள்ளங்களில் விருப்பமும் அது போராட்டம் என்னும் ஆயுதத்தால் கட்டாயம் நிறைவேறும்.

தோழமைக்கு நன்றி...


என்றும் நட்புடன்